காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின.
வாஷிங்டன் டி.சி. நகரில் இறுதி நிகழ்ச்சியாக Muslim Public Affairs Council (MPAC) என்ற அமைப்பின் அலுவலகத்தில் - கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. மார்ச் 20 அன்று, காலை 11 மணியளவில் துவங்கிய இந்த சந்திப்பில் அடிமட்டத்திலிருந்து இஸ்லாமிய சமுதாயப்பிரச்சனைகளை எவ்வாறு பொது
தளத்தில் எடுத்துவைப்பது (Grassroots civic participation and advocacy for the Islamic community) என்ற தலைப்பில் கலந்துரையாடல்
நடைபெற்றது. அவ்வமைப்பின் திட்ட ஆய்வாளர் சைஃப் இனாம் (Saif Inam, Policy Analyst) கலந்துக்கொண்டார்.
Muslim Public Affairs Council (MPAC) அமைப்பு - 1986 ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இவ்வமைப்பு, அமெரிக்க முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தும், இஸ்லாம் குறித்த புரிந்துணர்வை - அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள்
மத்தியிலும், ஊடங்கள், கலாசார துறைகள் ஆகியவற்றிலும் ஏற்படுத்த செயல்புரிந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, தங்கள் வாஷிங்டன் டி.சி. நகர நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர் - மேரிலன்ட் (MARYLAND) மாகாணம்
புறப்பட்டனர்.
மேரிலன்ட் மாகாணத்தின் முக்கிய நகரமான பால்டிமோர் நகரம் செல்லும் வழியில், வாஷிங்டன் டி.சி.நகரின் புறநகர் பகுதியாக கருதப்படும் CASA DE MARYLAND என்ற இடத்திற்கு செல்ல குழுவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
CASA DE MARYLAND அமைப்பு மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து பொருளாதார சிக்கலில் இருக்கும் மக்களுக்கு
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற ஏற்பாடுகளை செய்வதற்கு - 1985ம் ஆண்டு, ஒரு தேவாலையத்தின் அடித்தளத்தில் துவக்கப்பட்டது. தற்போது
பல்வேறு மக்களுக்கும் இந்த சேவையை செய்திட வளர்ந்துள்ள இந்த அமைப்பு, ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களுக்காக
மேரிலன்ட் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தன் சேவைகளுக்காக பல விருதுகளையும் இவ்வமைப்பு பெற்றுள்ளது.
இந்திய குழுவினர், CASA DE MARYLAND அமைப்பின் நிர்வாகிகளிடம், அவ்வமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
CASA DE MARYLAND நிகழ்ச்சியை தொடர்ந்து, குழுவினர் - மேரிலன்ட் மாநிலத்தின் முக்கிய நகரமான, துறைமுக நகரம் பால்டிமோர் (Baltimore) சென்றடைந்தனர். இந்நகரில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் குழுவினர், மார்ச் 22 வரை இருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
பால்டிமோர் (மேரிலன்ட்) நகரில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்...
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|