மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி - ஜெயலலிதாவின் விண்ணை தொடும் முயற்சி! என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு பிரத்தியேக சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்.
சு.முராரி - தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது அனுபவத்தைத் துவக்கிய இவர், 1984 ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழின் தமிழக செய்தியாளராக சென்னையில் இருந்து சேவை புரியத்துவங்கினார்.
இக்காலக்கட்டத்தில் இலங்கைக்கு பல பயணங்கள் மேற்கொண்ட இவர், தனது பயணங்களின்போது - தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள் பலரை சந்தித்தார். ஈழப் போராட்டம், தாய்லாந்து நாட்டில் நடந்த விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை,
1987 முதல் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்கள் ஆகியவற்றை இவர் நேரடியாக செய்திகள் சேகரித்து
ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் DECCAN HERALD பத்திரிகையில் பணிபுரியும்போது பல சர்வதேச நிகழ்ச்சிகள், சார்க் மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ள இவர்,
கஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக இருந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில், JKLF அமைப்பின் தலைவர் யாஸீன் மாலிக்கை நேர்காணல் செய்ய கஷ்மீர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழில் இருந்து இவர் ஓய்வுபெற்றார்.
தனது இலங்கை அனுபவத்தை, "The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior" எனும் தலைப்பில் புத்தகமாக முராரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை Sage Publications நிறுவனம் வெளியிட்டது. பரவலாக வரவேற்பு பெற்ற இப்புத்தகத்தை, தற்போது முராரி தமிழாக்கம் செய்து வருகிறார்.
பத்திரிக்கையாளர் சு.முராரி எழுதிய சிறப்புக் கட்டுரையை காண இங்கு அழுத்தவும்
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 12:30 pm / 10.02.2014]
|