காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் பெற்றோர் நாள் விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய விழாக்கள் கடந்த பிப்ரவரி மாதம் 20, 21, 22, 27 நாட்களில் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீனா சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெற்றோர் நாள் விழா
எமது எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 6ஆம் ஆண்டு பெற்றோர் நாள் விழா 20.02.2014 அன்று 09.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. மன நல ஆலோசகர் ஆர்.கணேசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வளையம் எறிதல், அதிஷ்டக் குலுக்கல் ஆகிய போட்டிகள் பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோருக்காக நடத்தப்பட்டன. பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்ற இப்போட்டிகளில், வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில், பெற்றோருக்குத் தேவையான பயனுள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினரால் நடத்தப்பட்டது.
பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
மழலையர் கலை நிகழ்ச்சிகள்
21.02.2014 அன்று, பள்ளியின் மழலை மாணவ-மாணவியருக்கான கலை நிகழ்ச்சிகள் 16.00 மணியளவில் நடைபெற்றது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி. மற்றுமு் யு.கே.ஜி. வகுப்புகளின் மழலையர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அனைவர் உள்ளங்களையும் கொள்ளைகொள்வதாய் அமைந்திருந்தன. நிறைவில் மழலையருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டு விழா
பள்ளியின் 18ஆம் ஆண்டு விழா, 22.02.2014 அன்று 16.00 மணியளவில் கிராஅத்துடன் துவங்கியது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேனிலைப்பள்ளியின் தலைவரும், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் செயலாளருமான டி.கணேசன், தூத்துக்குடி காமராஜன் கல்லூரியின் முதல்வரும், சுப்பையா வித்யாலம் பெண்கள் மேனிலைப்பள்ளியின் செயலாளரும், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் ஆலோசகருமான பேராசிரியர் எஸ்.செல்வராஜ், அவரது மனைவி கல்யாணி செல்வராஜ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், பள்ளியின் 01 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக நடந்தேறின. நிறைவில், வெற்றிபெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
21.02.2014 மற்றும் 22.02.2014 நாட்களில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் சிறப்புரையாற்றினார். எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஜமால், எல்.டி.இப்றாஹீம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டு விழா
பள்ளியின் 18ஆம் ஆண்டு விளையாட்டு விழா 27.02.2014 அன்று நடைபெற்றது. எஸ்.எம்.உஸைர், எல்.டி.இப்றாஹீம், ஜமால், எம்.கனி, வி.எம்.எஸ்.அமீன், எஸ்.எம்.செய்யித் அஹ்மத், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், குழு உடற்பயிற்சி, பிரமிட், ஜிம்னாஸ்டிக், யோகா, கராத்து, சிலம்பம் போன்ற - பள்ளி மாணவ-மாணவியரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் - காண்போரை மெய்ச்சிலிர்க்கச் செய்யும் வகையில் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு விழாவின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |