கோயமுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு தமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்கம். இதன் காயல்பட்டினம் கிளை துவக்கக் கூட்டம், கடந்த 07.12.2013 அன்று காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அவ்வமைப்பின் கிளை அலுவலகம் காயல்பட்டினம் கடைப்பள்ளி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அலுவலக திறப்பு விழா இன்று (மார்ச் 09 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு, நடைபெற்றது.
விழாவிற்குத் தலைமை தாங்கிய - அமைப்பின் மாநில தலைவர் கடலூர் ப.விஸ்வநாதன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
காயல்பட்டினம் ஜெஸ்மின் பாரடைஸ் நிறுவன அதிபர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்க காயல்பட்டினம் கிளை அமைப்பாளர் எம்.முருகன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முன்னிலை வகித்த - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் வாழ்த்துரையாற்றினார்.
அமைப்பின் நகர நிர்வாகிகள் கருத்துரையாற்ற, அதனைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளான ஏ.ராஜமன்னார் என்ற ராமமூர்த்தி, ராமானுஜம், வி.ஆா.சண்முகசுந்தரம், உடுமலை எல்.கணேசன், எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.சந்தான கிருஷ்ணன் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றியதோடு, கிளை அங்கத்தினரின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்துப் பேசினார்.
தொடர்ந்து, விழாவிற்குத் தலைமை தாங்கிய அமைப்பின் மாநில தலைவர் கடலூர் ப.விஸ்வநாதன் தலைமையுரையாற்றினார்.
நிறைவில், சிறப்பழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, அமைப்பின் கிளை தலைவர் வி.கே.ஹபீபுர்ரஹ்மான், துணைத்தலைவர் எம்.ஏ.எம்.நிஸார் அஹ்மத், செயலாளர் எம்.முருகன், பொருளாளர் ஜாஃபர் சுலைமான், நிர்வாகிகளான எம்.எம்.ஸைஃபுத்தீன், கே.எம்.காதர் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
‘எலக்ட்ரீஷியன்’ M.M.ஸலாஹுத்தீன் |