இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அனைத்தும் உடனடியாக அந்தந்த கட்சிகளால் அழிக்க / அகற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் சார்பில் அவற்றை அழித்து, அதற்கான செலவினத்தை - அந்தந்த கட்சியின் வேட்பாளரது தேர்தல் செலவுக் கணக்கில் பதிவு செய்யப்படும் என, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அழிக்கப்பட்ட காட்சி:-
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |