Re:...திட்டமிட்டால் வெற்றி நிச்சயம் posted bymackie noohuthambi (chennai)[25 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33365
யார் யார் எங்கே போட்டியிடுகிறார்கள், எந்த இடத்திலே தேர்தல் கூட்டம் நடைபெறும் எந்த நாளில் நடைபெறும் என்று இத்தனை தெளிவாக வியூகம் வகுத்து தேர்தல் தேதி அறிவிக்கு முன்னமே தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு சிறகை விரித்துப் பறக்கப் புறப்பட்டுள்ள முதல்வரை பாராட்டினால் சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதை ஜீரணிக்க முடியாத இந்திரா, அவசரகால நிலை பிரகடனம் செய்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். ஆனால் அவரை அன்று எதிர்த்தவர்கள் பின்னர் அவரை இந்த நாட்டின் ஒரு துணிச்சல்மிக்க பிரதமர் என்று பாராட்டினார்கள் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அழைத்து அரியாசனத்தில் அமர செய்தார்கள் அவர் எடுத்த முடிவு தவறானது ஆனாலும் அவரது துணிச்சலை உலகம் பாராட்டியது. ONLY THE FITTEST SURVIVE என்பது டார்வின் தியரி.
தெளிவான திட்டம் - விடாமுயற்சி - கடும் உழைப்பு -தன்னம்பிக்கை - இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை என்பது இந்த 66 அகவையில் அடி எடுத்து வைக்கும் முதல்வரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இதில் கட்சி வேறுபாடு இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross