சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 14.03.2014 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
எல்லாம் வல்ல ஏக வல்லோனின் பெரும் கிருபையால் சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 14.03.2014 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் உள்ள சகோ. ஹுமாயூன் அவர்களின் இல்லத்தில் வைத்து நடந்தேறிய கூட்டத்திற்கு, இக்ராஃ தலைவரும், இம்மன்றத்தலைவருமாகிய சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் தலைமை தாங்க, சகோ. நஹ்வி ஏ.எம். ஈசா ஜக்கரியா இறைமறை ஓதி துவக்க, சகோ. ஹுமாயூன் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
தலைமை உரை:
தொடர்ந்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன்
குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் நடை பெற்ற நிறை குறைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறிய மன்ற தலைவர், வருங்காலங்களில் மேலும் சிறப்புற எப்படி நடத்துவது என விரிவாக விவாதித்தார்.
நமதூரில் பரவலாக காணப்படும் கொடிய நோயான புற்று நோய் வராமல் எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது வந்த நோய்க்கு எங்கு எப்படி சிகிச்சை பெறுவது போன்ற செயல்களை சிறப்பு மருத்துவர்கள் மூலம் நமதூர் மக்களுக்கு எடுத்துக்கூறும் விதமாக சிறப்பு முகாம் நடத்துவது பற்றியும் விரிவான விவாதம் செய்து அடுத்து வரும் செயற்குழுவில் அதற்கான குழுவை நியமிப்பது பற்றியும் எடுத்து கூறினார்.
மன்ற செயல்பாடுகள்:
அதை தொடர்ந்து மன்ற செயல்பாடுகள் பற்றி செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் விரிவாக எடுத்துகூறி உறுப்பினர்களிடம் எவ்வாறு சந்தா தொகையை பிரிப்பது மேலும் இதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை பற்றி விளக்கி கூறினார்.
அதை தொடர்ந்து மன்றத்தின் பொருளாளர் சகோ ஆதம் அவர்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து அதற்கான விளக்கமும் அளித்தார்.
குடும்ப சங்கமம் நிகழ்சிக்காக அனுசரணை வழங்கிய தொகையில் செலவு செய்தது போக மீதம் இருந்த தொகையை மன்றத்தின் பொது நிதியில் சேர்க்க பட்டது என்றும் விளக்கம் அளித்தார். குடும்ப சங்கமம் நிகழ்வுக்காக அனுசரணை வழங்கிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்க பட்டது.
இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழுடன், மருத்துவ உதவி வேண்டி ஷிஃபா மூலமாக வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு, வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு; புற்று நோய், நுரை ஈரல் பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை, தனியார் மருத்துவ மனைக்கு பாக்கி வைத்துள்ள வகைக்கு என பாதிப்புக்குள்ளான எட்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவுசெய்யப்பட்டு, மேலும் அவர்களின் பூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
நன்றி நவிலல்:
சகோ. ஹாமீது ரிபாய் அவர்கள் நன்றி கூற சகோ. ஆதம் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
24.03.2014. |