சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 47ஆவது 47ஆவது பொதுக்குழுக் கூட்டம், திரளான உறுப்பினர்களின் பங்கேற்புடன் இம்மாதம் 07ஆம் தேதி நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 47-வது பொதுக்குழுக் கூட்டம் 07.02.2014 வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் ஹாஃபிழ்.M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை P.S.J. ஜைனுல் ஆப்தீன் ஒருங்கிணைத்தார். ஹாபிழ்.ஹம்ஸா ழாஃபிர் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹைதர் அலி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது உரையில் கடந்த நமது RKWA வின் செயற்குழு கூட்டத்தில் நமதூரில் வந்த 15 கடிதங்களில் 4 புற்று நோய் சம்மந்தப்பட்டதாக இருந்தது. இந்த ஆட்கொல்லி நோயிக்கு DCW ஆலை ஒரு மிகப்பெரிய காரணியாக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், அதே நேரத்தில் நமது புறநகர் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு professional கேன்சர் சர்வே எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் DCW ஆலையின் நச்சு தன்மை மட்டும் அல்லாது வேறு ஏதாவது காரணங்களும் (உதாரணம் நம் உணவு பழக்கம் ஒரு காரணியாக இருக்கிறதா என்றும் அறிய முடியும் என்றும், அப்படி வேறு காரணிகளும் தெரிய வரும் பட்சத்தில் நாம் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வாய்ப்பாக அமையுமே என்ற கருத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
நம்மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் அய்யம்பேட்டை சகோதரர் பக்கீர் முஹியித்தீன் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தலைவர் உரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத் தலைவர்,ஹாஃபிழ் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் ஊரிலிருந்து உதவி கோரி வரும் விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் விரைவாக பரிசீலிப்பதால் பயனீட்டாளர்கள் உரிய நேரத்தில் பயனடைகிறார்கள் என்றும் ஆகையால், இச்சேவை இறைவனின் பொருத்தத்தை நாடி தோய்வின்றி நடந்தேற சந்தாக்களை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என்று கோரினார்.
2014-2015ம் புதிய நிர்வாகக்குழு அறிமுகம்:
அதன் பிறகு 2014-2015ம் ஆண்டிற்கான புதிய மன்ற நிர்வாகக்குழு, ஆலோசனைக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை மன்ற துணைப்பொருளாளர் KMN ஷம்சுத்தீன் அறிமுகம் செய்து வைத்தார்.
RKWA வின் செயல்பாடுகள்:
RKWA வின் செயல்பாடுகள் குறித்து மன்ற செயலாளர் A.T. சூஃபி இபுறாஹீம். இதுவரை மன்றம் மருத்துவம், கல்வி, சிறு தொழில் மற்றும் இன்னும்பிற (வீடு பராமரிப்பு, ரமலான் நோன்பு பொருள் வினியோகம் போன்ற விஷயங்களிலும் ஈடுபடுத்தி வருவதையும் சுட்டி காட்டி பேசினார். அதோடு மட்டுமில்லாமல் பொறியியல் கல்விக்கடன் திட்டம், நன்மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு சிறப்புற செய்து வருவதையும் விளக்கிப் பேசினார்.
அடுத்து இதுவரை எம்மன்றத்திற்கு நேரடியாக மருத்துவ கடிதங்கள் வந்ததை தொடர்ந்து கடந்த 2013 செப்டம்பர் மாதம் முதல் உலக காயல் நல மன்ற அமைப்பான ஷிஃபா மூலமாக இது வரை 3,83,150 ரூபாய் எம்மன்றம் வழங்கியுள்ளதையும், மன்ற பங்களிப்பின் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கிப்பேசினார். இவ்வனைத்தும் மன்ற உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகள் தொய்வின்றி வருவதாலும், முகமலர்ச்சியுடனும் திருப்தியுடனும் தருவது தம் மன்றத்தை ஊக்குவிப்பதாக கூறினார். இது வரை RKWA வில் இணையாத ரியாத் காயல் வாசிகளை கண்டறிந்து அவர்களையும் நம் மன்றத்தில் இணைய வழி செய்வதே பிரதான நோக்கம் என்பதையும் கூறினார்.
அதோடு மன்றத்தின் நிதிநிலை அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு மொத்தம் ரூ.12,87,732 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதையும் எடுத்து கூறினார்.
அடுத்து இப்பொதுக்குழு ஒருங்கினைப்பாளர்கலான எம்மன்ற செயற்குழு உறுப்பினர்கள் வாவு கிதுறு, S.S. முஹம்மது, S.B. முஹியத்தீன், இஸ்மத் நவ்பல், வெள்ளி சித்தீக் மற்றும் இப்றாஹீம் பைசல் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார்.
கருத்துரை:
செயற்குழு உறுப்பினர் K.S.முஹம்மது நியாஸ் மன்ற செயல்பாடுகள் மற்றும் கடிதங்கள் பரிசீலிக்கும் முறை பற்றியும் பொருளாதாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். அடுத்து ஒவ்வொரு உறுப்பினர்களின் பணியிட மாற்றம் மற்றும் பணியை முடித்து விட்டு தாயகம் செல்லும் உறுப்பினர்களின் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக ரியாத் மாநகரம் வந்திருக்கும் காயல்வாசிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதை அழகாக எடுத்துரைத்தார்.
பின்னர் நம்மன்ற உறுப்பினர் லால்பேட்டை S.M. முஹம்மது நாஸர் அவர்கள் இம்மன்றத்தின் சேவைகள் பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாதகவும் காயலர்களின் தன்னலமற்ற இறைச்சேவையைக் கண்டு பெருமை அடைவதாகவும் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் உரை:
Zee Tee Express-ன் மேலாளரும்,Understand Quran Academy Riyadh கிளையின் பொருப்பாளருமான சகோதரர்.M.B.M. கஸ்ஸாலி அவர்கள் கூறுகையில், காயலர்கள் எந்த அளவிற்கு மார்க்க விஷயங்களில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதனையும் மேலும் ஒவ்வொரு முஸ்லிமும் மற்றொருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பதினால் உலக மக்கள் அனைவர்களும் எந்த அளவிற்கு சென்றடைய முடியும் என்பதனையும் 1+1=11 [Each One Teach One] என்ற சூத்திரத்தின் மூலமாக தெளிவுப்பட எடுத்துரைத்தார்.
வினாடி வினா போட்டி:
சூப்பர் செய்து இப்ராகிம் அவர்களின் தொகுப்பில் உருவான அழகிய வினாடி-வினா போட்டி P.S.J. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நெறிப்படுத்த 5 அணிகளாக பிரிக்கப்பட்டு, 6 சுற்றுக்களாக (அறிவியல், விளையாட்டு, மாநிலம், இஸ்லாம், கேலிக்கை) அடிப்படையில் கேள்வி அமைத்து நடத்தப்பட்டது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக முதல் இரு அணியினர்க்கு அனுசரணையோடு கூடிய அழகான பரிசுகளும் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் சவுதி அரேபியா பணியை முடித்து விட்டு தாயகம் சென்ற எம்மன்ற மூத்த உறுப்பினர் A.H. அப்துல் ரஷீது அவர்களின் தாயக வாழ்க்கை சிறந்து விளங்கவும், அதோடு எம்மன்ற காயல் பிரதிநிதி தர்வேஷ் முஹம்மது அவர்களின் அயராத ஒத்துழைப்பையும் வேலையையும் பாராட்டி துஆ செய்யப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் பைஸல் நன்றியுரை ஆற்ற P.S.J.ஜைனுல் ஆப்தீனின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் காயல் சுவை அஹனிக் கறி விருந்து தயார் படுத்தி தந்த சகோதரர் உவைஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப் பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
N.M.செய்யித் இஸ்மாஈல்
ஊடகத்துறை பொறுப்பாளர்
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட 46ஆவது பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |