எதிர்வாரும் பாராளுமன்ற தேர்தலை - மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் ஆகியவை, தி.மு.க. அணியில் இருந்து எதிர்கொள்கின்றன. இவ்விரு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறையில் எஸ்.ஹைதர் அலி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக நடப்பு பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2. வெற்றி பெற துஆ செய்வோம். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[10 March 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33652
அறிவிக்கப்பட்ட நம் சமுதாய கட்சிகளின் வேட்பாளர்களையும், தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் வெற்றி பெற உழைப்போம். அதற்காக துஆ செய்வோம்.
தேர்தலுக்கு பின் பா.ஜ.க ஆட்சி அமைக்க தி.மு.க ஆதரவு கொடுக்காது என்று உறுதி அளிக்குமா? என்று 'அண்ணனின்' தம்பிமார் இந்த இணையதளத்தில் கேள்வி கேட்டு கருத்து பதிந்தனர். அதற்கான பதிலை, இன்றைய செய்தியாளர் கூட்டத்தில், தி.மு.க தலைவர், கருணாநிதி, மதவாத சக்திகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.
அந்த தம்பிமார், இந்த உறுதியை வைத்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்களா?
மதவாத கூட்டணியையும், அதற்கு திருட்டுத் தனமாக ஆதரவு அளிக்க இருக்கும் அ.தி.மு.க- வையும் தோற்கடிக்க பாடுபடுவோம்.
3. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33653
அஸ்ஸலாமு அலைக்கும் ,
ஒரு வழியா இந்த முஸ்லிம் சமுதாயம் பிரதிநிதிகளை தேர்தலில் நிற்க பெற்றுள்ளது . இனி நாம் இணைந்து ஒற்றுமையாக ஓட்டை சிந்தாமல் சிதறாமல் போட வேண்டும் அதுதான் நம் முக்கிய கடமை .
பாண்டிச்சேரி - நாஜிம் , வேலூர் - அப்துல் ரஹ்மான் , மயில்லாடுதுறை - ஹைதர் அலி , ராம்நாடு - ஜமில் இவைகள் நமக்கு தி . மு . க கூட்டணி மூலம் கிடைத்தவைகள் .
அம்மா வின் மூலம் ஒன்று வந்திருகிறது ராம்நாடு அன்வர் ராஜா மற்றும் ஜமில் இங்கு தி . மு .க சார்பாக போடி போடுவதால் இன்ஷா அல்லாஹ் ஒரு பிரதிநித்துவம் நமக்கு கிடைக்க அதிகம் வாய்ப்பு உருவாகி உள்ளது .
காங்கிரஸ் தனித்து நிற்கும் அதில் ஒரு சில முஸ்லிம் பிரதிநிதிகள் நிற்க வாய்புகள் கிடைக்கும் ஆனால் வேறு வேறு தொகுதிகளி நிற்பதாக அமைந்தால் நமக்கு நல்லது ஆகா மொத்ததில் அதிகம் பிரதிநிதிகளை நமக்கு அளித்த கூட்டனிக்கு நம் வாக்குகளை நாம் அளிக்க வேண்டும் அது நமக்கு பலமாக அமையும் .
முஸ்லிம் மக்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அறிய வாய்ப்பை நல்ல முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
இன்ஷா அல்லாஹ் பாண்டி நாஜியை பொறுத்தவரை கட்சியை தாண்டி அவருக்கு அங்கு நல்ல பெயர் மற்றும் மதிப்பு அணைத்து சமூகங்களிடமும் உள்ளது என்பதை நான் கண்கூடாக பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது நல்ல அணைத்து சமுதாய மக்களிடமும் நல்ல சகோதர வாஞ்சையாக பழகுபவர் .
எந்த பிரசினையாக இருந்தாளும் அந்த காலதுக்கு போய் சரி செய்து முடிப்பவர் , ஒரு நல்ல களப்பணீயாளர் இங்கு உள்ள பலமுனை போட்டிகளும் இவருக்கு சாதகமான ஒன்றாக உள்ளது என்பது கூடுதல் தகவல் .
பாண்டி இல்லாமல் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் ஓட்டு எண்ணிகை சற்ரொப்ப 3750000 நேற்று பதியப்பட்ட வாக்காளர்கள் கணக்கு இல்லாமல்.
5. Re:...வாழ்த்தி .. வெற்றிக்கு துவா செய்வோம் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[10 March 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33655
இன்ஷா அல்லாஹு எதிர்வாரும் பாராளுமன்ற தேர்தலில்
மனிதமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறை தொகுதியில் போட்டி இட உள்ள மரியாதைக்குரிய எஸ்.ஹைதர் அலி அவர்களுக்கும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டி இட உள்ள மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கும், எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
வல்ல நாயன் அருளால், இவர்கள் வெற்றி வாகை சூட நாம் அனைவர்க்ளும் செய்வோம் . ஆமீன் ...
7. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 March 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33660
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்று, சமுதாயத்திற்கு உண்மை உள்ளவர்களாக அமைய பிராத்திக்கின்றேன்.
இவர்களை கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு இவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது நம் கடமை.
ராமநாதபுரத்தில் தான் கொஞ்சம் இடிக்கின்றது.இரண்டு முஸ்லிம்களை மோத விட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் ஓட்டுக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, சொற்ப ஒட்டு வித்தியாசத்தில் வேறு யாரோ வெற்றி அடையப் போகிறார்கள்.
சரிங்க.. ம.ம.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வெற்றிக்காக மிகவும் பாடுபற்றவர், ADMK வை சேர்ந்த மரியாதைக்குரிய அன்வர் ராஜா அவர்கள்.
அன்வர் ராஜா அவர்களின் வெற்றிக்காக ம.ம.க உழைக்கப் போகிறதா?
8. Re:... posted byRilwan (TX)[11 March 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33666
திமுக ஆதிமுக - இரண்டில் எதை ஆதரித்தாலும் அது அசிங்கமான அரசியலே ;. இவர்கள் அனைவரும் லஞ்சம் ஊழலில் திளைப்பவர்கள் . அரசியல் வியாபாரம் செய்பவர்கள் . இரண்டு பக்கம் இருப்பவர்கள் பாம்புகளுக்கு பால் வார்க்கிறார்கள் . முஸ்லிம் என்பதற்காக தவறானவர்களை ஆதரிப்பவர்களை ஆதரிக்க முடியாது ..
முஸ்லிம் லீகு மற்றும் தேசிய லீக் களின் நிலை ..மற்றும் பீஜே வின் நிலை எனக்கு ஆச்சிரியம் அளிக்கவில்லை . இவர்கள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்பவர்கள் . சட்டை கசங்காமல் மக்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் ... ஆனால் மனித நேய மக்கள் கட்சியின் முடிவு எனக்கு அந்த கட்சியின் தலைவர்கள் மீது இருந்த மரியாதையை முற்றிலும் அகற்றிவிட்டது . கொள்கை இல்லாதவர்கள் .. கொள்கையில் நிலையாக இருக்கதெரியாதவர்கள்
கருணாநிதியும் ஜெயலலிதாவும் முஸ்லிம்களை வியாபாரப்பொருலாகட்தான் பார்க்கிறார்கள் .. அங்கே கை கட்டி நிற்பவர்கள் ... ச்சே .. அசிங்கம் .
9. Re:...திமுக அணியில் 3 முஸ்லிம்கள் posted bymackie noohuthambi (chennai)[11 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33670
கூட்டணி சமன்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் வேலூர், மயிலாடுதுறை ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் முஸ்லிம்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.
அதிமுக, கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வலுவான கூட்டணி நட்பை முறித்துக் கொண்டார்கள்.
கைபர் கணவாய் வழியே வந்த ஆரியர்கள் என்று அவமானப்படுத்தப் பட்ட பாரத ஜனதா கட்சியினர் வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி என்று அழைக்கப் பட்டதுபோல், ஆரியரை எதிர்த்த திராவிட தளபதி வைக்கோ, தானே ஆரியப் படையின் தளபதியாக விசுவரூபம் எடுத்து திராவிட பாரம்பரியதுக்கே களங்கம் உண்டாக்கி இருக்கிறார்.
திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத விஜயகாந்த் மதவாத சக்திகளுக்கு தோள் கொடுத்திருக்கிறார்.ஜாதி உணர்வுகளை தூண்டி கட்சி வளர்த்துக் கொண்டிருக்கும் ராமதாஸ் இந்தக் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு எல்லோருமே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றப் புறப்பட்டிருக்கிறார்கள்.
சிறு நெருப்புக்கு பயந்து பெரு நெருப்பில் வீழ்வதற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் பாரத ஜனதா கட்சி ஆட்சிக்கு வர இவர்கள் எல்லோரும் அச்சாரம் கொடுத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் மட்டும் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொண்டு அக்கினிப் பரீட்சைக்கு தயாராகி இருக்கிறார்கள்.
இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் காங்கிரஸ், மரணப் படுக்கையில் இருந்து கொண்டு இந்த அவலங்களைப் பார்த்துக் கொண்டு செய்வது அறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் திமுக அந்த நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பும் பேற்றை முதல் முறையாக பெற்றிருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில் ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டை முஸ்லிம்களை பிரநிதிப் படுத்தும் இன்னொரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் பீ.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் எடுத்திருப்பது முஸ்லிம் மக்களிடையே, குறிப்பாக அவரது ஆதரவாளர்களிடையே கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மூசா நபியை விட உயர்ந்தவரும் அல்ல, பிர்அவனை விட கொடியவருமல்ல. சாதாரண மனிதன் என்ற வகையில் தவறான முடிவுகளை யாரும் எடுக்க வாய்ப்புண்டு. அதன் பிறகு தன் தவறுகளை தனிமையில் உட்கார்ந்து சிந்தித்து, உண்மையை உணர்ந்து மனம் திருந்தி சரியான வழியை தேர்ந்து எடுப்பதும் உண்டு.
அந்த வகையில் இப்போது உங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒரு மதவாத சக்தி இந்த நாட்டின் அரியணையில் அமர்ந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவாவது , திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பீஜே அவர்களை அல்லாஹ்வின் பெயரால் கேட்டுக் கொள்கிறோம். இந்த வரலாற்றுப் பிழையை நீங்கள் செய்து முஸ்லிம்களின் துரோகிகளின் வரிசையில் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.
VA ATHEEULLAAHA VA RASOOLAHOO VA LAA THANAAZAOO FA THAFSHALOO VA THAH'THABA REEHUKUM VASBIROO. INNALLAAHA MA'ASSAABIREEN.
இந்த இறைமறை வசனங்களுக்கு நீங்களே தமிழ் அர்த்தமும் எழுதியிருக்கிறீர்கள் அல்லாஹ் மிக்க அறிந்தவன். .
10. துருவத்தில் ஒன்று....... உருவத்தில் இரண்டு. posted bys.s.md meerasahib (TVM)[11 March 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 33673
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு தி.மு.க. கூட்டணியில்...... மயிலாடுதுறையில் எஸ்.ஹைதர் அலி! வேலூரில் அப்துர் ரஹ்மான்!! இவர்கள் வெவ்வேறு கச்சிகளாக இருந்தாலும்....... இந்த சரியான நேரத்தில் இந்த கூட்டணியில் அங்கம் வகித்து சமுதாய உணர்வை மேலோங்கி பார்த்ததில் சந்தோசமே........ ஒன்று பட்டால்...... உண்டு வாழ்வு.
ஆனால்.....
பி.ஜே. வும்..... பி.ஜே.பி (நரேந்திர மோடி) யும் உருவத்தில் இரண்டாக இருந்தாலும்......... துருவத்தில் ஒன்றாக இருந்து....... யகூதிகளுக்கு சுக்கான் பிடிப்பதை என்னால் உணர முடிகிறது.
குறிப்பு:-
அட்மின் அவர்களே....... என்னுடைய ஒரு சில காமன்டுகள் ஒரு தலை பட்ச்சத்தின் அடிப்படையில் புறம் தள்ளி இருப்பதை உங்களின் ஏனைய நபர்களின் கமாண்டுகள் அனுமதி மூலம் என்னால் உணர முடிகிறது. நடு நிலை காப்பீர் வஸ்ஸலாம்.
11. நான்கு மாணிக்கங்கள் மின்னுகின்றன1 .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[12 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33682
நான்கு நம்மின இஸ்லாமிய சிங்கங்கள் திமு.க கூட்டணி வேட்ப்பாளர்களாக களத்தில் குதித்துள்ளார்கள்.சிங்கங்கள் சீறிப்பாய துடித்துக்கொண்டிருக்கிறது! அதே நேரத்தில் மற்றைய எதிர் கட்சி முஸ்லிம் வேட்ப்பாளர்களும் சிறப்பானவர்கள்தான் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஆனால் அவர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மதவெறியர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியாக இருக்கிறதே,அம்மதவாத வெறியர்களுக்கு நம்மை பலிகடாவாக ஆக்கி விடுவார்களே என்ற கவலைதானேயொழிய வேறில்லை!
மோடி பிரதமராவதற்கு தேர்தலுக்குப்பின் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? என்று கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மத்தியில் மதசார்பற்ற ஆட்சிதான் வரவேண்டும் என்று முதலிலிருந்தே வலியுறுத்தும் என்னிடம் வந்து இந்த கேள்வியை கேட்கிறீர்களே என்று பதில் அளித்தாராம்!
ஆகவே அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமுஸ்லிம்கள் விரும்பும் அணியாம் தி .மு.க அணிக்கே உங்கள் பொன்னான ஆதரவை அளித்திடுமாறு அன்பொழுக இந்த ஆதம் சுல்தான் வேண்டுகிறேன்!
இது தவிர காங்கிரஸில் நிற்கும் வேட்பாளர் நம் சமுதாய சகோதரராக இருப்பாரேயானால்,அவர் நம் அணியில் இருக்கும் முஸ்லிமல்லாத வேட்பாளரைவிட பொருத்தமானவராகவும் அப்பகுதிமக்களால் விரும்பபடுபவராகவும், உண்மையான வராகவும்,நேர்மையானவராகவும் நம் சமுதாயத்திற்கு உதவக்கூடியராகவும் இருப்பாரேயானால் அவரை ஆதரியுங்கள்! இதே நிலைப்பாடுதான் தனியாக நிற்கும் மற்றைய முஸ்லிம் அமைப்பு வேட்பாளருக்கும் பொருந்தும்!
எது எப்படியோ நம் முஸ்லிம் சமுதாய மக்கள் நாடாளுமன்றத்தில் நெஞ்சம் குளிர நிறைந்திருக்க வேண்டும்!அப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாக! கருணைமிகு அல்லாஹ் நம் வேண்டுதலை நிறைவேற்றித் தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross