Re:... posted byசாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை)[05 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33522
இன்றியமையாத பதிவு.
ஹிஜாஸ் மைந்தனின் வழமையான ஊறிய சுவையான நடையை இக்கட்டுரையில் காண முடியவில்லை. கட்டுரையை அறிக்கை போல தராமல் பட்டறிவின் ஊடான எழுத்தாக மாற்றி எழுதி இருந்திருந்தால் இன்னும் சுவைபட அமைந்திருக்கும்.
எனினும் மிகப்பெரும் சமூக பிரச்சினையை கவனப்படுத்திய நண்பர் ஹிஜாஸ் மைந்தனுக்கு எனது வாழ்த்துக்களும் துஆக்களும் !
நமதூர் அரசு மருத்துவமனையை ஒரு காலத்தில் " பெரியாஸ்பத்திரி " என்று நம்மூர் மக்கள் அழைத்தார்கள்.
இன்று அதே வாய்கள்தான் " தர்மாஸ்பத்திரி" என அழைக்கின்றது. ( தகவல் : தம்பி எஸ்.கே. ஸாலிஹ் )
நம்மிடையே உள்ள தனியார் மருத்துவ மோகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அரசு ஒன்றும் நமக்கும் பிச்சையோ தர்மமோ போடவில்லை. மருத்துவம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும்.
நமது காசில்தான் அரசு நமக்கு மருத்துவ உதவிகள் செய்கின்றது. நாம் கட்டும் வரிப்பணத்திலிருந்துதான் இதற்கான பணம் பெறப்படுகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
பொது மக்களின் தாராளமான நன்கொடைகளை பெற்று பெருமக்களின் முயற்சியில் நமதூரில் தனியாக கே.எம்.டி. மருத்துவமனை என்று துவங்கினோம். ஆனால் அது பல்வேறு காரணங்களினால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கே.எம்.டி. மருத்துவமனையாகட்டும் அல்லது ஷிஃபா , மைக்ரோ காயல் உள்ளிட்ட மருத்துவ உதவி தன்னார்வ குழுக்களாகட்டும் தன் விமர்சனம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எனது பணிவான கருத்துக்கள் இவைதான்:
வளர்ந்த முதிர்வு பெற்ற சமூகத்தின் அடையாளங்களில் ஒன்று அங்கு மருத்துவ சேவை என்பது முற்றிலும் இலவசமாக அல்லது மிக குறைந்த கட்டணத்தில் பொதுமக்களால் பெறப்படக்கூடியதாக இருக்கவேண்டும்.
முதலில் அதாவது அரசு மருத்துவமனை கூடுமான அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கான மன தூண்டுதலை தொண்டு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.
அடுத்ததாக இலவசமாக அல்லது மிக குறைந்த கட்டணத்தில் செயல்படக்கூடிய தனியார் மருத்துமனைகள் இருக்க வேண்டும்.
இரண்டாவது வகைக்கு கிறிஸ்தவ பரப்புரை ஊழியங்கள் , ஹிந்து ஆஸ்ரமங்கள் , அறக்கட்டளைகள் நடத்தும் இலவச / குறைந்த கட்டண மருத்துவமனைகளை குறிப்பிடலாம். [ எ.கா : மாதா அமிர்தானந்தமயி மடம் , சாந்தகிரி மடம் , மார்வாடி , குஜராத்தி அறக்கட்டளைகள் ]
. அரசு மருத்துவமனைக்கு நிலம் , உள் நோயாளி கூடங்கள் வழங்கிய நமது முன்னோர்கள் அந்த வகையில் சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகின்றனர். { அல்லாஹ் அந்த நல்ல ஆன்மாக்களின் மண்ணறைகளை ஒளியால் நிரப்புவானாக ! அவர்களுக்கு மறுமை வெற்றியை அளிப்பானாக !! }
குருதியும் வியர்வையும் சிந்தி ஈட்டப்படும் நமதூர் மக்களின் நன்கொடைப்பணமானது மருத்துவ செலவினங்களுக்கான பண உதவி என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக்கு தீனி போடுவதாகவே நம்மை அறியாமலே பல நேரங்களில் அமைந்து விடுகின்றது.
நாம் அரசு மருத்துவமனைகளை கூடுதலாக பயன்படுத்தும்போது அதைக்காட்டி அரசிடம் பல வசதிகளை நாம் கோர முடியும். ஒருக்கால் அரசின் உதவி மிக தாமதமாகும் பட்சத்தில் பொதுமக்களின் நன்கொடை மூலம் அந்த வசதிகளை அரசு மருத்துவமனைகளில் நாம் ஏற்படுத்தலாம்.
இந்த வகையிலான அணுகுமுறையானது மருத்துவத்திற்காக தனியாரிடம் பொதுமக்கள் பறிகொடுக்கும் பணத்தின் அளவை பெரிய அளவில் குறைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross