Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:52 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13184
#KOTW13184
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 7, 2014
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆதரவு: அ.தி.மு.க. செய்தி வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவை இன்று (7.3.2014 – வெள்ளிக் கிழமை), 24.4.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன், மேலாண்மை குழுத் தலைவர் சம்சுல்லுஹா, பொருளாளர் எம்.ஐ. சுலைமான் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்தார்கள் என அ.தி.மு.க. சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நிகழ்வின் போது, அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான கே.பி. முனுசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் ஆகியோரும் உடன் இருந்தனர் என்றும் மேலும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



புகைப்படம்:
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்

[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 10:00 pm / 08.03.2014]

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எப்போது நமக்குள் ஒற்றுமை வருமோ
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [08 March 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33577

எப்போது நமக்குள் ஒற்றுமை வருமோ ?

நமது சமூதாய ஓட்டுகள் இப்படி பல பிரிவுகளாக பிரிந்தால் நம் சமூதாயம் வெற்றி அடைவது எப்போது ?

வல்ல நாயன் தான் நமக்குள் ஒற்றுமையை தர வேண்டும் . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohideen (Jeddah) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33578

இந்த தேர்தலில் யார் அதிக இட ஒதிக்கீடு தருவார்களோ அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு என்றார்கள் இப்பம் என்னப்பா ஆச்சு எல்லாமே அரசியல் தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வெற்றிக்காக மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [08 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33579

TNTJவின் இந்தமுடிவுஎனக்குஆச்சிரியத்தையோ,அதிர்ச்சியயோ தரவில்லை மாறாக நான் எதிர்பார்த்ததுதான்,கடந்த மூன்று மாதத்திலிருந்து என்னுடைய கருத்தை இந்த இணையதளத்தில் பதிவு செய்துதான் வருகிறேன் யாராவது கவனித்திருந்தால் தெரிந்திருப்பார்கள்.நான் நினைத்தது நடந்து விட்டது!

ஒட்டுமொத்த உலக முஸ்லிம்கள் ஒருபக்கம் இருந்து அதில் த.மு.மு.க வும் அங்கம் வகித்திருந்தால்,அந்த கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும் தலைமைதான் TNTJ ஆகும்!

அந்த ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களும் தீயவழியில்,இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் நேர்விரோதியாய் நிற்கிறார்கள் நாங்கள் மட்டும்தான் மனித புனிதர்களாக இஸ்லாத்தை காப்பாற்றக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பார்கள்,

அதனால் தான் இப்புனித இஸ்லாத்தை இத்தரணி எங்கும் பரப்பச்செயும் தியாகத்தை செய்ய முன்வரும் ஒரு தலைவியை எங்கள் தலைமேல் உயர்த்தி அத் தலைவியின் வெற்றிக்காக உடல்,பொருள் ஆவி அத்தனையையும் தியாகம் பண்ண திரண்டெழுந்துவிட்டோம்!

அத்தலைவியை வெற்றிபெற செய்வதனால் ஏற்படும் விளைவால் எந்த முஸ்லிம் வேட்பாளராவது தோல்வியை தழுவினால் அது எங்களுக்கு கவலை இல்லை, எங்களின் ஒரே இலட்சியம் அம்மாவை வெற்றிபெற செய்ய வேண்டும் அதற்காக ஆயிரமாயிரம் அப்பாவி முஸ்லிம்களை பகடை காய்களாக முன்னிறுத்தி களம்காண உறுதிபூண்டுள்ளோம்! (நவூதுபில்லாஹ்!)

அல்லாஹ்வின் அச்சமில்லாமலும், மனசாட்சி இல்லாமலும் ஒற்றுமையை ஒருபொருட்டாக கருதாமலும், நம் சிறுபான்மையரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமலும் ஒரு காவிக்காரனுக்கோ அல்லது அக்காவிகாரனுக்கு காவடி எடுக்கும் ஒரு தலைவிக்கோ தன்னுடைய சுய கவ்ருவத்திற்காகவும் , தான் என்ற அதிகாரத்தை நிலைநாட்டும் எண்ணத்துடனும் அப்பாவி முஸ்லிம்களை அடகுவைக்கும் இந்த அக்கரம காரியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்! அவன் ஒருகனம் ஒர்விரலை சொடிக்கினால் போதும், உங்களின் ஆணவ ஆட்டமெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழிந்தொழிந்து போகும்!

இந்த மாதிரி வக்கர எண்ணமும், பிரிவினை குணமும், “தான்என்ற” தனிமை ஆட்சி மோகமும் கொண்ட கூட்டம் நம் இஸ்லாத்தில் இருக்கும் வரை இப்பூவுலக இறுதிநாள் வரை நம் சமுதாயம் ஒன்றுபடப போவதும் இல்லை, ஒற்றுமையடைப் போவதும் இல்லை.அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!

அன்பு சகோதரர்களே எந்த பிரமைக்கும் பிரமாண்டதிற்க்கும் மயங்கி விடவேண்டாம், கூலாங்கல்லால் யானைப்படையை வென்ற புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமக்கு வெற்றியை வல்ல இறைவன் தந்தருள்வானாக! மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by cnash (Makkah) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33583

ஒரு விரும்பத்தகாத முடிவை அறிவித்து இன்று தௌஹீத் ஜாமாத் என் வழி தனி வழி மட்டும் இல்லை மமக காங்கிரஸ்இல் இருந்தால் நாங்கள் பிஜேபியையும் ஏதாவது வெத்து காரணம் சொல்லி ஆதாரிக்க தயங்கமாட்டோம் என்று என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்;

உங்களின் ஆதரவு ஜெயாவிற்கு தேர்தல் நேரத்தில் கார்த்திக், சரத்குமார், வடிவேலு கொடுப்பது போல தான் பத்தோடு பதினொன்றுதான் என்று மேலே உள்ள அறிக்கை சொல்லாமல் சொல்லுகிறது.. இன்னும் இது போன்று ஆத்தூர் வெற்றிலை வியாபாரிகள் சங்கத்தில் இருந்து ஆவடி பொட்டிகடை சங்கம் வரை தேர்தல் நேரம் வரும்வரை ஆதரவு கொடுத்து கொண்டுதான் இருப்பார்கள் அதில் ஒன்றாக இன்று TNTJ யும் ஆகிவிட்டதை தான் என்னை போன்று அதன் தலைவர் மேல் மதிப்பு மரியாதை வைத்து இருக்கும் பலரால் சகித்து கொள்ளமுடியவில்லை..

உங்கள் மார்க்க சொற்பொழிவுகளாலும், சீர்திருத்த கருத்துகளாலும் ஈர்க்கப்பட்ட எங்களை போன்றவர்கள் இது போன்ற முட்டாள் தனமான முடிவுகளால் உங்களின் நம்பகத்தன்மையும், நிலைத்தன்மையும்தான் சந்தேககுரியதாக்கி மக்கள் மத்தியிலும் நகைபுக்குள்ளாக்கி இருக்குறீர்கள்..

எந்த கொள்கையில் அடிப்படையில் இந்த ஆதரவு?? நாம் கேட்ட இடஒதிக்கீடு கோரிக்கையை எற்றுகொண்டாரா? இல்லை தேர்தலுக்கு பின் மோடியை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதி தந்தாரா? இல்லை சிறையில் வாடும் அப்பாவி முஸ்லீம் மக்களை விடுவிக்கிறேன் என்று சொன்னாரா? இதையே மாற்றி மமகவிற்கு கருணாநிதி தந்தாரா என்றும் நீங்கள் கேட்கலாம் .. அப்படியென்றால் அவர்கள் அப்படி முடிவு எடுத்ததால் நீங்களும் இப்படி முடிவு தான் எடுப்போம் என்று சொன்னால் இதற்க்கு எதற்கு கொள்கை, குர்ஆன் ஹதிஸ் வழி எல்லாம்.

மார்க்கத்தில் உங்களுக்கு அல்லாஹ் அதிகமதிகம் ஞானத்தை தந்து இருக்கிறான் .. பல அறிவுபூர்வமான கருத்துகளையும். மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தி இன்று அறியாமையில் இருந்து பலரை சத்தியத்தின் பக்கம் கொண்டு வந்த உங்கள் பங்கு மகத்தானது அதற்கு என்றும் கடமைப்பட்டு இருக்கிறோம் அதற்க்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்க துஆ செய்கிறோம்.

ஆனால் அரசியல் என்பது அப்படிபட்டதல்ல.. உங்களுக்கு உள்ளதை விட அதை அவதானிக்கும் பலருக்கும் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற .அறிவும் ஆற்றலும் அதிகமாகவே உள்ளது.. உங்கள் வழிகாட்டுதலின் பேரில் செம்மறியாட்டு கூட்டம் போல் கண்ணை முடி கொண்டு கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ ஆதரிக்கும் நிலையில் உங்கள் அறிவுரையையும் சொற்பொழிவுகளையும் கேட்டு வளர்ந்தவர்களுக்கு இல்லை என்று உங்களுக்கு ஏன் புரியாமல் போனதோ தெரியவில்லை..

இன்றைய தேர்தல் அரசியல் சூழ்நிலை மிக குழப்பமானதாக உள்ளது ஒரு பலமான மதவாத எதிர்ப்பு கட்சி கூட இல்லை யாரை ஆதரிக்க வேண்டும் குழப்பம் தான்? ஆனால் மோடி என்ற ஒரு மிருகத்தை பிரதமராக்க ஒரு அதிகாரவர்க்கம் துடியாய் துடிக்கிறது .. இந்த நிலைமையில் எல்லா அரசியல் வல்லுனர்களும் தேர்தலுக்கு பின் ஜெயாவின் பிஜேபி ஆதரவு நிலை பற்றியே சொல்லும் வேளையில் நீங்கள் அதற்காகவாவது ஒரு உறுதிமொழி பெற்றீர்களா?

நீங்கள் இந்த சுயநல முடிவால் வரவிருக்கும் தேர்தலின் மூலம் 3-4 முஸ்லிம் MPகளின் பிரதிநிதித்துவம் கூட பாதிக்கப்படும் நிலை தானேவரும் இதையாவது கருத்தில் கொண்டீர்களா? உதாரனத்திற்க்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் பிஜேபி எல்லாம் ஒரு நியாயமான அளவில் ஓட்டை பிரிக்கும் அங்கே ஒரு தனி சக்தியா இருக்கும் முஸ்லீம்களின் ஓட்டினாலும் திமுகவின் ஓட்டினாலும் வெற்றி பெற இருக்கும் நம் முஸ்லீம் பிரதிநிதி உங்கள் சொல்லை வேதவாக்காக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் சிதறும் ஓட்டால் தோல்வியடைய வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

இதை நிலை தான் வேலூர், பாண்டிச்சேரி மத்திய சென்னையிலும் (முஸ்லிம் நின்றால்) ஏற்பட வேண்டுமா ?

மொத்தத்தில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெறாமல் போக தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு . முடிவெடுக்க முடியாமல் இருக்கும் இந்த தருணத்தில் குறைந்த பட்சம் முஸ்லீம்கள் நிற்கும் தொகுதியிலாவது ஆதரித்து விட்டு மற்ற தொதிகளில் சூழ்நிலை தகுந்தவாறு அந்தந்த பகுதியில் முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தாலும் முஸ்லீம்கள் வாழ்த்தி இருப்பார்கள் .

முன்பு ஒரு முறை 1999 பாராளுமன்ற தேர்தலிலும் 2001 சட்டசபை தேர்தலிலும் கருணாநிதி பிஜேபி யோடு தொடர்பு வைத்தார் என்று பலம் கொண்டு எதிர்த்தோம் .உங்கள் பின்னால் ஊர் ஊராக கருணாநிதி எதிர்ப்பு ஒட்டு கேட்டு வந்தோம் .. அது போன்ற சூழ்நிலை என்றால் இன்றும் வருகிறோம் . .. ஆனால் இன்றைய முடிவு யாருக்கும் உதவாது மாறாக நம்மை நாம் தான் காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறோம் என்பதை வருத்ததுடன் உங்களின் நலம் விரும்பு ஆயிரக்கனகானவர்களில் ஒருவராக சொல்லி கொள்ள விரும்புகிறோம் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அரசியல்
posted by Samu. A.B (Dubai) [08 March 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33586

http://youtu.be/u8hGTu72wTM

இந்த வீடியோவை பார்த்தால் நல்ல விளக்கம் கிடைகும்.. அரசியல இதுலாம் சகஜமப்பா.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by seyed mohamed (BangkokN) [08 March 2014]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 33587

நிறத்துக்கு தொகுத்தார் போல நிறம் மாற சொல்லி குடுக்க வேண்டிய அவசியம் இல்லை , இவர் வல்லமை படைத்தவர்

மற்ற கட்சில நடத்தார் போல இங்க நடக்க முடியாது கம்முநிஸ்ட் கட்சியை பார்துகிருங்கள்

அங்க வந்து வாழ ஆட்டுன அப்புறம் அறுப்பு தான்

அம்மாவின் ஆட்சில அம்மா வைப்பது தான் சட்டம் , இதுக்கு எல்லாம் பொருந்து போகணும் கட்சி வெற்றி பெற்ற பின்பு பிஜேபி உடன் இணைவது உறுதி அதுக்கு அப்புறம் ஒப்ரி வைக்க கூடாது

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இது எல்லாம் பழகி போனது தான் இருந்தாலும் நினைவு படுத்து கிரேன்

மாசலம்
இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok - 10500


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கொள்கை முடிவு!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [08 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33591

"த.மு.மு.க விலிருந்து பிரிந்த பின்னர், இது நாள் வரை, TNTJ அமைப்பினர், த.மு.மு.க / ம.ம.க. எந்த அணியில் இருக்கிறதோ அதற்கு மாற்று அணியில் தான் இருப்போம் என்று கொள்கையாகவே வைத்துள்ளனர். ஆனால், நமது சமுதாயத்தின் பலத்தை காட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தங்களது வீராப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, சமுதாயத்திற்காக ஒரே அணியில் திரண்டு நமது பலத்தை காட்டுவோம்." (C&P) இது நான் இந்த இணையதளத்தில் பதிந்த கருத்து # 32806 தேதி 27.01.14

அந்த கொள்கை முடிவை இப்போது அறிவித்து இருக்கிறார்கள். கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது? '

"இது பரதேசி. பண்டாரிகளின் கூட்டம்" இந்த பொன்மொழியை, 1999-ல் பா.ஜ.க ஆட்சியை ஜெ. கவிழ்பதற்கு முன், பா.ஜ.க -வை குறிப்பிட்டு கலைஞர் உதிர்த்தார். பா.ஜ.க ஆட்சியை, ஜெ கவிழ்கிறார் என்றவுடன், அதே கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, பின்னர் கூட்டணியும் வைத்தார்.

இதை எதற்கு கூறினேன் என்றால், இதை போலத்தான், TNTJ வினரின் கொள்கையும்.

மற்ற தேர்தல்கள் போல் இல்லாமல், இந்த தேர்தலில், காங்கரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தமிழ் நாட்டை பொருத்தவரை, தி.மு.க தலைமையில் ஒரு அணி. பா.ஜ.க தலைமையில் ஒரு அணி. தனித்து அ.தி.மு.க.

பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறாது என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான், தே.மு.தி.க வை தங்கள் அணியில் சேர்த்தால், அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து, அ.தி.மு.க அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். தேர்தலுக்கு பின்னர், ஆட்சி அமைக்க அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கும்.

அ.தி,மு,க வின் இந்த மறைமுக முடிவு, சாமானியன் முதல் அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படும் தேர்தல் கணிப்பாளர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்க , இவர்களுக்கு (TNTJ) தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள், நம் சமுதாயத்துக்கு பாதகமான முடிவை எடுத்ததற்கான காரணத்தை வல்ல அல்லாஹ்வே அறிவான். அவன் தான் சூழ்ச்சியாலர்களுக்கு மேலான சூழ்ச்சியாளன்.

அதற்காக, தி.மு.க, யோக்கியமான கட்சி என்று வக்காலத்து வாங்க முடியாது. தற்போதைய அரசியல் சூழலில் தி.மு.க பரவாயில்லை. அவ்வளவு தான். மேலும், நம் இரண்டு சமுதாய கட்சிகள் அந்த கூட்டணியில் இருப்பதால், அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க நாம் கடமை பட்டுள்ளோம்.

சகோதரர் cnash அவர்களின் கருத்தில் சிறிய நினைவூட்டல் செய்கிறேன். 2001 சட்டமன்ற தேர்தலில், ஒருங்கிணைந்த த.மு.மு.க (அப்போது PJ அவர்களும் அதில் இருந்தார்), பா.ஜ.க உடன் தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், பல தொகுதிகளில், அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தெரிவித்து இருந்தனர்.

'அண்ணன்' சொல்வதே வைர வரிகள் என்று தம்பிமார்கள் இருக்கிறார்களா? அல்லது அல்லாஹ் தந்த பகுத்தறிவை பயன்படுத்தி, இந்த தேர்தலில் சமுதாயத்துக்கு எது நல்லது என்று முடிவு எடுக்கிறார்களா? பொறுத்து இருந்து பாப்போம்.

வல்ல ரஹ்மான், நம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்த போதுமானவன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [08 March 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 33592

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் அச்சமில்லாமலும், மனசாட்சி இல்லாமலும் ஒற்றுமையை ஒருபொருட்டாக கருதாமலும், நம் சிறுபான்மையரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமலும் ஒரு காவிக்காரனுக்கோ அல்லது அக்காவிகாரனுக்கு காவடி எடுக்கும் ஒரு தலைவிக்கோ தன்னுடைய சுய கவ்ருவத்திற்காகவும் , தான் என்ற அதிகாரத்தை நிலைநாட்டும் எண்ணத்துடனும் அப்பாவி முஸ்லிம்களை அடகுவைக்கும் இந்த அக்கரம காரியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்! அவன் ஒருகனம் ஒர்விரலை சொடிக்கினால் போதும், உங்களின் ஆணவ ஆட்டமெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழிந்தொழிந்து போகும்!

இந்த மாதிரி வக்கர எண்ணமும், பிரிவினை குணமும், “தான்என்ற” தனிமை ஆட்சி மோகமும் கொண்ட கூட்டம் நம் இஸ்லாத்தில் இருக்கும் வரை இப்பூவுலக இறுதிநாள் வரை நம் சமுதாயம் ஒன்றுபடப போவதும் இல்லை, ஒற்றுமையடைப் போவதும் இல்லை.அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!

அன்பு சகோதரர்களே எந்த பிரமைக்கும் பிரமாண்டதிற்க்கும் மயங்கி விடவேண்டாம், கூலாங்கல்லால் யானைப்படையை வென்ற புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமக்கு வெற்றியை வல்ல இறைவன் தந்தருள்வானாக! மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக!

COPY & PASTE FROM BR.SULTAN COMMENTS.. AGREE THE SAME STATEMENT...

UNITE WE STAND - DIVIDE WE FALL : THIS IS FACT & REALITY

FEARING ALMIGHTY ALLAH (TAQWA) IS VERY IMPORTANT... EVERYONE OF US TOUCH OUR HEART AND THINK..

MAY ALMIGHTY ALLAH PROTECT THE UMMAH FROM EVIL AND DEVIL LEADERS.. AMEEN.

V.M.T.MOHAMED HASAN
HONG KONG.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by shajahan m m (chennai) [08 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33593

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவறான முடிவு எடுக்காது, இன்ஷா அல்லா தலைமையே இத தெளிவா விளக்குவாங்க..அவசரப்பட்டு வார்த்தைய விட்டுடாதீங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [08 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33594

அஸ்ஸலாமு அழைக்கும் ,

சமுதாயம் ஒன்றாக ஒரு பக்கத்தில் நிட்கும் போது பீ . ஜே என்றும் தனியாக இருப்பார் ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் கண்டிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்பக்கம் இருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் சமுதாயத்தின் நலனுக்கான முடிவை தங்கள் வாக்கின் மூலம் காட்டுவார்கள்

இந்த அமைப்பின் மக்களுக்கு நாட்டின் நிலை அவற்றை நம் சமுதாய நலனுக்கு நாம் எப்படி பயன் படுத்தனும் என்பதை அந்த அமைப்பில் உள்ள அனைவரும் நன்கு அறிவார்கள் இந்த தலைவரின் சொல் வாக்கு அந்த மக்களிடம் எடுபடாது என்பது இன்ஷா அல்லா கணிப்பாக நமக்கு தெரியவரும் பொறுத்திருந்து பாருங்கள் .

ஜெயாவுக்கும் , பிஜேபி கூட்டணிக்கும் போடும் ஓட்டுகள் கண்டிப்பாக நம் முஸ்லிம் சமுதாயத்துக்கு போடும் வேட்டுகள் என்பதை அணைத்து முஸ்லிம் சமுதாயமும் நன்கு உணர்ந்து உள்ளது என்பது உண்மை அதனை தந்த பீ . ஜே வும் நன்கு அறிவார் ஆனால் காரணம் . காசு , பணம் , துட்டு , மணி ... மணி புளூஸ் ( மின்னல் ஹபீபு தான் ) இந்த விசயத்தில் இந்த அமைப்பின் மக்கள் மற்ற முஸ்லிம் கட்சிகள் , அமைப்புகள் போன்று தலைவர் சொல்லுக்கு தலையை ஆட்டாமல் சமுதாய நலனில் அக்கரை கொண்டு செயல்படுபவர்கலாக இருப்பார்கள் .

அந்த அறிக்கையை கூட பீ . ஜே வெளிவிட வில்லை அம்மா வின் ஓப்புதல் பெற்று அவருடைய கட்சி வெளிவிட்டுள்ளது .

நமக்கு இது வெல்லாம் ஒரு பெரிய காரியம் இல்லை என்றாலும் இந்த சமுதாயம் இந்த சூழ்நிலைகளிலு ஒற்றுமையாக இருக்க முடிய வில்லை என்ற ஒரு வருடம்தான் .

எந்த தலைவன் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும் நமது முஸ்லிம் பொது மக்கள் அனைவரும் , அவைகளை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சமுதாய நலனில் ஒற்றுமையாகவும் நாட்டின் நலனில் சிந்தித்து செயல் படும் தருணம் இதை நம் சமுதாயம் நல்ல முறையாக பயன் படுத்தி நம் நாட்டின் மத சார்பின்மைக்கு குந்தகம் வராத அளவு நம்முடைய செயல் பாடுகளை அமைக்க வேண்டும் .

கரசேவை நாயகி , மத மாற்று தடை சட்டம் , முஸ்லிம் ஒதுக்கீடுக்கு எதிரான செயல்பாடு மோடிக்கு மறைமுகமாகவும் , நேரிடையாகவும் ஆதரவு போன்ற அம்மாவின் செயல்பாடுகளை சமுதாயம் நினைவில் வைக்கணும் இன்ஷா அல்லாஹ் நினைவில் வைக்கும் .

மஞ்சள் துண்டு யோகியன் என்று சொல்ல வரவில்லை ஆனால் நாம் கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அரசியல் நடத்தனும் நம் முஸ்லிம் சமுதாயம் இதுதான் காலத்தின் கட்டாயம் தேவையும் கூட ........ சமுதாயம் அதனை கண்டிப்பாக செய்து காட்டும் என்ற நண்பிகையுள்ளது ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அல்லாஹ் அவன் நாடியவர்களை உயர்த்துவான்- அவன் நாடியவர்களை கேவலப் படுத்துவான்
posted by mackie noohuthambi (chennai) [08 March 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33595

சென்னை கடற்கரையில் நடந்த வாழ்வுரிமை மாநாடு அது.பீஜே அவர்கள் ஒரு இஸ்லாமிய புரட்சி தலைவராக அடையாளம் காட்டப்பட்ட காலம் அது..

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முஸ்லிம் மக்களிடம் அளிக்கப்போவதாக அவர் பிரகடனப் படுத்தியபோது ஒரு மறுமலர்ச்சியை நோக்கி, விடிவெள்ளி தெரிவதாக எண்ணி, விடியலை தேடி விடலைப் பருவ இளைஞர்கள் அவர் பக்கம் அலை அலையாக திரண்டு சென்ற ஒரு கனாக் காலம் அது.

அந்த மாநாட்டிலே புரட்சி தலைவி அறிவிக்கிறார்கள். BJP யுடன் கூட்டணி வைத்த தவறை நான் உணர்ந்து கொண்டேன், இனி ஒருபோதும் அவர்களுடன் எந்த நிலையிலும் கூட்டு சேரமாட்டேன், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுத் தருவேன் என்று அவர்கள் முழங்கியபோது இஸ்லாமிய சமுதாயத்துக்கு பீஜே மட்டுமல்ல அம்மா அவர்களும் ஒரு விடிவெள்ளியாக காட்சி தந்தார்கள்.

கும்பகோணம் குலுங்கியது உண்மை தஞ்சாவூர் நாம் தலை நிமிர்ந்து நிற்க உதவியது உண்மை. ஆனால் காலப் போக்கில் இவை நிஜமல்ல, கதை என்று முஸ்லிம்கள் உணர தலைப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பல பிரிவாக பிரிந்து மனித நேய மக்கள் கட்சி என்று ஒரு அரசியல் கட்சியாக உருமாறியது.

இப்போது அரசியலிலும் அவர் நிலைப்பாடு அவரது முகமூடியை அம்பலப் படுத்துகிறது. அம்மா அவர்கள்,காங்கிரசையும் திமுகவையும் எல்லாக் கூட்டங்களிலும் தாக்கி மத்தியில் காங்கிரஸ் வரக் கூடாது என்கிறாரே தவிர மதவாத பிஜேபி யும் வரக்கூடாது என்று அவர் முழங்கியிருந்தார் என்றால், அவரது மூன்றாவது அணிக்கு நாம் ஆதரவு அளிக்கலாம். ஆனால் கருத்து கணிப்புக்கள்படி நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்புடன் பிஜேபி அரியணை ஏறக் காத்திருக்கிறது. அந்த நிலை ஏற்படும்போது தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும்போது புரட்சி தலைவி கைகொடுத்து உதவுவார்கள் இந்த பிஜேபி-அதிமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்.

பீஜே அவர்கள் முஸ்லிம்களுக்காக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா அல்லது தனக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் திமுகவின் கூட்டணியில் இருப்பதால் நாம் அதற்கு எதிரணியில் இருக்க வேண்டும் என்று நினைத்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா அல்லது அம்மா அவர்கள் தேர்தல் கூட்டங்களில் சொல்லிவருவதுபோல் இஸ்லாமிய அமைப்புக்கள் அதிக ஒதுக்கீடு கேட்பதை பரிசீலனைக்கு அனுப்பி இருப்பதாக சொல்கிறாரே அதை நம்பி அவருக்கு ஆதரவு தருகிறாரா.

அவரது வாக்குறுதிகள் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளவை என்பதை ஏற்கெனவே அவருடன் கூட்டணி அமைத்து நொந்து நூலாகி படுத்த படுக்கையாக கிடக்கும் வாஜ்பாயை கேட்டுப் பாருங்கள். புழுதியாக பறக்க விடப்பட்ட புரட்சிப் புயலை வைக்கோவை கேளுங்கள் ஆணடவனுடன் கூட்டு மக்களுடன் கூட்டு என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் அம்மாவுடன் கூட்டு சேர்ந்து சிதறி சின்னாபின்னப் பட்டு நிற்கும் விஜயகாந்தை கேளுங்கள். இறுதியில் கொள்கைகளே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழும் காம்ரேடுகள் அவமானப் பட்டு அர்த்த ராத்திரியில் பெட்டி படுக்கையுடன் வெளியேறிய அவல நிலையை பாருங்கள்.

ஒருகாலத்தில் உயரத்தின் உச்சத்தில் இமயமலையாக நின்ற பீஜே இப்போது அந்த இமயமலையின் அடிவாரத்தில் அடையாளம் தெரியாமல் சிதறிக் கிடக்கின்ற கூழான் கற்களைப் போல் ஆகிவிட்டார்களே என்று எண்ணும்போது, அல்லாஹ்வின் திருமறை வசனம் என் கண்முன் வந்து நிற்கிறது.

"அவன் நாடியவர்களை உயர்த்துவான், அவன் நாடியவர்களை கேவலப் படுத்துவான், அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான் அவன் நாடியவர்களிடமிருந்து அதனை பறித்துக் கொள்வான். அவன் மிக்க சக்தி வாய்ந்தவன்" .

அல்லாஹ்வின் வல்லமையை யார்தான் கணக்கிட்டு சொல்ல முடியும் அல்லாஹ் மிக அறிந்தவன்.

பீஜே அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by farook (ksa) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33597

தூய அரசியல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [08 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33599

ஏற்கனவே மக்கா மஸ்ஜித் இமாம் சொன்னதை உண்மை என நிருபித்திருக்கிறார் TNTJ வின் தலைவர். மறைமுகமாக காவிக்கு கைகொடுக்க முன்வந்துள்ளனர். இஸ்லாமிய வாக்காளர்களே சிந்தித்து செயல்படுங்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இயக்கத் தலைவரின் மந்தைகளாய் மாறிடாமல், சிந்தித்து செயல்படுவோம்!
posted by Khatheeb (Doha) [08 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33606

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீன் [விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்] அல்ஹம்து லில்லாஹ் [சமுதாயத் துரோகிகளை மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாக உலகிற்கு அடையாளம் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்]

நண்பர் சீனா, மக்கீ காக்கா, சகோ. அஹ்மது சுலைமான், காயல்பட்டணம்.காம் இணையத்தளம் உள்ளிட்ட ஊடகங்களில் கருத்து தெரிவித்த அனைத்து சகோதரர்கள் மற்றும் தமிழ் பேசும் உலகளாவிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் உள்ளக் குமுறல்களும், ஆதங்கங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, தமிழக இயக்க பலூன்களில் ஒன்றான ததஜ வின் நிலை வேறொரு கோணத்தில் பயணிப்பது என்பது அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை அறிந்தோர் சபையினில் ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

ஸ்பெயினில் முஸ்லீம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் என்ற சிற்றேடோ, “மால்கம் எக்ஸ்” நூலில் வரும் எலிஜா முஹம்மதோ, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய அல்தாஃபியின் முன்னறிவிப்போ இத்தருணத்தில் யாருக்கும் ஞாபகத்தில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

புரிந்துக் கொள்ளுங்கள்! பொது எதிரி மோடி என்பதை நன்கு உணர்ந்து செயல்படுங்கள். நாம் ஒன்றிணைந்து சிந்தாமல் சிதறாமல் நம் வாக்கு வன்மையை ஒருமுகப்படுத்தி செலுத்தி, நம் சமுதாயத்தின் பிரதிநிதிகளை மகத்தான வெற்றி பெற வைத்தே தீர வேண்டும்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [08 March 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33607

Although Expected, this is a very bad & shocking decision by TNTJ.

Things like this to decide on whom to vote & whom not to vote should stay with the people & not from the religious authorities. PJ should refrain from taking decisive steps when it comes to Politics. Hope & wish non of the TNTJ enthusiasts will agree on this.

His political decisions are purely Vendatta on individuals and not on the interests of the Muslim community. When he can call the entire Muslim community for his Marches, he doesn't even have the courtesy to support them when it comes to Voting.

I am sure people even in the TNTJ will vote for the Muslim candidates wherever they are in the Fray..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Cnash (Makkah) [08 March 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 33608

நேற்று TNTJ வால் எடுக்கப்பட்ட இந்த முடிவு அறிவிற்கும், அறிவிற்கும் சிந்தனைக்கும், கொள்கைக்கும் என் மனசாட்சிக்கும் ஏற்புடையதாக இல்லை இது போன்றே பலருக்கும் இருந்து இருக்கும் . .ஆனால் ஒரு சிலர் இந்த நிகழ்வை சாதகமாக்கி என்றும் PJ வசைவு ஒன்றையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் சகோதரர்கள் அசைபோட்ட வாய்க்கு அல்வா கிடைத்தது போல் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி குரோத விரோத வார்த்தைகளுக்கு இதை வடிகாலாக கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இயக்கம் தவறான முடிவு எடுக்கும் போது அது தவறு என்று தெரியும் பட்சத்தில் சுட்டி கட்டுவது தான் உண்மையான நல விரும்பியாக இருக்க முடியும் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டும் பொம்மையா இருக்க வேண்டுமானால் அறிவாலயதிர்க்கோ போயஸ் கார்டனுக்கோ தொண்டனாக இருந்து விட்டு போய் விடலாம் எதற்கு கொள்கை கோட்பாடு எல்லாம் .

இது சென்ற சட்டமன்ற தேர்தலில் ஊழல் சந்தர்பவாத திமுகவை ஆதரித்த போதும் அவரில் நிலைபாட்டை எதிர்த்தவன் தான் . எதையும் கண் மூடி பின்பற்ற கூடாது பகுத்தறிவு கொண்டு கேள்வி கேட்க வேண்டும் என்பது கூட அவர் கற்று தந்தது தான்...

நம்மில் சிலர் பெருமையாக சொல்லி கொள்வதை போல ஆயுள்வரை அறிவாலயம் என்றோ அகிலம் உள்ளவரை அம்மா என்றோ சொல்லி மடமையில் அலையாமல் நமக்கு நம் சமூகத்திற்கு எது நன்மை பயக்கும் என்று சூழ்நிலை கருதி முடிவு செய்யுங்கள் .. அறிவாலயத்திர்க்கும் , அம்மாவிற்கும் நம்மை அடமானம் வைக்க வேண்டாம் . இப்படி நான் மதிக்கும் PJ யை கூட கடினமாக விமர்சிக்க காரணம் நமக்கு கிடைக்கும் முஸ்லிம் எம்பிக்கள் கூட கை விட்டு போய் விட கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் ....மாறாக இன்றும் என்றும் கருணாநிதியையும் ஜெயாவையும் ஒரே தட்டில் வைத்து தான் பார்க்கிறோம் ..

ஜெயா எப்படி தேர்தலுக்கு பின் மாறலாம் என்று சந்தேகம் உள்ளதோ, அதே சந்தேகம் கருணாநிதியில் மீதும் இன்றும் உள்ளது தன சந்தர்ப்பவாதத்தை முன்பு கட்டியவர் தான் அவரும் .. எனவே TNTJ யில் முடிவை குறை சொல்லியதால் கருணாநிதி உயர்ந்து விட வில்லை ..

ஆனால் தேர்தலுக்கு பின்னும் , முஸ்லீம் லீக்கோ, மமகவோ, விடுதலை சிறுத்தைகளோ, கம்யூனிஸ்ட்களோ ஒரு போதும் பிஜேபி பக்கம் கூட தலைவைக்க மாட்டார்கள் என்று நமக்கு தெரியும், இந்த TNTJ வின் நிலைபாட்டல் நம் ஒட்டு பிரிந்து அவர்கள் வெற்றியும் பாதிக்கபட்டு விடகூடாதே என்பது தான் எங்கள் ஆதங்கம் ..

நாளை முஸ்லிம்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் பார்லிமென்ட்இல் முன்னின்று குரல் கொடுப்பதும் நம் சகோதர அமைப்புகளும், பாசிசத்தை என்றும் வெறுக்கும் விசிக போன்ற கட்சிகளும் தான். திமுகவோ , அதிமுகவோ இல்லை அவர்கள் தங்கள் கட்சிக்கு தான் கத்துவார்கள் .. முன்பு மோடி விஷா விஷயத்தில் கூட இது தான் நடந்தது .. இனியும் அது போல் தான் நடக்கும் துணிந்து கையெழுத்து போட்டது சிறுத்தைகளும் , முஸ்லீம் கட்சிகளும் தான் ..

எனவே TNTJ தனது அரசில் கொள்கை முடிவுகளின் இருந்து தள்ளி இருப்பதே நல்லது .. சிறந்தது எது என்று தேர்தெடுக்கும் உரிமையும் திறமையும் மக்களுக்கு உண்டு . மற்ற படி PJ அவர்கள் பணதிர்க்கோ பதவிக்கோ விலை போகின்றவர் இல்லை என்பது அவரை எதிர்க்கும் தலைவர்களுக்கும் தெரியும் ..அவரின் இந்த நிலைபாட்டின் மீது வேறுபாடே தவிர அவர் மீது வைத்திற்குக்கும் நம்பிக்கை, மதிப்பின் மீது எந்த மாறுபாடும் இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வெறும் வாய்க்கு அவல்
posted by M. Sajith (DUBAI) [08 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33609

மமக வும் முஸ்லீம் லீக்கும் அதிமுகவை ஆதரித்தால் வராத விமர்சனம் ததஜ செய்தால் மட்டும் செய்யும் இவர்களில் பலருக்கு உள்ளூர ஒரு புலங்காகிதம், வெறும் வாய்க்கு அவல் கிடைத்து விட்டதே.. விடுவார்களா.

3.5 சதவீதம் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் கிடைத்த கதை தெரிந்த வர்களுக்கு அதற்கு காரணமாக இருந்த, இட ஒதுக்கீட்டிற்கான ஆணையம் 2006ல் (ஜெ) அமைத்ததும் அதன் பரிந்துரையின் அடிப்படையில் அவர் இட ஒதுக்கீடு கொடுக்க அவருக்கு நிர்பந்தமானது என்பதும் தெரியாதா என்ன? இருந்தாலும் அதை சொல்ல நம்ம கலைஞர் பக்தர்களுக்கும் சரி, சமுதாய தாய் சபைக்கும் சரி சொல்ல வாய் வருவதில்லை.

அதற்கு முன்னர் (1996-2001)திமுக ஆட்சியில், வழமை போல தலீவரை புகழ்ந்து தள்ளிவிட்டு இட ஒதுக்கீடு கேட்ட லத்தீப் சாகிபை, "நாட்டிலே குழப்பத்தை உண்டுபண்ணுகிறீர்களா ?" என்று கேட்ட மௌனம் ஆக்கிய தலீவர், இந்த ஆனையத்தின் பரிந்துரைக்குப்பின் 'மூடிக்கிட்டு' இட ஒதுக்கீடு கொடுக்க நேர்ந்த கதைகள் யாரும் சொல்லவே இல்லையா? - விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்

இப்போதும் இட ஒதுக்கீடுக்கு ஓர் ஆனையம் அமைத்து இருக்கிறர் முதல்வர், இட ஒதுக்கீடை அடிப்ப்டையாக வைத்தே எங்கள் ஆதரவு அமையும் என்று முன்னரே அறிவித்து இருந்த ததஜ.

ஆனையம் என்னும் அளவிளாவது இட ஒதுக்கீடு விஷயத்தில் ஒத்துழைக்க முன்வரும் முதல்வரின் தலைமையிலான கட்சி, ஆனையம் தான் இதற்கு முன் கிடைத்த இட ஒதுக்கீடு, சமுதாயா காவலன் 'தலீவர்' மனதாரா தந்தது இல்லை என்ற உண்மை, இதன் அடிப்டையில் அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்தது என்ன ஆச்சர்யம் !!

எதற்கு குதிக்கிரார்கள் வாணத்துக்கும் பூமிக்கும், சிறு கூட்டம் என்று சொல்லும் இவர்களால் விட்டுத்தள்ளவாவது முடிகிறதா?

மாமாகவினால் ஒரு நன்மை வந்து இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், வழமையாக மஞ்சள் துண்டு தலீவர் ஒரு முஸ்லிம் சமுதாய கட்சிக்கு ஒரு சீட்டு பிச்சை போடுவார் இன்று அவரையே ஏமாற்றி இரண்டு சீட்டு பிச்சை வாங்கிய வெற்றிதான் அது.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. சப்பை கட்டும் தம்பிமார்கள்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [08 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33610

தம்பி சாஜித், 'அண்ணனின்' தம்பிமார்கள், அவரின் அனைத்து விஷயங்களுக்கும் சப்பைகட்டு கட்டுவார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால் உங்களை போன்று உலக ஞானம் உள்ளவர்களும் அதை சரிகான்பதுதான் வருத்தமாக உள்ளாது.

இந்த தேர்தலில், எந்த முஸ்லிம் அமைப்பு யாருக்கு வால் பிடிக்கிறது? என்பது அல்ல கேள்வி. தேர்தல் முடிந்த பின்னர், ஜெ, கண்டிப்பாக முஸ்லிம்களின் பொது எதிரியான பா.ஜ.க உக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது, பா.ஜ.க வினரே ஒத்துக்கொள்ளும் விஷயம். அப்படி இருக்கும்போது, ஜெயலலிதாவை த.த.ஜ வினர் ஆதரிக்கும் சூட்சமம் என்ன? என்பது தான் இப்போதைய குற்றசாட்டு.

இந்த தேர்தலில், 'அண்ணன்' எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல், உங்களின் 'மனசாட்சியின்' அடிப்படையில் வாக்களியுங்கள் என்று, தங்களது இயக்கத்தினருக்கு சொன்னால்...., அந்த அமைப்பினர் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? (ம.ம.க உக்கு எதிரான கூட்டணி என்று எண்ணாமல்)

நான் தி.மு.க வை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஆள் இல்லை. அதே நேரத்தில், கலைஞர் தந்த 3.5% இட ஒதுக்கீடுக்கு ஜெ.தான் காரணம் என்று நீங்கள் சொல்வதை பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. 2006-ல் ஜெ. கமிஷன் போட்டதாக சொல்லும் நீங்கள், அவர் நேரடியாகவே, இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாமே?

ஆனால், ஆந்திராவில், காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுத்ததை எதிர்த்தவர் தான் இந்த ஜெயலலிதா என்று மறந்து விட்டதா?

3.5% ஒதுக்கீடு போதாது என்று த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இப்போது மீண்டும் ஆணையம் அமைப்பதற்கு பதிலாக ஒதுக்கீட்டை அதிகரித்து இருக்கலாமே?

இந்தியாவில், எந்த ஒரு பிரச்சனைக்கும், 'கமிஷன்' (ஆணையம்) போடப்படுகிறது என்றால்... அந்த பிரச்னையை கிணற்றில் போடுகிறார்கள் என்ற அர்த்தம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ரு புரட்சித்தலைவியின் பெயர் யாருக்காவது தெரியுமா?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [08 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33611

ஆந்திர அரசாங்கம் முஸ்லிம்களுக்கு 5% இடஒதிக்கீடு செய்ததை விமர்சித்து,இப்படி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிட்டால்,மற்றைய எல்லாப்பிரிவினரும் வருசையாக வந்து நிற்ப்பார்களே,என்று இஸ்லாமியர்களுக்கு கொடுத்த இடஒதிகீ ட்டை வன்மையாக கண்டித்த ஒரு புரட்சித்தலைவியின் பெயர் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by farook (ksa) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33613

இந்த முடிவு எதோ தவறா எடுத்ததா சொல்லுகிறார்கள் . அப்படி எடுத்து இருந்தால் நீங்க அந்த தலைமைக்கு எடுத்து சொல்லி மாற்ற சொல்லுங்கள் . இது திட்ட மிட்டு நம்மை பிரிக்கும் முயற்சி . எதோ பீஜே வாழ் தான் 3.5 இட ஒதுகீது கிடைத்ததாம்?? இப்ப அதிக இடஒதுக்கீடுக்கு அந்த அம்மா உத்திரவாதம் தந்தாச்சா ?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Right man in the wrong party
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33615

நான் எழுத நினைத்ததை சகோதரர் சீனா எழுதியுள்ளார் , சுல்தான் காக்காவும் அழகாக எழுதியுள்ளார்...

கலைஞர் ஆட்சியில் கக்கூசுக்கு போனால் கூட கொடிபுடித்த நீங்கள் அம்மா ஆட்சியில் அடக்கி வாசிப்பது ஏன்? "இதற்க்கு தான் ஆசை பட்டாயா பாலகுமாரா?

மாமா கட்சியை (உங்கள் கொச்சை பாசையில் ) எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் அம்மையாரை ஆதரித்து மீடியாக்கள் சொல்லும் பாம்புக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ பால் வார்த்து இருக்கிறீர்கள்...

21 நூற்றாண்டின் தலை சிறந்த ஒரு மார்க்க அறிஞர் நீங்கள் உங்கள் பேச்சால் , எழுத்தால் , கருத்தால் தமிழகத்தையும் ,தமிழ் பேசும் சமுதாயத்தையும் மாற்றியவர் , போலியோவை இந்தியாவில் இருந்து ஒழித்ததுபோல , வரதட்சனையை தமிழகத்தில் இருந்து ஒழித்தவர். எந்த "காரணமும்" இல்லாமல் வீட்டுக்கு வீடு "காரணம்" ஓதிய காயலை மாற்றியவர்.........நீங்கள் மார்க்கத்தில் டபுள் ஓகே

ஆனால் அரசியலில் ரொம்ப வீக்...அரசியலில் நீங்கள் தடுமாறுகிறீர்கள் சகோதர இயக்கத்தை வஞ்சம் தீர்க்க நினைகிறீர்கள்..

நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை அரசியலில் எல்லோரும் நமக்கு தீமை செய்தவர்கள்தான் யாரு நமக்கு கம்மியாக தீமை செய்தவர்களோ அவர்களை ஆதரிக்கலாம் என்டீர்களே ...பொது எதிரியை வீழ்த்துவதற்கு இதை செய்யலாமே ...

நீங்கள் அழகாக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து உங்கள் சார்பாக ஒரு 5 MLAஉம், 3 MPயும் அனுப்பினால் I will be very happy see to our representation in the Assembly & parliament of our beloved nation & let muslim league and TMMK go in their own right way to have our extra representation,casting vote without representation is waste... நம்மோடு விளையாடும் அரசியல்வாதிகளோடு நீங்களும் விளையாடுங்கள் மாறாக சகோதரர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வெற்றியை வீணடித்து விடாதீர்கள்...

மீடியாக்கள் சொல்லும் மாற்றம் வந்தால் தமிழகத்தில் TMMK & TNTJ யையும் தடை செய்து விடுவார்கள்...

நீங்கள் சொல்லும் இதே இட ஒதுக்கீட்டை ஆதரித்துதான் MMK அம்மாக்கு ஆதரவு வழங்கியது ...2 வருடம் ஆகிவிட்டது ஒரு வார்த்தைகூட அம்மா பேசவில்லை....உங்களுக்கு எப்படி தருவார்..சற்று சிந்தியுங்கள் ..

ELECTIONIL பொது எதிரியை அறியாமல் கூவினால்
-------------------------------------------------
"ஒரு கோழியின் கவிதை"
காலையில் "கொக்கரக்கோ" என்றேன் மாலையில் "குக்கருக்குள்" வெந்தேன்.
--------------------------------------
இதுதான் நடக்கும் எனவே இன்றைய நிலை அறிந்து உங்கள் முடிவை தயவு செய்து மறுபரிசீலினை செய்யுங்கள்...

Kind courtesy
S.A. Ayesha Hannan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. கலைஞர் பாசம்
posted by M. Sajith (DUBAI) [08 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33617

/கலைஞர் தந்த 3.5% இட ஒதுக்கீடுக்கு ஜெ.தான் காரணம் என்று நீங்கள் சொல்வதை பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. 2006-ல் ஜெ. கமிஷன் போட்டதாக சொல்லும் நீங்கள், அவர் நேரடியாகவே, இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாமே? //

ரஜாக் காக்காவுக்கு கலைஞர் பாசம் கண்களை மறைக்கிறது... இதுவும் அதற்கு முன்னர் லத்தீப் சாகிபை வாயடைத்து உட்கார வைத்ததும் முழுக்க உண்மையான சம்ப்வங்கள் தாம்.

ஒரு தீர்ப்பானையத்தின் அடிப்ப்டையில் கிடைத்தது நியாமான முறையில் கிடைத்தது, யாரையும் சந்தோசப்படுத்த கிடைத்தது இல்லை - வன்னியர்கள் மரங்களை வெட்டி வழி மறித்தார்கள் என்று MBC என ஒரு உட்பிரிவை ஏற்படுத்தினாரே அதுபோல இல்லாமல், முறையாக செய்தால் தடை உத்தரவுகள் வாங்கவோ, அந்த ஆய்வரிக்கையின் தீர்புகளை மாற்ற இன்னும் ஒரு ஆனையமும் அறிக்கையும் வேண்டும் என்பதும் உங்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை - இருந்தாலும் உங்களின் கலைஞர் பாசம் அப்படி.

நியாமான சமுதாய அக்கரையுள்ளவர்களாக இருந்திருந்தால், திமுக வில் மமகவும் லீக்கும் அணி சேரும்போது இப்படி ஒற்றை சீட்டுக்காக, இன்றுவரை பிஜேபி யுடன் அணி சேரமாட்டோம் (தேர்தலுக்கு பிறகும்) என்று வாக்களிக்காத திமுகவிடம் சேருகிறீர்களே என்றும் கொதித்து இருக்கவேண்டும் - எங்கே போனது உங்கள் சமுதாய அக்கரை.

இனி திமுகவை விட்டால் அரசியல் அரங்கத்தில் சமுதாய கட்சிகள் ஏதுமில்லை, தலீவர் அடுத்த தேர்தலில் உள்ளத்தில் இடம் தருவார் அதையும் வாங்கி சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள்.

இதற்கும் மேல் உங்கள் சமுதாய அக்கரையை கேட்டு எழுதினால் வழமை போல அட்மின் கத்தரி வைத்துவிடுவார்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. P J அவர்களே...! வருகின்ற காலத்தில் நீங்கள் தனிமை படுத்த படுவீர்கள்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33620

அவர்களாவது எம்.பி.ஆவதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் ! பி ஜே நீங்கள் எதற்காக ஆதரவு கொடுக்கிறீர்கள் ? ம ம க தோக்குறதுக்குத்தானே ! சபாஷ்.. சபாஷ்.. மக்கள் இன்னுமா விளங்காமல் உள்ளார்கள்..! P J அவர்களே...! வருகின்ற காலத்தில் நீங்கள் தனிமை படுத்த படுவீர்கள்..

இதுதான் சமுதாயத்துக்கு நீங்கள் வாங்கித்தர்ற இட ஒதுக்கீடு லட்சணமோ..?

உங்கள் மீது நல்ல அபிப்ராயம் வைத்திருந்த பல ஆயிரம் தவ்ஹீது சகோதரர்கள் இந்த விசியத்தில் உங்களின் சப்பை காரணகளை கேட்க தயாரில்லை என்பதே உண்மை..

உங்களின் இந்த நடவடிக்கையால் பலரின் முகசுளிப்பை வாங்கி கட்டி கொட்டிகொண்டீர்கள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. மோடிக்கு ஆதரவா?
posted by NIZAR (KAYALPATNAM) [09 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33623

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன் ஆதரவை அதிமுகாவுக்கு அளித்ததில் ஒன்றும் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. அவர்களின் தாரக மந்திரம் என்னவெனில் மனித நேய மக்கள் கட்சி எங்கு உள்ளதோ, அதன் எதிரணியில் பொய் சேருவதுதான். வேறு எந்த கொள்கையோ கோட்பாடோ இந்த விசயத்தில் இல்லை.

ஜெயாவை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்ற சீடியில் ஜெயா முஸ்லீம்களையும் கிருஸ்துவர்களையும் ஏமாற்றி ஒட்டு பெற்று மோடியை பிரதமர் ஆக்க போகிறார் என்று விளாசி தள்ளுகிறார்.

தமிழகத்தில் இரண்டு பெரிய திராவிடகட்சிகள் தனித்து நின்றாலும் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாத்துக்கு உண்மையாக சமுதாய நோக்கம் இருந்திருந்தால் இரண்டு பேரையுமே தவிர்த்து இருக்க வேண்டும். அதை செய்யாததால் நாலாந்திர அரசியல் கட்சி வரிசையில் சேர்ந்துள்ளது எனலாம். இனி இவர்கள் நாங்கள் யோக்கியர்கள், ம ம கா போல் நாங்கள் அரசியல் கட்சி அல்ல போன்ற வாதங்கள் எடுபடாது.

மேலும் இவர்கள் யார்பக்கம் சேர்வதாலோ, எதிர்பதாலோ,எந்த பெரிய பாதிப்பும் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கும் ஏற்படுவதில்லை என்பது பழைய கணக்குகளில் அறியமுடிகிறது.

இவர்களின் உண்மையான பலம் இவர்கள் தனித்து தங்கள் இயக்க மாநாடு நடத்தினால்தான் தெரியும். ஆனால் இவர்கள் புத்திசாலித்தனமாக இட ஒதிக்கீடு மாநாடு என்று எல்லோரையும் கூட்டி தங்கள் கூட்டம்போல் ஜெயா போன்ற தலைவர்களுக்கு காட்டுகிறார்கள். மொத்தத்தில் இவர்களும் எல்லோரையும் போல் பக்கா அரசியல் வாதியாக மாறி உள்ளார்கள்.

அதனால் நாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்ற தவ்ஹீத் ஜமாத்தின பேச்செல்லாம் போலியான மேட்டரோ என மக்கள் வியப்பில் உள்ளனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. தம்பிமார்களின் ஆதங்கம்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [09 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33626

தம்பி சாஜித், என் கலைஞர் பாசம் என்னவென்று, என்னுடைய கமெண்ட்ஸ்களை (நமதூர் அனைத்து இணையதளங்களில்) பார்த்தால் தெரியும்.

2001 சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க உடன் தி.மு.க கூட்டணி வைத்த நேரத்தில் கூட, அப்போதைய த.மு.மு.க (இன்றைய ம.ம.க. & த.த.ஜ இணைந்த) 'பத்தாம்பசலி தனமாக" பல தொகுதிகளில் தி.மு.க வை ஆதரித்ததை மறக்க வேண்டாம். நான் அப்படி இல்லை.

மீண்டும் சொல்கிறேன். தி.மு.க ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை. அந்த கட்சி நமக்கு செய்த துரோகங்களை மறக்கவில்லை. அதை இங்கே எழுதினால் அது கமெண்ட்ஸ் ஆக இருக்காது. கட்டுரையாக ஆகி விடும். ஆனால், இந்த தேர்தலில் நமது போது எதிரியை வீழ்த்தக்கூடிய கூட்டணி. தி.மு.க வை கண்மூடி ஆதரிக்கும் ஆள் நான் இல்லை.

'லத்தீப் சாகிபை வாயடைத்து உட்கார வைத்ததும் முழுக்க உண்மையான சம்பவமாக இருக்கும். ஆனால், அதே கருணாநிதி தான் இட ஒதுக்கீடு தந்தார்.

வெறும் ஆணையம் அறிவித்ததனால், அ.தி.மு.க வை ஆதரிப்பது என்று சொல்வது, எவ்வளவு மடமை என்பதை நீங்கள் தெரியாதது அல்ல. இருந்தாலும் மன முரண்டு.

உ.பி, மற்றும் வட மாநிலங்களில், முஸ்லிம்களுக்கு பல கட்சிகள், இயக்கங்கள் இல்லை. அவர்கள் நம்மை விட படிப்பறிவில் பின்தங்கி இருந்தாலும், தங்களின் நலனுக்கு யார் உதவுவார்? யாரால் தீமை ஏற்படும் என்று அறிந்து ஓட்டு போடுகின்றனர். அதுவும் ஒட்டு மொத்தமாக. அதே கட்சி, ஆட்சிக்கு வந்த பின், துரோகம் செய்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்புவதிலும் உறுதியாக இருக்கின்றனர். இதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. அவர்களின் கொள்கை, 'tactical voting'.

தேர்தலுக்கு பின்னர், தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில், கருணாநிதி உறுதியாக இருக்கிறாரோ இல்லையோ, ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

'இதற்கும் மேல் உங்கள் சமுதாய அக்கரையை கேட்டு எழுதினால்...." அப்படி என் சமுதாய அக்கரையில் குறை கண்டாய்? என்று தெரிய வில்லை.

இந்த தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெற்ற பின்னர், பா.ஜ.க வுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிந்த பின்னரும், அந்த கட்சியை ஆதரிக்கும் சூட்சமம் என்ன?

இப்போது இருக்கும் கூட்டணிகளினால், அ.தி.மு.க விற்கே சாதகம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33632

உணவு தண்ணீர் இல்லாமல் இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் ஒருவனை, வருவோரும் போவோரும் பார்த்தும் பாராமுகமாக சென்று கொண்டிருக்கும்பொழுது ஒருவன் மட்டும் அவனுக்கு பழஞ்சோறும், நீரும் கொடுத்து அவனை சாவிலிருந்து காப்பாற்றி உதவி செய்கிறான்.அந்த ஒருவனால் உயிர் பிழைத்து உதவி செய்தவனை உயிர் உள்ளவரை மறக்காதிருப்பது தான் நன்றிக்கடனாகும்!

அப்படி உயிர் பிழைத்து உட்ககாரவைத்தவனிடம் போய்,உனக்கு அவன் பழஞ்சோறுதானே தந்தான், நான் பிரியாணி தருகிறேன், நீ வலிமையுள்ளவனாகளாம் , இதோபார் இந்த ஹோட்டலில் இருந்துதான் பிரியாணி வரும், ஆர்டரை கூட நன்றாக பார்த்துக்கொள் என்று சொல்லி, என்னமோ பழஞ்சோறு தந்தானாமே உன்னை ஏமாற்றி உன்னிடமுள்ள உரிமையை பிடுங்க அவன் போடும் தந்திரம், ஏமார்ந்து விடாதே,அவனை உதறித் தள்ளிவிட்டு என்னிடம் வா, என்ற மோகன சூழ்ச்சி வார்த்தைகளால் வலை விரிக்கும் ஒரு தலைவி.

அப்படி ஆசைகாட்டி மோசம் செய்யத்துடிக்கும் ஒரு தலைவியின் பக்கம் அத்தலைவியின் மதிமயங்கும் வார்த்தையை நம்பி (தனக்கு உயிர் கொடுத்து உட்க்காரவைத்து உதவி செய்தவன் என்ற நன்றி உணர்வைகூட கிஞ்சித்தும் நினையாமல் அவன் நெஞ்சினிலேயே குத்திவிட்டு) நிலைமாறிப்பறந்து வந்துவிடு என்று வலை வீசி பிடிக்கும் முயற்சியில் சிலபச்சோந்திகள் திட்டமிட்டு வட்டமடித்துகொண்டு இருக்கிறார்கள்!

அப்பச்சோந்திகள் மார்க்கம் ஹதீஸ் என்ற பாசாங்க போதனையில் உங்களை போர்த்தி தூக்க தயாராக இருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் சமுதாயமே , ஏமார்ந்து விட வேண்டாம்.

உண்மையின் பக்கமும், ஒற்றுமையின் பக்கமும் , நம்மினத்தை ஒழிக்க நினைக்கும் கூட்டத்தை கூண்டோடு ஒழிக்க உறுதி பூண்டுள்ளவர்களின் பக்கமும் நாம் இணைந்து என்றும் நன்றியுள்ள மனசாட்சியுள்ள முஸ்லிம்களாக வாழ்வோம், அததூய வழிக்கு உறுதுணையாகவும் இருப்போம் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by M. Sajith (DUBAI) [10 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33643

ஆதம் சுல்தான் காக்காவின் பழஞ்சோத்து கதை அருமையாக இருந்தது - பஞ்ச தந்திர கதைகளில் வரும் படிப்பினை கதைகளில் வரிசையில் சேர்துக் கொள்ளலாம் - நல்ல படிப்பினையும் கூட

ஆனால் இதற்கும் திமுகவுக்கும் முஸ்லீம் சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு என்பதுதான் புரியவில்லை...!!

முஸ்லீம் சமுதாயம் என்று சாகும் தருனத்தில் தத்தளித்தது தலீவர் தந்த பழஞ்சோற்றில் சமுதாயம் உயிர் பிழைத்தது என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம்.

MBC உட்பிரிவு கொண்டுவந்தது போன்ற 'சிறப்பு' செயல்பாடுகளால் கிடைத்துவந்த பழஞ்சோற்று தட்டையும் பறித்தது தானே உண்மை...!!

"அப்பச்சோந்திகள் மார்க்கம் ஹதீஸ் என்ற பாசாங்க போதனையில் உங்களை போர்த்தி தூக்க தயாராக இருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் சமுதாயமே , ஏமார்ந்து விட வேண்டாம்"

வைர வாக்கியங்கள், மமகவின் ஆரம்பம் அப்படித்தான் இருந்தது என்பதையும் எழுதியிருக்கலாம். இறைவன் மீது ஆனையிட்டு ஏமாற்றிய கதை அது....

தேர்தலுக்கு பிறகு பிஜேபி யை ஆதரிக்க மாட்டோம் என்று ஒரு முடிவை அறிவித்துள்ளாரா தலீவர்.. அவரும் அதே நிலையில் தானே இருக்கிறார் - சமுதாய கட்சிகளுக்கு உபதேசம் செய்யக்கூடாதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மறுமையை நம்பாத ஆம் ஆத்மிக்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கலாம்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [10 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33644

மறுமையை நம்பாத ஆம் ஆத்மிக்கள் கூட மாற்று அரசியலை சிந்தித்து அதை கையில் எடுத்தது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களின் எதிரியான BJP கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் போது, இறை ஒன்று, மறை ஒன்று, இலக்கும் ஒன்று சொல்லிக்கொண்டு பிரச்சாரம் செய்யும் TNTJ - INTJ ஆகிய இயக்கங்கள் சொந்த சமுதாயத்தின் வாக்குகளைக் கூட கவர முடியாதபடி, ஒன்றிணைக்க முடியாதபடி உங்களின் ADMK ஆதரவு அறிவிப்பு செயல்கள் உள்ளது..!

நீங்கள் நேர்மையானவர்களாக இருந்து இருந்தால் மறுமையை நம்பாத தமிழ்நாட்டில் போட்டியிட இருக்கும் ஆம் ஆத்மிக்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கலாம்...!

பி ஜே அவர்களே..! விரைவில் இறைவனின் உதவியால் நீங்கள் தனிமை படுதப்படுவீர்கள்.. இன்ஷா அல்லாஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by farook (ksa) [10 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33647

தேர்தலுக்கு பிறகு பிஜேபி யை ஆதரிக்க மாட்டோம் என்று ஒரு முடிவை அறிவித்துள்ளாரா தலீவர். அவரும் அதே நிலையில் தானே இருக்கிறார் - சமுதாய கட்சிகளுக்கு உபதேசம் செய்யக்கூடாதா ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தலைவியின் ஒரு வார்த்தை கூட பிஜேபி பற்றி பேசாத குணத்தை நியாயபடுதி உள்ளார் ஒருவர்.

கடைசியா நடந்த மாநாட்டில் எத்தனை பேச்சாளர்கள் பிஜேபி யை கலைஞ்சர் முன்னிலையில் வசை பாடினார்கள், இதுவெல்லாம் தெரியாதா ? அவர் பேச கூடாது என்று தடுத்தாரா?

அதிமுக கூட்டத்தில் ஒரு தெரு பேச்சாளராவது இன்று பிஜேபி குறித்து ஒரு வார்த்தை பேச முடியுமா??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by farook (ksa) [10 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33648

மதசார்பற்ற கட்சி ஆட்சிக்கும் வரவேண்டும், அதைதான் ஆதரிப்போம் என்று தெளிவா திமுக அறிவிக்கிறது . ஆனால் அதிமுக ஏன் பிஜேபி யை ஒரு கூட்டதிலும் சாடவில்லை என்று கேட்டால் கொள்கை சகோதர்கள் கொவபடுகிரார்கள்.

திமுக வேற்பாளர்களில் இரண்டு பேரு முஸ்லிம் , அதிமுகவில் எத்தனை பேரு முஸ்லிம் ? தன் இயக்கம் தான் அரசியலில் நிக்க திராணி இல்லை , நம்ம சமுதயதுக்காவது சீட் கொடுக்க சிபாரிசு செய்யலாமே ? அது இல்லமா மமக வை ஏன் குறை சொல்லணும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [10 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33649

அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்டிப்பாக மனிதன் அவனுக்கு கொடுத்த சிந்தனை ஆற்றளுக்கு தகுந்த மாதிரி சிந்திக்கும் ஆயற்றலை இறைவன் கொடுத்துள்ளான்.

அந்த இறைவன் நமக்கு சுயமாக சிந்திக்கும் ஆயற்றளையும் தந்துள்ளான் அதனை கொண்டு அரசியல் பொது கருதுகளையும் , மார்க்க கருத்துகளையும் பரிமாறி கொள்வது தவறு அல்ல கருத்துகள் மாற்றம் கொண்டு இருந்தாளும் சரி கண்ணியத்தில் மாற்றம் இல்லாத அளவு பார்த்து கொள்ள வேண்டும்

தனிநபர் விமசனம் கட்டாயம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று சில நபர்கள் நம் சகோதரர்கள் தனி விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளது மிகவும் வருத்தமான ஒன்று இவைகளை தவிர்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ........

இதை விட செய்ய தேவையான பல நல்ல காரியங்கள் அதிகம் உள்ளது அவைகளை பற்றி சிந்தியுங்கள் நன்றி .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by farook (ksa) [11 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33671

கருத்துகள் மாற்றம் கொண்டு இருந்தாளும் சரி கண்ணியத்தில் மாற்றம் இல்லாத அளவு பார்த்து கொள்ள வேண்டும் என்று சகோ அஹ்மத் சுலைமான் சொல்லுகிறார் . மஞ்ச துண்டு , பச்சை புடவை என்று சொல்லுவதையும் தவிர்க்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று காலையில் இதமழை!  (7/3/2014) [Views - 2441; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved