காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவின் வடமுனையில் ஒரு வேப்ப மரம் நீண்ட காலமாக உள்ளது. மரத்தையொட்டிய வீட்டின் மேற்புறத்தில் மின் கம்பிவடங்களுக்கு மேலே மரக்கிளையொன்று முறிந்து தொங்கிக்கொண்டிருந்தது. இம்மாதம் 06ஆம் தேதி அக்கிளை முறிந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கிளையை அகற்றக் கோரி, அந்த வீட்டின் உரிமையாளர் பெயரில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு இன்று காலையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆணையரின் உத்தரவின் பேரில், அடுத்த சில மணி நேரங்களில், நகராட்சியின் நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோர் நிகழ்விடம் வந்து பார்வையிட்டனர்.
முறிந்த மரக்கிளையின் அடியில் மின் வினியோகக் கம்பி வடங்கள் இருந்ததால், கூட்டுப் பணிக்காக மின் வாரியத்தின் உதவியை அவர்கள் நாடினர். சிறிது நேரத்தில் அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, முறிந்த மரக்கிளை - நகராட்சி மற்றும் மின் வாரியத் துறைகளின் பணியாளர்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
தகவல் & படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |