நீண்ட இடைவெளிக்குப் பின் காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட ஒருவழிப்பாதை - புதிய சாலை அமைப்புப் பணிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணங்காட்டி, தேர்தல் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமாரைத் தொடர்புகொண்டு - இது ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்ட பணி என்பதைத் தெளிவுபடுத்தியதையடுத்திய பின், பணியைத் தொடர அவர் இசைவளித்ததையடுத்து, மீண்டும் சாலை அமைப்புப் பணிகள் தொடர்கிறது.
தாயிம்பள்ளியருகில் துவங்கி, பெரிய நெசவுத் தெரு வழியாக கூலக்கடை பஜார் வரை (பேருந்து நிலையம் அருகில்) - பழைய சாலை கிளறியெடுக்கப்பட்டு, முதல் அடுக்கிற்கான மூலப்பொருட்கள் போடப்பட்டு, சாலை சமப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, தாயிம்பள்ளி மூப்பனார் ஓடையின் பழைய பாலம் தோண்டியகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் என்றும், அதன் தொடர்ச்சியாக அடுத்த ஏழு நாட்களில் சாலை அமைப்புப் பணி முழுமை பெறும் என்றும் ஒப்பந்தக்காரர் மீராசா தெரிவித்தார்.
மொத்த சாலைப் பணிகளையும், அதிகபட்சம் 20 நாட்களுக்குள் நிறைவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.
ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்புப் பணி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |