காயல்பட்டினம் நகராட்சியின் சில பகுதிகளில் - குடிநீர் விநியோகம் டாங்கர் வாகனம் மூலம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாரிடம் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட வந்த வாகனங்களுக்கு பதிலாக நகராட்சிக்கு சொந்தமாக வாகனம் வாங்க கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் (எண் 484; தேதி - ஏப்ரல் 29, 2013) நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல் 29, 2013 தேதிய தீர்மானம்
இது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, இன்றைய் (பிப்ரவரி 12) தினத்தந்தி நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி - பிப்ரவரி 27, 2014 மாலை 4 மணி வரை ஒப்பந்தப்புள்ளி அட்டவணை வழங்கப்படும் என்றும், பிப்ரவரி 28, 2014 மாலை 3 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும் என்றும், அன்று மாலை 3:30 மணியளவில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12, 2014 தேதிய தினத்தந்தி நாளிதழ் விளம்பரம்
|