அவசர கோலத்தில் எடுத்த முடிவு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[26 February 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33372
அன்புக்குறிய நூஹுதம்பி காக்கா அவர்களுக்கு உங்கள் கருத்தோடு சிறிது கலந்துரையாட நாடி,உங்கள் கருத்துக்கு
இச்சிறியோனின் சிந்தனை சிதறல்களை சற்று தெளித்து இருக்கிறேன்.இது குற்றால சாரலே தவிர கொதிக்கும் நீர் அல்ல. சரிக்கு சரி என்ற சிந்தனைக்கு தயவு செய்து சென்றுவிடாதீர்கள்!
தெளிவான திட்டம் - விடாமுயற்சி - கடும் உழைப்பு -தன்னம்பிக்கை - இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை "(C &P )
தெளிவான திட்டம்= அவசர கோலத்தில் எடுக்கும் முடிவாக நிச்சியம் இருக்காது!
விடாமுயற்சி= ஒரு காரியத்தை நிதானமாக சிந்தித்து அதை செயல்வடிவமாக்கச்செய்யும் தொடர் உழைப்பு.
க்டும் உழைப்பு= என்னுடைய முந்திய கம்பெனியின் மேலாளர் சொல்லுவார் Mr.சுல்தான்,ஒரு வேலையை கடினமாக உழைப்பவனைவிட அந்த வேலையை நிதானமாக சிந்தித்து,அதை விரும்பி அதோடு ஒரிங்கிணைந்து செய்பவனே மேல்,அவனிடம் ஒரு தவறு கூட நிகழாது.சில நேரங்களில் வேகமான கடின உழைப்பாளியிடம் கூட தவறுகள் நடக்க வாய்ப்புண்டு.
தன்னம்பிக்கை = அவசரத்திலோ,படபடப்பிலோ பிரசவமாவதில்லை.பலதடவை சிந்தித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவே நமக்கு எப்படியும் வெற்றிகிட்டும் என்ற எண்ணத்தின் இன்னொருபெயர் தான் தன்னம்பிக்கை.
இந்திரா காந்தியவர்கள் அவசர கோலத்தில் எடுத்த முடிவாகிய EMERGENCY யை பிரகடனபடுத்தியதால்,அவர் ஆட்சி காலம் முடிந்து சந்தித்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் என்பதும் தாங்கள் அறியாத வரலாறு அல்ல!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross