Re:... posted bySalih (chennai)[24 March 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 33914
சகோதரர் ரசாக் லுக்மான் அவர்களுக்கு,
/* முன்னர், ஊரின் உள்ளே போடப்பட்ட சில சாலைகளை, அது போடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அந்த
பணிகள் முறையாக கண்காணித்து, பல சோதனைகள் செய்து, அந்த சாலைகள் தரமானதாக அமைய உறுதுணையாக இருந்தனர். */ (C & P)
சாலைப்பணிகள் உட்பட நகரில் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் நகரின் அனைத்து பணிகளையும் மக்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.
இது நம் அனைவரின் மீதான கடமை. ஆனால் இந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தான் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பது
நியாயமானதாக தெரியவில்லை.
இந்த சாலை குறித்த தொழில்நுட்ப விபரங்களை நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார். இது பொது தளத்தில் உள்ளது. எனவே - அந்த பகுதி மக்கள்,
அந்த பகுதி பொது நல அமைப்புகள், ஊரின் பிற பொது நல அமைப்புகள் (ஊழல் எதிர்ப்பு இயக்கம் உட்பட), தனி நபர்கள் என இதனை
கண்காணிப்பது அனைவரின் பொறுப்பு.
/* தரம் குறைந்து போடப்பட்டுக் கொண்டிருந்த (தம்பி சாலிஹ் அவர்கள் சொல்லும்) நைனார் தெரு சாலை இன்றுவரை முழுமை பெறாமல்,
பாதியிலே நிற்கிறது. */ (C & P)
/* மற்ற சாலைகளை முறையாக கண்காணித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், அதே நேரத்தில் போடப்பட்ட மருத்துவர் தெருவை சாலையை ஆய்வு
செய்யவில்லை. அதற்கான காரணத்தை அவர்களே அறிவார்கள். */ (C & P)
இந்த இரண்டு விமர்சனத்திற்கும் கீழ்க்காணும் விளக்கம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
பொதுவாக தணிக்கைகள் செய்யப்படும் போது, அனைத்து கணக்குகளையும் தணிக்கை செய்யமாட்டார்கள். உதாரணமாக - நகராட்சியில், ஆணையர்
- ரேண்டமாக 5 சதவீதம் ரசீதுகளை ஆய்வு செய்யவேண்டும் என விதிகள் கூறுகிறது. இந்த ரேண்டம் சோதனையில் தவறுகள் தெரிய வந்தால்
அதன்மேல் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே - காயல்பட்டினம் சாலைகளை பொறுத்தவரை அனைத்து சாலைகள் குறித்தும் புகார்கள்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - கடந்த பிப்ரவரி மாதம் (2013), மூன்று சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தது. அதே சமயத்தில் -
அல் அமீன் சங்கம் தனிப்பட்ட முறையில் - சாலைகள் முறையாக போடப்படவில்லை என அப்போதைய ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறிப்பிட்ட தெருக்கள் - அப்பாபள்ளித் தெரு சாலை, ஆசாத் தெரு சாலை, நெய்னார் தெரு சாலை. இந்த சாலைகள்
ரேண்டமாக தேர்வு செய்யப்படவில்லை. அந்த காலகட்டத்தில் நகராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 15 பணிகள் (சாலை, மழைநீர்
வடிகால்) நடைபெற்றன. அவற்றில் இந்த மூன்று சாலைகளும் தேர்வு செய்யப்பட்ட காரணம் - இந்த பணிகளின் தரத்தை ஆரம்பத்திலேயே, எளிதாக,
சிக்கனமான முறையில் சோதித்து விடலாம் என்பது தான்.
அதாவது - குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலை தோண்டப்படிருக்கிறதா என உறுதி செய்துக்கொண்டால் போதுமானது. அப்படி தோண்டப்படவில்லை
என்றால், அந்த ஆதாரத்தை கொண்டு ஆட்சியரிடம் புகாரை தெரிவிக்கலாம். ஆட்சியரும் புகாரினை தட்டிகழிக்க முடியாது. குறைந்தது அந்த அளவு
ஆதாரம் இல்லாமல் எந்த புகார் கொடுத்தாலும், அது அனுமானமாக தான் இருக்கும்.
பிற சாலைகளைபற்றி புகார் தெரிவிக்கும்போது - நம் மனதில் அவை முறையாக போடப்பட வில்லை என்று தெரிந்த்திருந்தாலும், அவைகள் குறித்து
சாலைகள் முழுமையாக போடப்பட்டப்பின் - அதற்கு என உள்ள தர பரிசோதனை நிறுவனங்களிடம் சுமார் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி,
சோதனை செய்ய சொல்லி - அந்த முடிவின் அடிப்படையில் புகாரினை தெரிவிக்க வேண்டும். 15 பணிகளையும் சோதிக்க தேவையான நிதி சுமார் 3
லட்சம். அந்த நிதியினை ஏற்பாடு செய்வது எளிதல்ல. காலமும் அதிகம் ஆகும்.
மற்றொரு வழி - ஒவ்வொரு தருணத்திலும் (மணல் கொட்டும்போது, கற்கள் கலக்கும்போது என) கண்காணிப்பது. இதற்கு ஆட்கள் பலமும்
வேண்டும், அதற்கான தொழில் நுட்ப விபரமும், அறிவும் வேண்டும்.
அதே சமயத்தில் போடப்பட்ட இதர சாலைகள் கீழே:
பிலால்பள்ளி தெரு சாலை
மங்களவினாயகர் கோவில் தெரு சாலை
ஈக்கியப்பா தைக்கா தெரு முதல் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) / கீழ நெய்னார் தெரு சாலை
கடையக்குடி (கொம்புத்துறை) சாலை
நியூ காலனி சாலை
பாஸ் நகர் சாலை
மங்களவாடி மயான சாலை தடுப்பு சுவர் கட்டி மேம்பாடு
குளம் சாஹிப் தம்பி தோட்டம் சாலை
வானியக்குடி எதிர் தெரு (அவன் செயல் காலனி)
ஓடக்கரை கிழக்கு தெரு சாலை
மஹ்லரா காலனி தெரு சாலை
மருத்துவர் தெரு
அவைகள் - ஒழுங்காகப்போடப்பட்டதா இல்லையா என இறைவனுக்கு தான் வெளிச்சம். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் - மேலே குறிப்பிடப்பட்ட
காரணத்திற்கு 3 சாலைகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை தேர்வு செய்யப்பட்டது. எஞ்சிய 12
தெருக்கள் குறித்து (மருத்துவர் தெரு உட்பட) எந்த புகாரும் - உடனடி ஆதாரம் இல்லாததால் - கொடுக்கப்படவில்லை. இது தான்
உண்மை.
எதற்காக - புகார் கொடுக்கப்படாத 12 தெருக்களில் - மருத்துவர் தெரு மட்டும் இங்கு தங்களால் குறிப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது என தெரியவில்லை. அது நகர்மன்றத் தலைவரின் தாயார் வசிக்கும் சாலை என்பதால் என்று தாங்கள் கூற வருகிறார்களா? நான் தவறாக கணித்திருந்தால் மன்னிக்கவும். தெளிவான காரணங்களை தாங்கள் இந்த தெரு விசயத்தில் கூறாத வரை, வீண் வதந்திகளும், பொய்யான தகவல்களும் தான் பரவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross