We need a change and we need to change. posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[21 March 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 33847
"எம்.பி.ஜேசுராஜ் (நெல்லை), எம்.புஷ்பராயன் (தூத்துக்குடி), எஸ்.பி.உதயகுமார் (கன்னியா குமரி) ஆகியோரைத் தவிர மீதமுள்ள 6 வேட்பாளர்களும் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்." (C & P from Above news)
8 ல் 3 போனால் 6 என்பது புதுக் கணக்கு போலும்!
------------------------ + -------------------
காலம் காலமாக தி மு க வுக்கும் அ.தி மு க வுக்கும் மாறி மாறி ஒட்டு ஒட்டு போட்ட காலம் மாறிவிட்டது. இரண்டு கட்சியும் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்". இட ஒதிக்கீடு தருவார்கள் என்று நம் சமுதாயக் கட்சிகள் வேண்டுமென்றால் இலவு காத்த கிளிகள் போல காத்துக் கொண்டிருக்கலாம். நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
த த ஜ, மற்றும் ம ம க, முஸ்லிம் லீக்கும் தான் முறையே அ தி மு க மற்றும் தி மு க வுடன் ஒப்பந்தம் செய்து தேர்தல் உடன்பாடு வைத்துள்ளதே தவிர முஸ்லிம் சமுதாயம் இந்த சாக்கடையுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. அதலால் நாம் இந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒட்டு போட வேண்டிய அவசியம் / நிர்பந்தம் எமக்கில்லை.
சமுதாயக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பதை தவிர்க்க வேண்டாம். காரணம் நாளை ஒரு பிரச்சனை வரும் பொது இந்த வேட்பாளர்கள் நம் சமுதாயத்திருக்கு விசுவாசமாக குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்ப முடியும். அ தி மு க அல்லது தி மு க வேட்பாளர்கள் நமக்கு குரல் கொடுக்க மாட்டார்கள். தங்களை நிறுத்திய கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம்.
இதற்கு முன் நமக்கு இந்த திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு Option / Choice இல்லாமல் இருந்தது. அனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. மாற வேண்டியவர்கள் நாம்தான்.
எந்த சமுதாயம் மாற நினைக்கவில்லையோ அந்த சமுதாயம் மாறாது. நமக்குத் தேவை மாற்றம். அதலால் சிந்தித்து செயல்படுவீர். உங்கள் ஒட்டு ஒரு ஆயுதம். அதை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது. அதை சாக்கடையில் தூக்கி எறியாதீர்.
We need a change and we need to change.
---------------- END ------------------------------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross