மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் சென்ட்ரல் துவக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்று முடிந்துள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளியின் ஆண்டு விழா, இம்மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 16.30 மணிக்கு, பள்ளி வளாகத்தில் - ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி வாவு நெய்னா, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, ஓ.ஏ.கே.செய்யித் அலீ ஃபாத்திமா, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத், அதன் ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்ட்ரல் துவக்கப்பள்ளியின் ஆசிரியை எஸ்.ஜுனைதா ராணி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தலைமையாசிரியர் எஸ்.பாபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பின்னர், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். |