காயல்பட்டினம் நகராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் ஜெ. அந்தோணி மீது, 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மனு வழங்கியுள்ளார். ஜனவரி 27 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது இம்மனுவினை, எம்.ஜஹாங்கிர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்..
அப்புகார் மனுவில், நகராட்சி அனுமதி பெறப்படாத கட்டிடத்திற்கு - நகராட்சியினால், அரசு சட்டத்திற்கு புறம்பாக வீட்டு வரி
விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் உரிமைதாரர் ஏ.ராணி, 7வது வார்டு உறுப்பினரின் மனைவி என்றும், இந்த வரி விதிப்பு பெற நகராட்சி
உறுப்பினர் ஜெ. அந்தோணி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் தனது மனுவில்
தெரிவித்திருந்தார்.
கோரிக்கை எண் - TK/14/00933 ஆக பதிவாகியிருந்த அந்த மனுவின் தற்போதைய நிலை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் -
மனுதாரர் கோரிய இடங்களை வருவாய் ஆய்வாளர் நேரடி ஆய்வு செய்து வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |