காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான கண் பரிசோதனை சிறப்பு முகாம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணி முதல் 13.30 மணி வரை துளிர் கேளரங்கில் நடைபெற்றது.
துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர். டாக்டர் டபர் பிதா தலைமையில், கண் மருத்துவ பரிசோதகர்கள் 13 பேர் இம்முகாமில் கலந்துகொண்டு, பரிசோதனை செய்தனர்.
நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 135 பேர் பயன்பெற்றனர். அவர்களுள் 18 மாற்றுத்திறனாளி சிறாருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. 13 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுககு மேல் சிகிச்சை இலவசமாகப் பெற்றிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்ற மருத்துவக் குழுவினருக்கு துளிர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் அனைவருக்கும் நன்றி கூறினார். காயல்பட்டினம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஆர்.பி.ஷம்சுத்தீன் உட்பட பலர் முகாம் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். |