செய்தி: இக்ராஃவை அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குதல், வலுவான நகர்மன்றம் அமைத்தல் குறித்து ஹாங்காங் பேரவை துணைத்தலைவர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காலத்தின் கட்டாயமாகும். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[18 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3375
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் அவர்கள் தனதறிக்கையில் தெரிவித்துள்ளபடி நமது நகர் மன்றத்தை திறம்பட செயல் படுத்திட முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் வரவேற்கத்தக்கதும், இன்றைய சூழ்நிலையில் அவசியமும்கூட.
என்னுடைய பேச்சிலும், எழுத்திலும் இதை பல முறை வலியுறுத்தி வருகிறேன். இன்ஷா அல்லாஹ்! சட்டசபைத் தேர்தலுக்கு பின் இது சம்பந்தமாக விவரமான கடிதம் எழுதி எல்லோரையும் ஒன்றிணைக்கலாம் என்றிருந்தேன்.
இருந்தாலும் சகோதரர் இப்பொழுதே இது குறித்த கடிதத்தை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இருப்பது மிகவும் சந்தோசமளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------
மக்களே!
இந்த விசயத்தில் நம் எல்லா மக்களும் ஒன்றிணைந்து சகோதரர் குறிப்பிட்டது போல் நகராட்சி தேர்தலில் சேவை மனப்பான்மை உடைய, நிர்வாகத் திறமை கொண்ட, சுறுசுறுப்பான, இறைவனுக்கு பயந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து நமது நகராட்சியில் மக்களாட்சி மலரச்செய்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நாட்டங்களை நிறைவேற்றித் தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross