இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவரது தேர்தல் அறிக்கை பொதுப் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஆபத்தான சிவப்புத் தொழிற்சாலைகளை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்க விடாமல் தடுத்து, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளினால் பாதிப்புக்குள்ளாக இருக்கும் மக்களுக்கு சட்டப்பூர்வமாக இழப்பீடு பெற்றுத் தருவேன்” என அவர் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுப் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ள அவரது தேர்தல் அறிக்கை வருமாறு:-
[பெரிதாகக் காண படங்களின் மீது சொடுக்குக!]
|