எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாகியுள்ளது. இதில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டுவிட்டது.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதி உடன்பாடும் நிறைவுற்றள்ளது. அதன்படி - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. - பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் சேருவது ஏறத்தாழ உறுதியான நிலையில், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளாக காங்கிரஸ் கட்சியும், இடது சாரிகள் மட்டுமே உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி - தி.மு.க. கூட்டணியில் சேர இதர கூட்டணி கட்சிகள் விரும்பினாலும், தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.
இடது சாரி கட்சிகள் - அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவந்திருப்பதால், அக்கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் தற்போது சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியினை - அதன் பொருளாதார கொள்கைக்காக எதிர்த்து வரும் இடது சாரி கட்சிகள், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாமல் இருக்கும் நிலையில் - அக்கூட்டணியில் தன்னை இணைத்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது.
புகைப்படம்:
தினத்தந்தி
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |