தொடரட்டும் உங்கள் வெளிப்படை நிர்வாகம்.. பாராட்டுக்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[28 February 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33426
உங்களின் வெளிப்படை நிர்வாகத்தில் இதுவும் ஒன்று என்றே கருதுகிறேன்.. வாழ்த்துக்கள் - காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளின் முழுமையான STATEMENT இனி மாதம் மாதம் உங்களின் இணையதளத்தில் வழங்கவும்.
கடந்த நகர்மன்ற தலைமையில் ரூபாய் 13 லட்சம் நமது வரிப்பணம் வங்கியில் இருந்து மோசடியாக போனது.. குறிப்பிடத்தக்கது...! அதன் முடிவு இதுவரை தெளிவில்லை...
உள்ளாட்சி துறை தணிக்கையின் போது சமீபத்தில் நமது நகராட்சியில் நமது வரி பணம் ரூபாய் 2.5 லட்சம் கையாடல் நடைபெற்ற முறைகேட்டை சுட்டிக்காட்டி நீங்களும் இன்னும் பொதுநல ஆர்வலகளும் கூடவே நானும் RTI மூலம் மனு செய்து இருந்தேன் அந்த மனுவுக்கு அன்றைய ஆணையர் அசோக் குமார் எனக்கு அளித்த பதில் இதோ.. (பதில் - காயல்பட்டணம் நகராட்சியில் 2010-11-ம் ஆண்டு உள்ளாட்சி தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிதியிழப்பு தொகை சம்பந்தப்பட்ட ஊழியரால் வங்கியில் செலுத்தப்பட்டது. மனுதாரர் குறிப்பிட்டது போல் நிதியிழப்பு ஏற்படவில்லை என்ற விபரம் தொிவிக்கப்படுகிறது.) என்கிறார்..
(எனது எதிர் கருத்து இதோ - தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிதியிழப்பு தொகை சம்பந்தப்பட்ட ஊழியரால் வங்கியில் செலுத்தப்பட்டது.. CP
அதாவது முறைகேடு நடந்துள்ளதை ஆணையர் ஒத்துக்கொள்கிறார்.. புகார் மனுவை ஆட்சிரிடம் வழங்கிய பிறகு அவசர அவசரமாக வங்கியில் பணம் செலுத்த பட்டுள்ளது... என்பதை அனைவரும் உணரலாம்...
சந்தேகம் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் இணையதளத்தில் சென்று எனது கோரிக்கை எண் பதிந்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்...http://onlinegdp.tn.nic.in/index1.php?dis=TK - http://onlinegdp.tn.nic.in/gdp_petition_status.php?ackmnt_no=TK%2F14%2F00344
கோரிக்கை எண் - TK/14/00344
தொடரட்டும் உங்கள் வெளிப்படை நிர்வாகம்.. பாராட்டுக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross