பழனி – திருச்செந்தூர் இடையே புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று (பிப்ரவரி 16) துவக்கி வைக்கிறார்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி–திருச்செந்தூர் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படுகிறது. அறுபடை முருகன் கோவில்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் இந்த ரயிலை, பழனியில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதேபோல் திருச்செந்தூரில் இருந்தும் பழனிக்கு நாளை காலை 10.20 மணிக்கு ரயில் போக்குவரத்து துவங்குகிறது.
துவக்க விழாவைத் தொடர்ந்து 17ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தினசரி நடைபெற உள்ளது. இந்த ரயில் பழனியில் இருந்து தினமும் காலை 07.20 மணிக்கு புறப்படுகிறது. மதுரைக்கு காலை 10.15 மணிக்கு வந்து 5 நிமிடம் நிற்கிறது. 10.20 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு திருநெல்வேலிக்கும், 04.00 மணிக்கு திருச்செந்தூருக்கும் சென்றடைகிறது.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10.00 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. திருநெல்வேலிக்கு 11.20 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 04.10 மணிக்கு வருகிறது. 5 நிமிடங்கள் நின்று விட்டு 04.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 07.20 மணிக்கு பழனி சென்றடைகிறது.
மேற்கண்ட தகவலை மதுரை மண்டல ரயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி, முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[16 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33187
அஸ்ஸலாமு அழைக்கும் ,
காங்கிரெஸ் அரசு ஆட்சியை விட்டு வீட்டுக்கு போகும் முன் இந்த பழனி – திருச்செந்தூர் இடையே தினசரி ரயிலை விட்டு விட்டு போறார்கள் விட்டுட்டு போகட்டும் .
இந்த காங்கிரஸ் ஆட்சியும் , தமிழகத்தில் முந்தைய தி . மு . க ஆட்சியும் திட்டங்களின் அடிபடைல நல்ல ஆட்சிகளைதான் செய்தன , நிர்வாகத்தில் மற்று அதன் பிரதிநிதிகள் செய்த ஊழல் , முறையற்ற செயல்பாடுகள் , சில அராஜக போக்கு போன்றவை திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியை விட்டு அகற்றியது அந்த நிலைதான் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு நடக்க இருகிறது .
காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து 115 - 135 வரைதான் வெல்ல முடியும் , பிஜேபி + கூட்டணி 150 - 170 , மற்ற மாநில கட்சிகள் 200 + சீட்டுகளை பிடிக்கும் ஆம் ஆத்மி பிரிக்கும் ஓடுகள் பிஜேபி க்கு சாதகமாக அதிக வாய்புகள் உள்ளது .
டெல்லி சட்டசபையை பிஜேபி பிடிக்க வாய்புகள் வந்து விட்டது .
நம் மக்கள் சரியாக முடிவுகளை எடுக்கணும் நம்முடைய சிதறாத அது சமையம் தொகுதிகளின் சூழ்நிலைகளின் அடிப்படையை உணர்ந்து அந்தந்த தொகுதிகளில் நாம் யாரை ஆதரிக்கணும் என்பதில் தெளிவாக இருக்கணும் .
தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் அம்மாவையும் , பிஜேபி யையும் நாம் இந்த முறை ஒரு இடத்தில்தான் வைத்து பார்கனும் பிஜேபி யும் அம்மாவும் போடும் இடங்களில் தி . மு . க விற்கு சாதகமாக அமையும் மற்ற இடங்களில் பிஜேபி மற்றும் அம்மா போடி இடாத இடங்களில் அம்மா கட்சி மற்றும் பிஜேபி ஓடுகள் முறையாக அம்மாவிற்கும் பிஜேபி க்கும் விழும் நம் மக்கள் இந்த விசியத்தில் கவனமாக இருக்கணும் அம்மா வின் சீட்டுகள் கடைசியில் பிஜேபி க்கு சாதகமாகதான் அமையும் .
2. அட அட புல்லரிக்குது..! ஓட்டு வாங்க என்ன என்ன தந்திரம்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 February 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33190
ஆட்சி முடியும் இந்த இரண்டு மூன்று மாதத்தில் என்ன அவசரம் அட அட புல்லரிக்குது..! ஓட்டு வாங்க என்ன என்ன தந்திரம்..! அட அட சூப்பர்.. இன்னும் என்ன என்ன இருக்குது அனைத்தையும் கடைசி நேரத்திலாவது செய்து முடியுங்கள்... அன்போடு உங்களின் திட்டங்கள் அல்ல செய்யல் நடைமுறைகளை வரவேற்கிறோம்..
3. சென்ற வருட ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த thittam posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[17 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33192
இப்போது விடப்பட்டிருக்கும் புதிய ரயிலானது, முந்தாநாள் அறிவித்து நேற்று விடப்பட்ட ரயில் அல்ல. சென்ற வருட ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த ரயில்தான். ஆனால் என்ன, ஆட்சி காலத்தின் கடைசியில் அமுல்படுத்தி உள்ளனர்.
4. திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால் posted byV D SADAK THAMBY (Kayakpatnam)[18 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33212
புதிய ரயில் அறிவிப்பு மக்களுக்கு நன்மை பயக்கும். ரயில் விட்ட காரணம் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்போது காயல்பட்டணம் - திருநெல்வேலி இடையே 6 ரயில்களும் மதுரைக்கு 2 நேரடி ரயில்களும் , வாஞ்சிமனியாட்சிக்கு 3 ரயில்களும் உள்ளன.
திருநெல்வேலி ,வாஞ்சி மனியாட்சியில் நிறைய இணைப்பு ரயில்களும் உள்ளன .
மற்றுமொரு கூடுதல் இரயிலும் பட்ஜெட் அறிவிப்பில் உள்ளது .
.திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால் , இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக துரிதமாக பல ஊர்களுக்கு செல்ல முடியும். ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross