உண்மையான posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[24 February 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33326
மாஷா அல்லாஹ் போற்றத்தக்க ஒரு புண்ணியமான காரியம்!வேலை தேடி அலைவோரின் எண்ணக்கவலைகள் தான் எத்தனை,எத்தனை.அதிலும் இருப்பிடம்,உணவு என்ற ஒரு பெரிய சுமையை சமாளிக்க ஒத்துழைப்பு நல்கும் அன்புக்குறிய அபுதாபி காயல் நல மன்றத்தினரின் கண்ணியம் அடங்கிய கசியும் இதயத்திற்கு எத்தனை ஆயிரம் நன்றி சொன்னாலும் தகும்!
வேலை இல்லா ஒரு காயல் சகோதரனுக்கு வேலை கிடைக்குமேயானால்,அப்படி கிடைக்கும் வேலையின் பலன் அந்த ஒருவரை மட்டும் சாராது,அவர் கீழ் அவரை எதிர்நோக்கி இருக்கும் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு
புனர்வாழ்வு கிடைத்ததற்கு சமமாகும்!
இப்படிப்பட்ட புண்ணிய பணியை அபுதாபி காயல் நலமன்றம் மட்டுமல்ல,அனைத்து காயல் நல மன்றங்களும் முன்னிலைப் படுத்தி செய்யவேண்டும்! வேலை இல்லாதவரின் வலியின் தன்மையை அந்த நிலையில் உள்ளவர்களால் மட்டுமே மிகுதியாக உணரமுடியும்!அல்லாஹ் அனைவரின் நெருக்கடியையும் நீக்கி நல்வழியை நல்கிடுவானாக ஆமீன்!
சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் ரியாத் நகரின் முக்கிய இடத்தில ஒரு வீட்டை பிடித்து அதற்க்கு "காயல் முத்துச்சாவடி" என்று பெயரிட்டு அதில், வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கும் வரை தங்கி கொள்ளவதோடு உணவும் பரிமாறப்பட்டது.இப்புண்ணிய பணிக்காக கருணை உள்ளம் படைத்த நம் காயல் சகோதரர்களின் கணிசமான பொருள் உதவியால் வருடக்கணக்கில் இயங்கி வந்தது.இங்கு தங்கி இருந்தவருக்கு வேலை கிடைத்துவிட்டால்,அவரின் முதல் மாத சம்பளத்தை இப்புண்ணிய பணி நடைபெறும் முதுச்சாவடிக்கு கொடுத்தும் வந்தனர்.அவர் உதவி பெற்றதும் மட்டுமல்ல் மற்றைய நம் காயல் சகோதரர்களும் பயன் பெற வேண்டும் என்ற இறக்க உணர்வு வேட்க்கையை வளர்த்த புண்ணிய இடமாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல!
உண்மையான "சதக்கத்துல் ஜாரியா" வாகிய இக்கருணை காரியத்தை செய்ய முன் வந்த அத்துனை அபுதாபி காயல் நல மன்ற சகோதரர்களுக்கும் இன்னொருமுறையும் என் இதயம் பொங்கும் நல்வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross