Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[03 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33493
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நம் ஊருக்காக நிற்கும் வேட்பாளர்கள் குறிப்பாக ( நகரமன்ற தலைவர்கள் ) நடுவில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிகளில் இணைவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது .
என்ன காரணம் சொன்னாளும் அவைகள் சாக்கு போக்கு காரணம்தான் கட்சிகளின் போட்டிகள் இல்லாமல் நம் மக்கள் நல்ல தலைவரை அதாவது குரங்கு போல தாவாத தலைவர்களை நிற்க வைக்கணும் அடுத்த தேர்தல் நம் மக்கள் சரியான பொது வேட்பாளரை போடின்றி ஒருமனதாக தலைவராக அமர வைக்கணும் அதற்கு நம் மொத்த ஊர் மக்களும் , அமைப்புகளும் ஒருங்கிணைத்து சரியான முடிவை எடுக்கணும் .
நம் மக்கள் இரண்டுபட்டு நிற்பதால் அதனை ஆளும் கட்சியாக இருபவர்கள் நம் தலைவிகளை அவர்கள் பக்கம் இழுத்து விடுகிறார்கள் நாமும் அதற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறோம் .
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுகும் , அரசியல்வாதிகளுகும் ( இரண்டும் ஒன்றுதான் ) கொண்டாட்டம் தான் .
இந்த பழமொழி இந்த இந்திய நாட்டிளும் , நம் தமிழ் மாநிலத்திளும் , நம் ஊரிளும் நடைமுறைகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது .
நம் மக்களிடம் உள்ள அறியாமை , ஒற்றுமை இன்மை , ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றம் இல்லாமை போன்ற வைகளை உள்ளூர் மற்றும் அணைத்து அரசியல்வாதிகளும் பயன்படுத்தி மக்களின் தலைகளில் மொட்டை அடித்து மசாலாவையும் தடவி முட்டாளாக ஆகுகிறார்கள் .
நாம் என்றுதான் திருந்துவோம் என்று நாம் அறியமாடோம் .
ஆனால் அவர்கள் அறிந்து வைத்து இருப்பார்கள் நாம் திருந்தவேமாடோம் என்று நம் மீது அவர்களுக்கு அவ்வளவு
நம்பிக்கை .
முயன்று முறியடிப்போம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross