காயல்பட்டினம் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள 5 உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இவைகளை பழுதுபார்க்க மதிப்பீடு தயாரிக்க - நகர்மன்றத்தின் செப்டம்பர் 2013 சாதாரண கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
டிசம்பர் 2013 நகர்மன்ற கூட்டத்தில் - திறந்த அழைப்பு விடாமல் பெறப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள், நகர்மன்றத்தின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது. பணிகளின் மதிப்பீடு சுமார் 8 லட்ச ரூபாய் அளவில் உள்ளதால், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்படவேண்டும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2013 கூட்டப்பொருள்
அதனை தொடர்ந்து இன்று தினத்தந்தி நாளிதழில் ஒப்பந்தப்புள்ளிக் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி - ஒப்பந்தப்புள்ளிகள் பிப்ரவரி 28, 2014 மாலை 3 மணி வரை பெறப்படும் என்றும், அன்று மாலை 3:30 மணியளவில் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12, 2014 தேதிய தினத்தந்தி நாளிதழ் விளம்பரம்
|