சென்னையில் எட்டு பேர் கொண்டுள்ள அணிகளுக்கான கால்பந்து லீக் போட்டிகள் (MFC 8 vs 8 Challenger League), மஹாகனி கால்பந்து சங்கம் ஏற்பாட்டில் பிப்ரவரி 2 அன்று துவங்கின.
வார
இறுதி நாட்களில், இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ள இப்போட்டிகளில், 9 அணிகள்
போட்டியிடுகின்றன. 8 சுற்றுப் போட்டிகளின் முடிவில் தர வரிசையில் முதல் இடத்தை பெறும் அணியே வெற்றிவாகை சூடும்.
இப்போட்டிகளில் - சென்னை வாழ் காயலர்கள் அணி ஒன்றும், KAYAL FC என்ற பெயரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு - முஹம்மது காதிர் தலைவராக உள்ளார். இதர வீரர்கள் வருமாறு:
முஹம்மத் காதிர் (தலைவர்), முஹம்மத் பாசி, பிஸ்தாமி பாசில், சலாஹுதீன், யாசர் அரபாத், முஹம்மத் பயாஸ், அப்துல் காதர், அப்துல்
பாசில், ஹாரூன் மீரான், மூஸல் கலிம், கிதர் பைசல், முஹம்மத் சதக், நெய்னா.
இந்த அணி - தனது முதல் போட்டியில் SANDSHARKS B அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிப்ரவரி 9 அன்று நடந்த இரண்டாவது போட்டியிலும், KAYAL FC அணி, 4-0 என்ற கோல் கணக்கில் MAHOGANY FC B அணியை வென்றது. காயல் FC அணிக்காக, கிதுறு பைசல் 2 கோலும், முஹம்மத் காதிர் 1 கோலும், முஹம்மத் பாயாஸ் 1 கோலும்
அடித்தனர்.
இரண்டாம் போட்டியில் விளையாடிய காயல் வீரர்கள்:
முஹம்மத் காதிர் (தலைவர்), முஹம்மத் பாசி, பிஸ்தாமி பாசில், சலாஹுதீன், யாசர் அரபாத், முஹம்மத் பயாஸ், அப்துல் காதர், அப்துல்
பாசில், ஹாரூன் மீரான், கிதர் பைசல், முஹம்மத் சதக்
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்று காயல் அணி - தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இப்போட்டிகள் சம்பந்தமான இணையதளங்கள்:
http://www.haxball.gr/league/view_embedded/126477
http://www.mahoganyfc.in/
https://www.facebook.com/pages/Mahogany-Football-Club/193118260733933
தகவல் மற்றும் புகைப்படங்கள்::
கே.ஐ. ஹாரூன் மீரான்,
சென்னை.
|