நிதியமைச்சரின் உரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
-------------------------------
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும்.
நபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ. 198.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு.
பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு.
தேசியத் தோட்டக்கலை இயக்கம் 22 மாவட்டங்களில் ரூ115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும்.
சென்னை மாநகரத்தில் மேலும் 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் தொடங்கப்படும்.
புதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.49.05 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு.
12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
36,233 மதிய உணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அல்லது நீராவி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு.
உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு.
சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.
திருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு.
விளையாட்டு வீரர் விடுதிகள், கட்டமைப்புகளுக்கு ரூ. 146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சியில் புதிதாக 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
64 ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும்.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும்.
சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைக்கப்படும்.
தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு மாநில அரசின் பங்கிற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,60,000 வீடுகள் அமைக்கப்படும்.
விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு. நெசவாளர்களுக்கான பசுமை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி மின்சக்தி கொண்ட 60,000 பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இளைஞர்கள் திறனை மேம்படுத்த நெல்லை, திருவள்ளூரில் மையங்கள் அமைக்கப்படும்.
போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு.
கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும். திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு. அணைகள் புனரமைப்புக்கு ரூ.329.65 கோடி நிதி ஒதுக்கீடு.
மீனவர்களுக்கு நிவாரண நிதி: மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு. பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.
வேளாண் வளர்ச்சி திட்டங்கள்: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும்.
4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
பேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் வளர்ச்சிக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
சென்னையில் 10 இடங்களில் நவீன வரி வசூல், கட்டண வசூல் மையம் அமைக்கப்படும்.
நீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு.
தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு.
சாலைப் பாதுகாப்பிற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு.
தீயணைப்பு, மீட்புபணிகள் துறைக்கு ரூ.189.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காவல்நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்ட ரூ.571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு: காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,168 கோடியாக அதிகரிப்பு. புகார் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
இவ்வாறு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
-------------------------------
நிதியமைச்சரின் உரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
தகவல்:
தி இந்து
[Administrator: புகைப்படங்கள் இணைக்கப்பட்டது @ 8:30 pm / 13.02.2014] |