செய்தி: லோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது: பா.ஜ.க. கூட்டணி குறித்து தினமலர் நாளிதழுக்கு கருணாநிதி பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சகல கலா வல்லவன் posted bymackie noohuthambi (chennai)[28 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33428
தினமலர் நாளிதளின் கிடுக்குப் பிடி கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிக்கும் கலைஞர் சகல கலாவல்லவன் என்பது தினமலருக்கு தெரியாத ஒன்றல்ல. இதே கேள்விகள் புரட்சி தலைவியிடமோ புரட்சி கலைஞரிடமோ, (அதுதாங்க விஜயகாந்தின் பழைய பெயர்) கேட்கப்பட்டிருந்தால் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்து போயிருப்பார்கள்.
தோல்விக்கு மேல் தோல்வி வந்தும் வாரிசுகளால் வேதனைகள் வந்தும் அந்த வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு நிமர்ந்து நிற்கும் இந்த 90 வயது இளைஞனிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்க வேண்டியது நிறையவே உள்ளது. 20 வயதில் 60 வயது விவேகம் 60 வயதில் 20 வயது வேகம் என்று அவரை அன்று புகழ்ந்தது இன்றும் அவருக்கு பொருந்தி போகிறது.
கூட்டணி கதவுகள் மூடப் பட்டு விட்டன என்று ஸ்டாலின் அறிவித்து விட்ட செய்தி தினமலர் நிருபருக்கு கிடைக்கவில்லையா? இலவு காத்த கிளிகள்போல் கம்யூனிஸ்டுகளும், 20 வருடங்களாக மறுமலர்ச்சிக்காக கூடு விட்டு கூடு பாய்ந்தும் ஒரு இலக்கத்தைகூட பெறமுடியாமல் பதைபதைத்துக் கொண்டு நிற்கும் வைக்கோவும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட பிறகு "தனித்து நிற்போம், இது உளுந்தூர்பேட்டையில் எனது தொண்டர்கள் விரும்பியது" என்று வாய்ச்சவடால் விட்டு, இருக்கின்ற எல்லா சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைபோக வைத்து விட்டு தனி மரமாக தனது செல்வாக்கை அஸ்தமிக்க செய்து கொண்டிருக்கும் விஜயகாந்தும் கலைஞர் அணியில் இணைந்திருந்தால் பிஜேபி யின் வெற்றி தமிழகத்தில் கேள்விக் குறியாக இருந்திருக்கும். திராவிடர்கள் இப்படி ஆரியர்களிடம் அடிமைப் பட்டிருக்க வேண்டியதில்லை. "ஆரியை மாயை எழுதிய அண்ணாவின் தம்பிகளா இவர்கள்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross