இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினம் கடையக்குடியில் (கொம்புத்துறை) - சுற்றுவட்டாரத்திலுள்ள 18 பகுதிகளிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் பங்குத் தந்தையருடன், ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம் இம்மாதம் 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றது.
ஆம் ஆத்மி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் சுபாஷ் பர்னாந்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீனவ சமூக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைப்பதற்கான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபிமானிகளும் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |