ஜாவியா அரபிக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் மர்ஹூம் மி.சு.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் முஃப்தீ அவர்களின் மூத்த மகன் - காயல்பட்டினம் அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.சி.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப், நேற்று (மார்ச் 22 - சனிக்கிழமை) 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71. அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் ஆலிம் கலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் மகன்வழிப் பேரனும்,
ஜாவியா அரபிக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் மர்ஹூம் மி.சு.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் முஃப்தீ அவர்களின் மூத்த மகனும்,
ஜாவியா திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு மத்ரஸா) முன்னாள் ஆசிரியர் மர்ஹூம் மி.சு.முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் சகோதரர் மகனும்,
எம்.ஏ.ஜுபைர், மர்ஹூம் எம்.ஏ.அபுல்ஹஸன், எம்.ஏ.அபூமன்ஸூர் ஆகியோரின் சகோதரரும்,
மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ, எம்.இசட்.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக், ஏ.எச்.முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ, ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நேற்று 21.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
சஊதி அரபிய்யா - ஜித்தாவிலிருந்து...
S.M.லெப்பை
[செய்தி திருத்தப்பட்டது @ 07:32 / 24.03.2014] |