அரிமா சங்கத்தின் தூத்துக்குடி ஸ்நோஸ் கிளை, தூத்துக்குடி சென்ட்ரல் கிளை மற்றும் காயல்பட்டினம் நகர கிளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம், இன்று (மார்ச் 09 - ஞாயிற்றுக்கிழமை) 17.30 மணி முதல் 20.30 மணி வரை காயல்பட்டினம் பி.எச்.எம்.ரெஸ்டாரென்டில் நடைபெற்றது.
காயல்பட்டினம் அரிமா சங்க உறுப்பினர் ஏ.எல்.முஹம்மத் நிஸார் இறைமறை வசனங்களை ஓதினார். செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்றுப் பேசியதுடன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு, மண்டல வட்டார தலைவர் வில்லியம் டக்ளஸ் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்நோஸ் அரிமா கிளை தலைவர் திருவடி, செயலாளர் தர்மர் டி.ரோஸ், தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா கிளை பொருளாளர் பூவலிங்கம், ஒருங்கிணைப்பாளர் லாரிஸ் ராயன், காயல்பட்டினம் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், முன்னாள் தலைவரும், மண்டல முன்னாள் தலைவருமான டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
உள்ளூர் அரிமா சங்க நிர்வாகிகள், சங்க செயல்பாடுகளை விளக்கியும், வெளியூர் நிர்வாகிகள் அதனைப் பாராட்டியும் உரை நிகழ்த்தினர்.
பின்னர், அரிமா சங்கத்தின் காயல்பட்டினம், தூத்துக்குடி ஸ்நோஸ், தூத்துக்குடி சென்ட்ரல் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி, சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
காயல்பட்டினம் அரிமா சங்க பொருளாளர் ஏ.ஆர்.இக்பால் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர், பி.எச்.எம்.ரெஸ்டாரென்ட் ஸ்பெஷல் ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தகவல்:
காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பாக...
J.A.லரீஃப்
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |