காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் இந்திய குழுவினரின் - அமைப்புகளுடனான சந்திப்புகள் - மார்ச் 24 (திங்கள்), மார்ச் 25 (செவ்வாய்) ஆகிய இரு தேதிகளுக்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 23 ஞாயிறு ஓய்வு தினம். குழுவினர் - டெட்ராய்ட் நகரின் சில முக்கிய இடங்களை அன்று கண்டனர். மேலும் - அமெரிக்க குடும்பம்
ஒன்றின் இல்லத்திற்கு உணவு விருந்திற்கும் சென்றனர்.
மார்ச் 24 திங்களன்று மூன்று நிகழ்ச்சிகள் குழுவினருக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. முதல் நிகழ்ச்சியாக MICHIGAN ROUNDTABLE FOR DIVERSITY AND
INCLUSION என்ற அமைப்பின் பிரதிநிதியுடன் காலை 10 மணிக்கான சந்திப்பாகும்.
MICHIGAN ROUNDTABLE FOR DIVERSITY AND INCLUSION அமைப்பு - தனது தற்போதைய பெயரில் 2006 ம் ஆண்டில் இருந்து செயல்புரிந்து
வருகிறது. துவக்கப்பட்ட ஆண்டான 1941 இல் DETROIT ROUNDTABLE OF CATHOLICS, JEWS AND PROTESTANTS என்ற பெயரில் இயங்கிய இந்த
அமைப்பு, பிறகு GREATER DETROIT ROUNTABLE OF THE NATIONAL CONFERENCE FOR COMMUNITY AND JUSTICE OF MICHIGAN என்ற பெயரிலும் இயங்கிவந்தது.
இந்தியாவில் இருந்து சென்றிருந்த குழுவினர் இந்த அமைப்பின் -
திட்டங்கள் உதவியாளர் ஜெஸ்ஸிகா பெஸ்டுடன் கலந்துரையாடினர். ஜெஸ்ஸிகா பெஸ்ட் (Jessica Best, Program Assistant) - தனது
அமைப்பு, எவ்வாறு அமெரிக்காவின் சிறுபான்மை மக்களிடம் தனது பணியினை செய்து வருகிறது என்பது குறித்து விளக்கினார்.
மதியம் 12 மணியளவில் முதல் நிகழ்ச்சி நிறைவுற்றது. குழுவினரின்
இரண்டாவது நிகழ்ச்சி - டெட்ராய்ட் நகருக்கு அருகில், வாரன் பகுதியில் உள்ள ISLAMIC ORGANISATION OF NORTH AMERICA (IONA) என்ற அமைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த
அமைப்பின் வளாகம் - பள்ளியாகவும், இஸ்லாமிய மையமாகவும் அமைந்துள்ளது.
இங்குள்ள பள்ளியின் இமாமாக ஸ்டீவ் முஸ்தபா எல்துர்க் (Imam Steve Mustapha Elturk) உள்ளார்.
லெபனான் நாட்டினை பூர்விகமாக கொண்டவர். இவர் - மிசிகன் பகுதியில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவைகளை இவ்வமைப்பு -
பிற அமைப்புகளுடன் சேர்ந்து எவ்வாறு எதிர்கொள்கிறது போன்ற தகவல்களை வழங்கினார்.
தற்போது இங்கு அமைந்துள்ள பள்ளி - 2007 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் பாங்கு (அதான்) கூறப்படாது என்ற
உத்தரவாதத்திற்கு பிறகு தான், இப்பள்ளியினை புனரமைக்க - உள்ளூர் மக்கள் அவையில் (LOCAL COUNCIL) அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது இவ்வமைப்பின் வெளி தொடர்பு பொறுப்பாளர் வில்லியம் அண்டௌன் (William Antoun, Outreach) உடனிருந்தார்.
குழுவினருக்கான மதிய உணவு - பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழவினரின் மூன்றாவது நிகழ்ச்சி - MULTICULTURAL COUNCIL OF AMERICA என்ற அமைப்புடன் மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி - அமெரிக்க அரசாங்கம் சார்பாக, டெட்ராய்ட் பகுதியில் - குழுனருக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த INTERNATIONAL VISITOR COUNCIL DETROIT நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
MULTICULTURAL COUNCIL OF AMERICA அமைப்பு - அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 அன்று நடைபெற்ற தாக்குதல்களுக்கு பிறகு துவக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு - அமெரிக்காவில் உள்ள அனைத்து இன மக்களும் புரிந்தணர்வுடன் வாழ, கலாச்சாரம், கல்வி மற்றும் உடல்நலம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பல நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்கிறது.
குழுவினர் இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஷகீல் கானுடன் (Dr.Shakil A.Khan, President, Multicultural Council of America) கலந்துரையாடினர். டாக்டர் ஷகீல் கான் - இந்தியாவின் மும்பை நகரை பூர்விகமாக கொண்டவர்.
டெட்ராய்ட் நகரில் குழுவினர் - மார்ச் 26 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|