கேரள மாநிலம் தலச்சேரி நகரில் மலபார் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்களின் பங்கேற்புடன் முதன்முறையாக நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 12 ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலச்சேரி ஜனாப் சாதிக் (எட்டு கடை)அவர்கள் கடைக்கு பின்னால் அமைந்துள்ள கேரள அரசு துவக்க பள்ளிகூடத்தில் வைத்து இம்மாதம் 02ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.30 மணிக்குத் துவங்கி, மாலை 05.00மணி வரை நடைபெற்றது.
கோழிக்கோடு - தலச்சேரி புறப்பாடு:
முன்னதாக திட்டமிட்டப்படி கோழிக்கோடில் இருந்து தலச்சேரி செல்வதற்காக சுமார் 50 உறுப்பினர்கள் கொண்ட குழு கோழிக்கோடு இரயில் நிலையத்தில் காலை 9.15 மணிக்கு ஒன்றாக சங்கமித்து, காலை 9.50 மணி இரயிலில் தலச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 11.30 மணிக்கு அனைவரும் தலச்சேரி இரயில் நிலையத்தை சென்றடைந்தனர்.பின்னர் பகல் 12.00 மணிக்கு அனைவரும் ஒன்றாக நிகழ்விடம் வந்தடைந்தனர்.மேலும் வடகர , தலச்சேரி ,கண்ணூர் ,தளிப்பரம்ப ,பையனூர் மற்றும் இருட்டி ஆகிய ஊர்களில் உள்ள உறுப்பினர்கள் முன்னதாகவே நிகழ்விடத்தில் சங்கமித்திருந்தனர்.
முன்னேற்பாடுகள்:
துவக்கமாக,மதியம் 12.30 மணிக்கு, உணவு தயாரிப்புக் குழு புகழ் பெற்ற தலச்சேரி தம் பிரியாணி தயார் செய்து கூட்ட நிகழ்விடத்துக்கு கொண்டு வந்தனர். மதியம் 12.45 மணிக்கு லுஹர் தொழுகை அருகிலுள்ள பள்ளிவாசலில் கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
தொழுகை நிறைவுற்றவுடன் அனைவருக்கும் புகழ் பெற்ற தலச்சேரி தம் பிரியாணி மதியவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
மதியம் 01.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. பொதுக்குழு கூட்டத்திற்கு, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஜனாப் உதுமான் லிம்ரா, துணைச் செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர், பொதுக்குழு உறுப்பினர்களான ஜனாப் சாதிக் (எட்டு கடை), ஜனாப் அரபி ஐதுரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் அஸ்வாக் அவர்களுடைய மகள் ஜைனப் ருஸ்தா இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் மன்ற பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சாதிக் (எட்டு கடை) அவர்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார். முதல் முறையாக தலச்சேரியில் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்துகொண்டிருப்பதை கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய அவர், மேலும் இதுபோன்ற மலபார் காயல் நல மன்றத்தின் நிகழ்சிகள் தலச்சேரியில் நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியேடு வாசித்தல்:
செயற்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜ் அவர்கள் கடந்த மூன்று மாதத்தின் நிகழ்ச்சியேட்டை வாசிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
தலைமையுரை:
அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் உரையாற்றினார். இந்த பொதுக்குழு தலச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தை மிக்க மகிழ்ச்சியுடன் காண்பதாக கூறினார். நோய்கள் வந்த பின் சிகிச்சைக்கு அலைவதை விட, வருமுன் காக்கும் விஷயத்தில் நம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருத்தல் வேண்டும் என்று அவர் கூறினார்.
மன்ற அங்கத்தினருக்கிடையிலான ஒற்றுமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தின் அனைத்துப் பணிகளிலும் பொறுப்பாளர்கள் செய்வார்கள் என்று இருந்து விடாமல் அனைத்து உறுப்பினர்களும் சம அளவில் பங்கெடுக்க முன்வந்தால், இன்னும் அதிகளவில் மன்றப் பணிகள் மெருகேறும் என்றும் கூறினார்.
உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் தேவையுடைய மக்களுக்கு மன்றம் இயன்றதைச் செய்வதில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்றும் கூறினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் சமர்ப்பிக்க, மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர் ஜனாப் சேட் மொஹதூம் முஹம்மது அவர்களால் கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட பின்னர், கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
செயலர் உரை:
பின்னர் மன்றச் செயலாளர் ஜனாப் உதுமான் லிம்ரா உரையாற்றினார். புதிதாகத் துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும் “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” குறித்து, மன்ற உறுப்பினர்களை நன்கறியச் செய்திடும் பொருட்டு, அதன் குறிக்கோள்கள், உதவி கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறை, ‘ஷிஃபா’வின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்காலத்திட்டங்களான
>> வருமுன் காப்போம்
>> விழிப்புணர்வு முகாம்
>> மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நல உதவிகளைப் பயனாளிகளுக்குப் பெற்றுத் தரல்
>> மருத்துவ முகாம்கள்
ஆகியன குறித்து அவர் விளக்கிப் பேசியதுடன், இனி வருங்காலங்களில் மன்றத்தின் மருத்துவ உதவித் திட்டங்கள், அனைத்தும் ஷிஃபாவைச் சார்ந்தே நமது மன்றமும், அது போல ஏனைய சகோதர மன்றங்களும் செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
"ஷிஃபா" அமைப்பு கருவாக உருவாக ஒத்துழைத்தவர்கள், உதவிகள் வழங்கியவர்கள், உயர் ஆலோசனைகள் அளித்தவர்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இதற்காக நமது மன்றத்தோடு ஒருமித்த கருத்தோடு பயணித்து பலன் பெற உதவியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அமர்ந்தார்.
வாழ்த்துரை:
பின்னர் மன்றத்தின் துணைச் செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர், பொதுக்குழு உறுப்பினர்களான ஜனாப் அரபி ஐதுரூஸ்,ஜனாப் அஸ்வாக், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து அவர்கள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர். கருத்துப் பரிமாற்றத்தின்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மன்ற நிர்வாகத்தின் சார்பில் தலைவரும், செயலாளரும் விளக்கமாக பதிலளித்தனர்.
டீ டைம்:
மாலை 04.45 மணிக்கு இஞ்சி தேனீரும், தலச்சேரி பொரித்த கிழங்கும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
செயற்குழு உறுப்பினர் ஜனாப் நிஜாம் அவர்கள் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் - மாலை 5.00மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. பின்னர், மனமகிழ் நினைவுகளுடன் உறுப்பினர்கள் தமது வசிப்பிடம் திரும்பினர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு மக்வா அமைப்பின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வா அமைப்பின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் (தேர்தல்) குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |