வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியன உள்ளன.
வேட்பாளர்கள் விபரம்:
தென் சென்னை: டி.கே.எஸ். இளங்கோவன்
மத்திய சென்னை: தயாநிதி மாறன்
வட சென்னை: இரா. கிரி ராஜன்
ஸ்ரீபெரும்புதூர்: எஸ்.ஜெகத் ரட்சகன்
காஞ்சிபுரம் (தனி)- ஜி.செல்வம்
அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ
கிருஷ்ணகிரி- பி. சின்ன பில்லப்பா
தர்மபுரி- இரா. தாமரைச் செல்வம்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணா துரை
ஆரணி- ஆர்.சிவானந்தம்
விழுப்புரம் (தனி)- கோ.முத்தையன்
கள்ளக்குறிச்சி- இரா. மணிமாறன்
சேலம்- செ.உமாராணி
நாமக்கல்- செ.காந்தி செல்வம்
திருநெல்வேலி- சி.தேவதாஸ சுந்தரம்
தூத்துக்குடி- பெ.ஜெகன்
கன்னியாகுமரி- எப்.எம்.ராஜரத்தினம்
ஈரோடு- பவித்திரவள்ளி
திருப்பூர்- செந்தில்நாதன்
நீலகிரி (தனி)- ஆ.ராசா
கோவை- கி.கணேஷ்குமார்
பொள்ளாச்சி- பொங்கலூர் நா. பழனிச்சாமி
திண்டுக்கல் - எஸ்.காந்திராஜன்
கரூர்- ம. சின்னசாமி
திருச்சி- என்.எம்.யூ. அன்பழகன்
பெரம்பலூர்- ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு
கடலூர்- கொ. நந்தகோபால கிருஷ்ணன்
நாகப்பட்டினம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்
தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு
சிவகங்கை- சுப துரைராஜ்
மதுரை- வ.வேலுச்சாமி
தேனி- பொன். முத்துராமலிங்கம்
விருதுநகர்- எஸ்.ரத்தினவேல்
ராமநாதபுரம்- எஸ்.முகமது ஜலீல்
புதுச்சேரி - ஏ.எம்.எஹ்.நாஜிம்
மயிலாடுதுறை- மனித நேய மக்கள் கட்சி
வேலூர்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்
திருவள்ளூர் (தனி) - விடுதலை சிறுத்தைகள்
தென்காசி- புதிய தமிழகம்
ஆலந்தூர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33656
அஸ்ஸலாமு அலைக்கும் ,
கருணாநிதியை பொறுத்தவரை இந்த பட்டியல் இறுதி பட்டியல் என்று நாம் முடிவுக்கு வந்து விட முடியாது .
தோழர்கள் வருவதாக தகவலும் சூழலும் இருப்பதால் நான்கு தொகுதிகள் சிவப்பு துண்டுகளுக்கு ஓதுக்கப்பட்டால் ஆட்சரியம் ஒன்றும் இல்லை.
அந்த குறிபிட்ட தொகுதிகளில் சூரிய வேட்பாளர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் .
மஞ்சள் துண்டின் சாசலில் நிறைய கதவுகள் இருக்கும் போல் தெரிகிறது ஆனால் எத்தனை என்றுதான் தெரியவில்லை .
ம . ம . க , முஸ்லிம் லீக் , புதிய தமிழகம் , விடுதலை சிறுதைகள் கட்சி போன்ற கட்சிகள் தோழர்களின் வரவுக்காக காத்து இருக்கிறார்கள் வந்தால் இது இந்திய அளவில் நல்ல உதாரணமாக வழிகாடியாக அமையும் சற்று வலுவாகவும் மாற வாய்புகள் உள்ளது என்று கூறலாம் .
மிஸ்டர் மஞ்சள் காங்கிரசோடு கூட்டு வைக்கும் சந்தர்பமும் இருபதாக சொல்லுகிறார்கள் அது மட்டும் நடக்க கூடாது .
தோழர்கள் பாவம் அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கும் மஞ்சளுக்கும் சற்று வாக்கு உயரு இதன் மூலம் அம்மா வுக்கு சிறு பாடம் கற்பிக்கலாம என்ற நினைப்பும் உள்ளதாம் .
நம் சமுதாயம் ஒருங்ககிணைந்து சிதறாமல் நம் வாக்கினை உறுதியாக நமக்கு சாதகமான சூழல் அமையுமாறு பார்த்து கொள்ள வேண்டும் .
எந்த சூழ்நிலைகளையும் இந்த சமுதாயம் கிரகித்து சிந்தித்து நமக்கு சாதகமாக ஆகுவதற்கு வேண்டிய நடவடிக்களை கட்சிகள் மட்டும் அல்லாது தனி நபர்களும் உசாராக இருந்து நம் காய்களை சாதுரியமாக நகர்த்தும் கால நிலை என்றால் அது மிகை அல்ல .
தனிப்பட்ட தலைவர்கள் தங்கள் மூக்கினை நுழைத்து இந்த நல்ல சந்தர்பத்தை குழைக்க பாடுபட வேண்டாம் என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் வேண்டி விரும்பி கோரிக்கை வைக்கிறோம் .
அதையும் தாண்டி குழப்ப நினைத்தால் உங்கள் அமைபினர்கள் அதனை விரும்ப மாட்டார்கள் . ஓட்டில் தங்கள் சமுதாய கடமையை முஸ்லிம் சமுதாயத்துக்கு சாதகமாக அமைத்து கொள்வார்கள் . அவர்களுக்கு வல்ல நாயன் போதுமாணவன் .
2. திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு. posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[10 March 2014] IP: 218.*.*.* China | Comment Reference Number: 33657
திமுக சார்பாக 2 முஸ்லிம்கள் , கூட்டணி கட்சிகளில் சார்பாக 2 முஸ்லிம்கள் . ஆக மொத்தம் 4 முஸ்லிம்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு. எனவே முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். வெல்லட்டும் திமுக கூட்டணி.
3. நான்கு மாணிக்கங்கள் மின்னுகின்றன! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[11 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33664
நான்கு நம்மின இஸ்லாமிய சிங்கங்கள் திமு.க கூட்டணி வேட்ப்பாளர்களாக களத்தில் குதித்துள்ளார்கள்.சிங்கங்கள்
சீறிப்பாய துடித்துக்கொண்டிருக்கிறது! அதே நேரத்தில் மற்றைய எதிர் கட்சி முஸ்லிம் வேட்ப்பாளர்களும் சிறப்பானவர்கள்தான் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஆனால் அவர்கள் வென்றால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மதவெறியர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியாக இருக்கிறதே,அம்மத வெறியர்களுக்கு நம்மை பலிகடாவாக ஆக்கி விடுவார்களே என்ற கவலைதானேயொழிய வேறில்லை!
மோடி பிரதமராவதற்கு தேர்தலுக்குப்பின் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? என்று கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மத்தியில் மதசார்பற்ற ஆட்சிதான் வரவேண்டும் என்று முதலிலிருந்தே வலியுறுத்தும் என்னிடம் வந்து இந்த கேள்வியை கேட்கிறீர்களே என்று பதில் அளித்தாராம்!
ஆகவே அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமுஸ்லிம்கள் விரும்பும் அணியாம் தி .மு.க அணிக்கே உங்கள் பொன்னான ஆதரவை அளித்திடுமாறு அன்பொழுக இந்த ஆதம் சுல்தான் வேண்டுகிறேன்!
இது தவிர காங்கிரஸில் நிற்கும் வேட்பாளர் நம் சமுதாய சகோதரராக இருப்பாரேயானால்,அவர் நம் அணியில் இருக்கும் முஸ்லிமல்லாத வேட்பாளரைவிட பொருத்தமானவராகவும் அப்பகுதிமக்களால் விரும்பபடுபவராகவும், உண்மையான வராகவும்,நேர்மையானவராகவும் நம் சமுதாயத்திற்கு உதவக்கூடியராகவும் இருப்பாரேயானால் அவரை ஆதரியுங்கள்! இதே நிலைப்பாடுதான் தனியாக நிற்கும் மற்றைய முஸ்லிம் அமைப்பு வேட்பாளருக்கும் பொருந்தும்!
எது எப்படியோ நம் முஸ்லிம் சமுதாய மக்கள் நாடாளுமன்றத்தில் நெஞ்சம் குளிர நிறைந்திருக்க வேண்டும்!அப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாக! கருணைமிகு அல்லாஹ்
நம் வேண்டுதலை நிறை வேற்றித் தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross