தூத்துக்குடி மாவட்ட அளவிலான க்ரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று (09/02) காலை காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) அணியும், தூத்துக்குடி அனல்மின்நகர் அணியும் மோதின.
டாஸில் வெற்றி பெற்ற ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் 54 ரன்கள் பெற்றிருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கமால் மற்றும் கோமான் தெருவைச் சேர்ந்த யாஸர் இணை தங்களது திறமையான ஆட்டத்தின் மூலம் அணியை சரிவில் இருந்து மீட்டதோடு, ரன்களை மளமளவென சேர்த்தனர். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்தனர்.
கமால் 30 ரன்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். யாஸர் 68 பந்துகளில் 143 ரன்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் பேட்டிங் செய்த அனல்மின்நகர் அணி 122 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோமான் யாஸர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை நடைபெற்ற மாவட்ட அளவிலான லீக் போட்டிகளில் கோமான் யாஸர் அடித்துள்ள 143 ரன்கள் என்பது தனிநபர் அடிக்கும் 3-வது அதிகபட்ச ரன்கள் ஆகும். முன்னதாக ரமேஷ் ஃபிளவர்ஸ் அணியின் நாதன் 219 ரன்களுடன் முதலிடத்திலும், ஸகண்ட்ஸ் அணியின் பிரேம் 195 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
2. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[11 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33113
அஸ்ஸலாமு அழைக்கும் ,
முதலில் நாசருக்கு வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் இவர் நல்ல முறையாக விளையாடி நல்ல நிலைக்கு வரட்டும் இது போல் நம் ஊரில் நிறைய வீரர்கள் உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து முறையான வழியை காட்டனும்.
லீக் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி
என்ற செய்தி சற்று ஆச்சரியமான ஒன்றுதான் (பொதுவாக கால்பந்து ஆட்டத்துக்குதான்) அங்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனது நினைப்பு .
மொத்தில் அணிக்கும் சங்கத்துக்கும் நல் வாழ்த்துகள் . தொடரட்டும் இது போன்ற வெற்றிகள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross