“The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ - “எனது பயணம்” எனும் தலைப்பிலும், “Roots” எனும் ஆங்கில புதினத்தை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஹமீத் - “வேர்கள்” எனும் தலைப்பிலும் தமிழாக்கம் செய்துள்ளனர்.
இந்த நூல்களின் அறிமுக விழா, இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, துளிர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:-
துளிரில் தனி சிறப்புடன் நடந்து முடிந்தது உலக வரலாற்று புகழ் பெற்ற நூல்களின் ஆய்வு
2014 மார்ச் 16 ஞாயிறு அன்று துளிர் அறக்கட்டளைஇ அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மனநல மன்றம் ஆகிய துளிரின் உள் அமைப்புகளின் சார்பில் உலக வரலாற்றில் புகழ் பெற்ற “ரோடு ட்டூ மெக்கா” எனும் தலைப்பில் முஹம்மது அஸத் வெளியிட்ட ஆங்கில நூலை “எனது பயணம்” எனும் தலைப்பில் எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி தமிழில் மொழியாக்கம் செய்த நூலும் 'ரூட்ஸ்’ எனும் தலைப்பில் அலெக்ஸ் ஹேலி எழுதிய “வேர்கள்” எனும் தலைப்பில் எம்.எஸ். அப்துல் ஹமீது தமிழில் மொழியாக்கம் செய்த புதினமும் ஆய்வு செய்யப்பட்டது.
மாலை 5.15 மணிக்கு துளிர் சிற்றறங்கில் நூலாய்வு நிகழ்வு துவங்கியது. ஆல் ஹாபிழ் முஹம்மது இர்ஃ;பான் திருக்குர்ஆன் சூரா “அபஸ”விலிருந்து சில வரிகளை ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழிப்புலன் இழந்த போதும் தனது ஆற்றலால் குர்ஆனை மனனம் செய்து இருக்கும் அவருக்கு துளிரின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
துளிர் நிறுவனர் வக்கில் எச்.எம்.அஹமது வரவேற்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் 16 ஆண்டு காலம் அறிவுத்திறனற்ற இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணியாற்றி வரும் துளிர் பொதுவான தலங்களிலும் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கருத்தரங்குகள் இலக்கிய கூட்டங்கள் விவாத அரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும்இ அதன் ஒரு பகுதியாக இந்த நூலாய்வு நிகழ்வும் நடைபெறுவதாக தெரிவித்தார். கொமந்தார் இஸ்மாயில் நூலாய்வு உரை நிகழ்த்தும் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார்.
முதலாவதாக “ரோடு ட்டூ மெக்கா- எனது பயணம்” என்ற நூலாய்வு நிகழ்விற்கு எஸ்.எம். உஜைர், எஸ்.ஐ. தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் ஏ.நிஃமதுல்லாஹ் நூலாய்வு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
சிலுவைப் போருக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முகிழ்க்கத் தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்தி விட்டது. இன்று வரை அந்த வெறுப்பும் அருவெறுப்பும் இஸ்லாத்தின் மீதும்இ ஏகத்துவத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனத்தில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.
இந்த நிலையில் தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டுவிஸ் (முஹம்மது அஸத்) அவர்கள் அரபியப்பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்வியல் முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஃபாவை வலம் வருகிறார். சவுதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். மெக்காவை நோக்கிய பயணம் இந்த அய்ரோப்பியரை இஸ்லாமியராக மட்டுமல்ல அரபியாகவும் ஆக்கி விடுகிறது.
அன்றைய பாகிஸ்தானுக்குச் செல்கிறார். மாபெரும் கவிஞர் அல்லாமா இக்பாலோடு தொடர்பு ஏற்படுகிறது. புதிய பாகிஸ்தானின் அரசியல் ஆலோசகர் ஆகிறார். அய்நா சபையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைச்சர் ஆகிறார்.
இவ்வளவுக்கு பின் அமெரிக்கா செல்கிறார். இவர்தம் பழைய நண்பர்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் அறியாமையை உடைத்தெறிய முன் வருகிறார் அஸத். அதுவரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பாதிருந்த அவருக்கு இப்போது அது அவசியமாகி விட்டது. ஆம்! இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், அரபு பற்றியும் அவர்களுக்கு அறிவித்திடத் துடிக்கிறார்.
எழுதுகோலால் கற்பித்த அல்லாஹீத் தஆலாவின் பேருதவியோடு ‘ரோடு ட்டூ மெக்கா’ என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது. ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும்இ அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.
இந்நூலை ஒருவர் படித்து முடித்தால் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவரால் நிச்சயம் உண்மையை உய்த்து உணர முடியும்.
இதோ அந்த அறிய நூல் தமிழில்! காயல்பட்டினம் சகோதரர் அபுல் ஹஸன் கலாமி, அஸத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி மொழிபெயர்த்திருக்கிறார். பெருநூலாய் இருப்பினும் பொருளும், சுவையும் விடாமல் படித்து முடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நூலை வெளியிட்டுள்ள சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
இஸ்லாமையும், முஸ்லிம்களையும் எளிதில் புரிந்து கொள்ள இது ஓர் சிறந்த நூல் என்றும் இந்த அறிய நூலை அனைவரும் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின் நூலை மொழியாக்கம் செய்த எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
சில ஆண்டுகளுக்கு முன் முஹம்மது அஸத் எழுதிய ‘ரோடு ட்டூ மெக்கா’ எனும் நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அந்த நூலைப் படித்தபோது அது ஒருவரின் சுயசரிதையோ அல்லது வீரச் செயல்களின் வர்ணனையோ அல்ல என்றும், ஒர் அய்ரோப்பியர் இஸ்லாத்தை தெரிதலையும் முஸ்லிம் சமூகத்தோடு அவன் இரண்டற இணைதலையும் விளக்கிடும் கதைதான் அது என்று எனக்குப் புரிந்தது.
இந்த நூலை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்த முயற்ச்சிக்காக நான் பல வருடங்கள் செலவிட்டேன். ‘ரோடு ட்டூ மெக்கா’ எனும் ஆங்கில நூலை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். நான் தமிழாக்கம் செய்த இந்த புத்தகத்திற்கு “எனது பயணம்” என்று பெயர் வைத்தேன் அதனை சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் வெளியிட்டார்கள்.
இந்த நூலாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து, என்னை கவுரவப்படுத்திய துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...
இந்த நிகழ்வில் துளிரின் அழைப்பினை ஏற்று எல்லா தரப்பினரும் கலந்து கொண்டமைக்கு மனதாரப் பாராட்டுகிறேன். பிற சமுதாயங்களைச் சேர்ந்த பெருமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு, அவர் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
இரண்டாவதாக “ரூட்ஸ்-வேர்கள்” எனும் நூலாய்வு நிகழ்விற்கு ஆர்.எஸ். லத்தீஃப், சதக்கத்துல்லா (எ) ஹாஜி காக்கா, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியர் முனைவர் ஏ. அஷ்ரப் அலி நூலாய்வு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
‘மால்கம் எக்ஸ் இஸ்லாத்தை முன்வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காக போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.
‘மால்கம் எக்ஸ்’ தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது “கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல் அஃது ஆப்பிரிக்கா!” என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார். அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பொpய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி. பின்னர் அலெக்ஸ் ஹேலி ‘மால்கம் எக்ஸ்’ கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்விகத்தைக் கண்n;டடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. அதாவது அவரது ‘வேரை’ அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது. தனது பயணத்தைஇ ஆராய்ச்சியை ‘ரூட்ஸ’; என்று புதினமாக வடித்தார். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ‘வேர்கள்’ என்ற பேரில் எம்.எஸ். அப்துல் ஹமீது மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக! இந்த நூல் ‘இலக்கியச்சோலை’ வெளியீடாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நூலாய்விற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய்) இருக்கும் அப்துல் ஹமீதை பார்வையாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அஹமத் செல்லிட பேசியில் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களை கேட்டார். அப்போது அவர் கீழ்கண்ட கருத்துக்களை தெரியப்படுத்தினார்.
அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும் ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் “மால்கம் எக்ஸ்” நூல் மூலமாக அறிந்தேன். அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘ரூட்ஸ’; என்ற புதினத்தைப் பற்றியும் முதன் முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே ‘ரூட்ஸ’; நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்க கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலை படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.
இந்த நாவலை தமிழில் மொழிப்பெயர்த்திடும் முயற்சியை துவங்கினேன். ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல் 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழி பெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும் அதனால் முடிந்தவரை சுருக்கி மொழிப்பெயர்த்திருக்கிறேன். இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இவ்வாறு பேசிய எம்.எஸ்.அப்துல் ஹமிது இந்நூலை நூலாய்விற்கு தெரிவு செய்த துளிர் அறக்கட்டனைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
நூலாய்வு நிகழ்வை அவதானிக்க வந்தவர்களின் சார்பாக சமூக ஆர்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் பேசியபோது, தனது சிறு வயது பள்ளி பருவ காலத்தில் இதுபோன்ற இலக்கிய வட்டங்கள் பேச்சு மன்றங்கள் பள்ளிகளிலும் சமூக அமைப்புகளின் மூலமும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தற்போது அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதில்லை என்றும் இந்த காலத்தில் துளிர் அந்த நிகழ்வுகளைத் துவக்கி இருப்பதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அடிக்கடி நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தனது மாணவ பருவத்தில் காலை பள்ளியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களில் பேசுவதற்காக மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் போன்றோர் பல்வேறு புத்தகங்களில் இருந்து கருத்துக்களை எடுத்து தந்து ஊக்கப்படுத்துவார்கள் என்றும் அதற்காகவே புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
முஹம்மது அஸத் எழுதிய ‘ரோடு ட்டூ மெக்கா’ எனும் நூலை எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி அவர்கள் எனது பயணம் எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருப்பது அமைதியின் உருவாக வெளிக்கு தெரியும்; கலாமி காற்றுக்குக் கூட வலிக்கக் கூடாது என்பதற்காக மெல்லினத்தோடு பேசக்கூடியவர் இவர் ஆங்கில புலமையுடன் இருந்து இவ்வரலாற்று நூலை அமைதியாக எழுதி முடித்திருப்பது அறிந்து தனக்கு வியப்பாக இருந்தது என்றும்இ அலெக்ஸ் ஹேலி “ரூட்ஸ்” எனும் பெயாpல் வெளியிட்ட “வேர்கள்”; எனும் தமிழ் புதினத்தை தாம் பல முறை படித்ததாகவும் அதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் காயல்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் அப்துல் ஹமீது என்பது தனக்கு இப்பொழுதுதான் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று ஆய்விற்து எடுத்துக் கொள்ளப்பட்ட 2 நூல்களும் உலக வரலாற்றில் முக்கியம் பெற்றது என்ற போதிலும் அதற்குரிய அங்கீகாரம் காயல்பட்டினத்தில் துளிரின் மூலம் இன்றுதான் கிடைத்துள்ளது என்றும் பெறுமையோடு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் இறுதியில் “ரோடு ட்டூ மெக்கா” எனும் நூலை “எனது பயணம்” எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்த எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமிக்கு துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத், செயலர் சேக்னா லெப்பை ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் புத்தகத்தின் அடையாளம் பொறித்த நினைவு கேடயத்தினை வழங்கியும் கவுரவித்தனர்.
வேர்கள் எனும் புதினத்தை தமிழாக்கம் செய்த அப்துல் ஹமீது சார்பில் - அவரது மகனும், மாமா இஸ்மாயிலும் நினைவு கேடயத்தைப் பெற்றுக் கொண்டனர்.
நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |