இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினம் கடற்கரையில், அக்கட்சியின் அபிமானிகளான அமீர் சுல்தான், அப்துல் காதிர், எஸ்.அப்துல் வாஹித், வெள்ளி முஹம்மத் அலீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் உள்ளிட்டோர், தம் தலைகளில் ஆம் ஆத்மி கட்சியின் தொப்பியை அணிந்தவர்களாக, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |