வெற்றிக்காக மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[08 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33579
TNTJவின் இந்தமுடிவுஎனக்குஆச்சிரியத்தையோ,அதிர்ச்சியயோ தரவில்லை மாறாக நான் எதிர்பார்த்ததுதான்,கடந்த மூன்று மாதத்திலிருந்து என்னுடைய கருத்தை இந்த இணையதளத்தில் பதிவு செய்துதான் வருகிறேன் யாராவது கவனித்திருந்தால் தெரிந்திருப்பார்கள்.நான் நினைத்தது நடந்து விட்டது!
ஒட்டுமொத்த உலக முஸ்லிம்கள் ஒருபக்கம் இருந்து அதில்
த.மு.மு.க வும் அங்கம் வகித்திருந்தால்,அந்த கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும் தலைமைதான் TNTJ ஆகும்!
அந்த ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களும் தீயவழியில்,இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும்
நேர்விரோதியாய் நிற்கிறார்கள் நாங்கள் மட்டும்தான் மனித புனிதர்களாக இஸ்லாத்தை காப்பாற்றக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பார்கள்,
அதனால் தான் இப்புனித இஸ்லாத்தை இத்தரணி எங்கும் பரப்பச்செயும் தியாகத்தை செய்ய முன்வரும் ஒரு தலைவியை எங்கள் தலைமேல் உயர்த்தி அத் தலைவியின் வெற்றிக்காக உடல்,பொருள் ஆவி அத்தனையையும் தியாகம் பண்ண திரண்டெழுந்துவிட்டோம்!
அத்தலைவியை வெற்றிபெற செய்வதனால் ஏற்படும் விளைவால் எந்த முஸ்லிம் வேட்பாளராவது தோல்வியை தழுவினால் அது எங்களுக்கு கவலை இல்லை, எங்களின் ஒரே இலட்சியம் அம்மாவை வெற்றிபெற செய்ய வேண்டும் அதற்காக ஆயிரமாயிரம் அப்பாவி முஸ்லிம்களை பகடை காய்களாக முன்னிறுத்தி களம்காண உறுதிபூண்டுள்ளோம்! (நவூதுபில்லாஹ்!)
அல்லாஹ்வின் அச்சமில்லாமலும், மனசாட்சி இல்லாமலும் ஒற்றுமையை ஒருபொருட்டாக கருதாமலும், நம் சிறுபான்மையரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமலும் ஒரு காவிக்காரனுக்கோ அல்லது அக்காவிகாரனுக்கு காவடி எடுக்கும் ஒரு தலைவிக்கோ தன்னுடைய சுய கவ்ருவத்திற்காகவும் ,
தான் என்ற அதிகாரத்தை நிலைநாட்டும் எண்ணத்துடனும் அப்பாவி முஸ்லிம்களை அடகுவைக்கும் இந்த அக்கரம காரியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்! அவன் ஒருகனம் ஒர்விரலை சொடிக்கினால் போதும், உங்களின் ஆணவ ஆட்டமெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழிந்தொழிந்து போகும்!
இந்த மாதிரி வக்கர எண்ணமும், பிரிவினை குணமும்,
“தான்என்ற” தனிமை ஆட்சி மோகமும் கொண்ட கூட்டம் நம் இஸ்லாத்தில் இருக்கும் வரை இப்பூவுலக இறுதிநாள் வரை
நம் சமுதாயம் ஒன்றுபடப போவதும் இல்லை, ஒற்றுமையடைப் போவதும் இல்லை.அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!
அன்பு சகோதரர்களே எந்த பிரமைக்கும் பிரமாண்டதிற்க்கும் மயங்கி விடவேண்டாம், கூலாங்கல்லால் யானைப்படையை வென்ற புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமக்கு வெற்றியை வல்ல இறைவன் தந்தருள்வானாக! மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross