அரசியல்வாதி posted byvsm ali (kangxi, jiangmen, china)[18 March 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 3367
தேன் எடுத்தவன் அதை ருசிக்காமல் விடமாட்டான். அதுபோல அரசியலில் புகுந்தவன் மக்கள் பணத்தை சுரண்டாமல் விடமாட்டான். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல , ஒருசிலரைத்தவிர . இங்கே கருத்து சொல்லியிருப்பவர்கள் அரசியல்வாதியாக வந்தாலும் இதே கதைதான். ஆக, அவர்கள் நமக்கு செய்யும் ஒருசில நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். திரு.அனிதா அவர்கள் இப்போதும் , மாற்றுக்கட்சியில் இருந்தபோதும் நமதூருக்கு செய்த நன்மைகள் அதிகம்.
நமதூரில் இன்றும் ஒரு வழக்கம். வியாபார பயணம் செல்லும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் , முதுகில் எழுதி அனுப்புவார்கள். நன்றாக சம்பாதித்து வா என்று அர்த்தமாம். நமதூர் மக்களிடம் உள்ள சமையல் காரர்கள் , வேலைக்காரர்கள் சாமான்கள் வாங்கும்போது பில்லில் கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதுவது வழக்கம்தான். இதை அவர்களிடம் கேட்க நினைத்தால், பெரியவர்கள் சொல்வார்கள் , நீ பயணம் புறப்படும்போது உங்க உம்மா உன் முதுகில் எழுதியது போலதானே அவங்க உம்மாவும் எழுதி இருப்பாங்க. அதுனால , நமக்கு வேலை நடக்கிறதா என்று மட்டும் பார், இதெல்லாம் கண்டுக்காதே என்று சொல்லுவார்கள்.
ஆக , அரசியல் வாதிகள் செய்யும் நல்லதை பாராட்டுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross