மன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தல், மன்றத்தின் நகர்நலப் பணிகளை இன்னும் நேர்த்தியாகச் செய்திட ஆக்ஷன் கமிட்டி அமைத்தல், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) உடன் இணைந்து செயல்திட்டம் வகுத்தல் உட்பட பல முடிவுகளுடன், சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 66ஆவது செயற்குழு கூட்டம், 07.02.2014 வெள்ளிக்கிழமை மாலை, மக்ரிப் தொழுகைக்குப் பின்பு, சகோதரர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
சகோ. செய்யது முஹம்மது ஷாதுலி அவர்கள் கிராஅத் ஓதி இக்கூட்டத்தைத் துவங்கி வைக்க, மன்றத் தலைவர் டாக்டர் ஏ.எஸ்.முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் - மன்றத்தின் நிகழ்காலப் பணிகள், வருங்கால செயலத்திட்டங்கள் குறித்த விவரங்களுடன் தலைமையுரையாற்றினார்.
எம் மன்றத்தின் உறுப்பினர், தைக்கா தெருவைச் சேர்ந்த சேட் முஹம்மது அலி சாஹிப் அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்து, அவர்களின் மறு உலக வாழ்க்கைக்காக வல்ல அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சப்பட்டது.
மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாயில் மன்றத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட "ஆக்ஷன் கமிட்டி" குறித்தும், மன்றத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்க உரையாற்றினார்..
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு - இன்ஷாஅல்லாஹ் பணிகளைச் செய்திட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – ஆக்ஷன் கமிட்டி:
6 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆக்சன் கமிட்டி உருவாகப்பட்டது. இவர்கள் தலைவர், பொதுச்செயலாளர் அவர்களின் வழி காட்டுதலுடன், மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளையும் திட்டமிட்டு, செயல்படுத்துவார்கள்.
தீர்மானம் 2 – அறிவியல் கண்காட்சி:
தாலுகா, மற்றும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி "Science Exhibition" நடத்த முடிவு செய்யப்பட்டன.
தீர்மானம் 3 – ஆங்கில பேச்சுப் பயிற்சி:
மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் Spoken English வகுப்புகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தீர்மானம் 4 – மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்:
மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை உண்டாக்க, KMT மருத்துவமனையுடன் இணைந்து, தொடராக மருத்துவ விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 – ஜெனரிக் மருந்தகம்:
அனைத்து மக்களுக்கும் பயன் பெறும் வகையில் "Generic Medical Store" உண்டாகும் முயற்சியில் மன்றம் ஈடுபடும்.
தீர்மானம் 6 – ஏழைகளுக்கு ரமழான் உணவுப் பொருட்கள்:
வழமை போல, ஏழை மக்களுக்கான ரமழான் மாத உணவுப் பொருட்கள் உதவித் திட்டத்தை செயல்படுத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 7 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
நோய்களுக்கான காரணியான சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தவிர்த்து, தூய்மையை மக்களிடம் கொண்டு செல்ல, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஜூன் 05ஆம் தேதி World Environmental Day - உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவுடன் ஆலோசனை நடத்தி, செயல்வடிவம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 – சிறுதொழில் முன்னேற்ற செயல்திட்டம்:
சிறு தொழில் முன்னேற்றத்தை உருவாக்க, பல திட்டங்களை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிற்றுண்டிக்குப் பின், வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்தி, துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 65ஆவது கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |