சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 67ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்திற்கு புதிதாக துணை நிர்வாகிகள் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மழலையர் மற்றும் அனைவருக்கான போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், தம்மாம் நகரில் பதர் அல் ராபியா மருத்துவமனை அரங்கத்தில், 14.03.2014 வெள்ளியன்று மாலை, வெகு சிறப்பாக நடந்தேறியது... எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.
இந்த நிகழ்வை இளவல்.. அதாவுல்லாஹ் , தன் இனிய குரலால் கிராஅத் ஓதி துவங்கி வைக்க மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் அவர்கள் திரளாக வந்திருந்த உறுப்பினர்களையும் தாய்மார்களையும் மழலைச்செல்வங்களையும் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்றார் ...
தலைமையுரை:
அடுத்து ,மன்றத்தின் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்கள், தம் தலைமை உரையில், மன்றத்தின் பொருளாதார மேம்பாட்டை உயத்திட, உறுப்பினர்கள் இதுவரை அளித்த சந்தா தொகைகளைத் தங்களால் முடிந்த வரை கூடுதலாக வழங்கி இந்த நடப்பாண்டில் நாம் திட்டமிட்டிருக்கும் செயல் பாடுகள் சீராக நடந்தேற உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்...
அத்துடன், இந்த பொதுக்குழு செவ்வனே நடந்தேற சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த “ACTION COMMITTEE” செயல்வீரர் குழுவினருக்குத் தம் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்ததோடு,இன்ஷா அல்லாஹ் , இனி இவ்வாண்டில் மன்றம் நிகழ்த்தவிருக்கும் எல்லா நற்காரியங்களிலும், இணைச்செயலாளர் சகோ. M.M. இஸ்மாயில், சகோ.P.M.S.ஸதக்கத்துல்லாஹ் இவர்களின் சீரிய வழி நடத்துதலில் இயங்கும் “ACTION COMMITTEE“ உறுப்பினர்களே முன்னிலை வகிப்பர் என்ற நற்செய்தியையும் மகிழ்வுடன் அறிவித்தார்.
அத்துடன் நம் மன்றத்தின் சமுதாயப் பணிகளில் எப்போதும் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பி, மன மகிழ்வோடும் நெகிழ்வோடும் நன்கொடைகளை வழங்கி வரும் தம் நண்பர்கள், மரியாதைக்குரிய சகோதரர்கள் ஜனாப்.அப்பாஸ் பாய்.. ஜனாப். முபாரக் பாய் இருவரையும் மிக்க நன்றியுடன் நினைவு கூர்ந்தார்....
செயலர் உரை:
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் அஹமத் ரபீக் அவர்கள், இந்நாள் வரை மன்றத்தால் வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விவரமாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்...
மாற்றியமைக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழு:
அத்துடன் மாற்றியமைக்கப்பட்ட புதிய நிர்வாகத்தினர் பற்றியும் அறிவித்தார்..
அதில்,
* மன்றத்தின் புதிய பொருளாளராக சகோ. இப்ராஹிம் அவர்களும், துணைப் பொருளாளராக சகோ. புஹாரி சுலைமான் அவர்களும், துணைச் செயலாளராக சகோ. P.M.S.சதக்கத்துல்லாஹ் ஷாதுலி அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ACTION COMMITTEE MEMBERS
சகோ. M.M. முஹம்மது இஸ்மாயில் – நடத்துனர்
சகோ.. P.M.S.சதக்கத்துல்லாஹ் ஷாதுலி- நடத்துனர்
சகோ. இம்தியாஸ் புஹாரி
சகோ. முத்துவாப்பா (செய்யது முஹம்மது புஹாரி)
சகோ. S.S.H. அப்துல் அஜீஸ்
சகோ.. S.D. அபூபக்கர்
சகோ. O.F.செய்யத் முஹம்மத் ஷாதுலி
சகோ. பஷீர் அலி
மேற்கண்ட செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மன்றத்தினால் அவ்வப்போது நடத்தப்படும் நிகழ்வுகளில் பங்கெடுத்து, தனித்தனியே தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடிப்பர் ...
வருங்கால செயல்திட்டங்கள்:
அத்துடன் , இன்ஷா அல்லாஹ் இந்த நடப்பாண்டில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை அவர் அறிவித்தபடி ....
* வரும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English ) வகுப்புக்கள் துவங்கவும்
* KEPA வுடன் இணைந்து நம் காயல் நகரின் தூய்மையைப் பேணிட நடவடிக்கை எடுக்கவும்
* நமதூர் KMT மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை (Medical Awareness Program) நடத்துவது என்றும்
* அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பின்பு, மன்றத்தின் புதிய பொருளாளர் சகோ. இப்ராஹீம் அவர்கள் மன்றத்தின் தற்போதைய நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து, புதிதாய் வந்துள்ள கீழ்க்கண்ட நம் சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.
- ஜனாப் சேகு அப்துல் காதர்
- ஜனாப் முஹம்மத் பாயிஜ்
- ஜனாப் செய்யத் இஸ்மாயில் புஹாரி
- ஜனாப் சதாம் ஹுசைன்
- ஜனாப் உதுமான் பாரிஸ்
- ஜனாப் முஹம்மது பைசல்
- ஜனாப் முஹம்மது மன்சூர்
மனங்கவர் மழலையர் போட்டி:
இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான போட்டி நடைபெற்றது. இதனைச் சகோதரர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் வெகு நேர்த்தியாக நடத்தி வைத்தார்கள்.
முதல் போட்டியாக குர்ஆனில் உள்ள சூராக்களின் பெயரைச் சொல்லி அதை ஓதியும் மற்றும் பல்வேறு செயல்கள் செய்யும் போது ஓதக்கூடிய துஆக்களை ஓதும் போட்டியும் நடைபெற்றது.
மாஷா அல்லாஹ்.... அனைத்து குழந்தைகளும் சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அருமையாக ஓதி அனைவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது கண் கொள்ளாக்காட்சி....அல்ஹம்துலில்லாஹ்.
இந்தப் போட்டிகளில்
முதல் பரிசை மாஸ்டர் அன்வர் சயீத் அவர்களும்
இரண்டாம் பரிசை மாஸ்டர் ஜைனுல் ஆபிதீனும், மாஸ்டர் சேகு ரய்யான் அவர்களும்
மூன்றாம் பரிசை மாஸ்டர் அதாவுல்லாஹ் மற்றும் ஆயிஷா அவர்களும் பெற்றார்கள்.
பெரியோருக்கான திடீர் தலைப்பு பேச்சுப்போட்டி:
இதனைத் தொடர்ந்து அடுத்த போட்டியாக பெரியவர்களுக்கான Table Topic போட்டி நடை பெற்றது. பல தலைப்புகள் அடங்கிய சீட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் மூன்று நிமிடங்கள் பேசும் போட்டி.
இதில் முதல் பரிசை ஜனாப் அபூபக்கர் அவர்களும் ( தலைப்பு.. உடல் பருமனைக் குறைக்க என்ன வழி ? )
இரண்டாம் பரிசை ஜனாப் அஹமது காஸிம் அவர்களும் ( தலைப்பு.. நமதூரின் சுற்றுப்புற சுகாதாரத்தை உயர்த்துவது எப்படி ? )
மூன்றாம் பரிசை ஜனாப் சாஹிப் ..(தலைப்பு..தொலைக்காட்சி..துணையா..துன்பமா?) மற்றும் சாளை ஜியாவுத்தீன் (தலைப்பு...அரசுப்பணிகளில் நம் பங்கு...) அவர்களும் பெற்றார்கள்.
மழலையருக்கான வினாடி-வினா போட்டி:
இந்த போட்டியை தொடர்ந்து குழந்தைகளுக்கான Quiz போட்டி நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளும், பொது அறிவுக் கேள்விகளும் கேட்கப்பட்டன.
இந்த போட்டியை சகோதரர் பஷீர் அலி அவர்கள் அழகிய முறையில் நடத்தினார்கள்..
இதில் முதல் பரிசை மாஸ்டர் சேகு ரய்யானும், ஹிபா மரியம் ஆகியோரும்
இரண்டாம் பரிசை மாஸ்டர் யூசுப் அவர்களும்
மூன்றாம் பரிசை மாஸ்டர் அன்வர் சயீத் அவர்களும் பெற்றார்கள்.
அது மட்டுமின்றி ... போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்றோருக்கு குலுக்கல் முறையில் பரிசளிப்பு:
அத்துடன் பொதுக்குழுவில் கலந்து சிறப்பித்த உறுபினருக்காக ஒரு சிறப்பு குலுக்கல் நடத்தி , அதில் வெற்றி பெற்ற ஐந்து சகோதரர்களுக்கும், மகளிர் அணியின் இரண்டு சகோதரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன..
கலகலப்பான போட்டிகள் முடிவு பெற்றதும், சிற்றுண்டி வழங்கப்பட்டு, மன்றத்தின் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் நன்றி உரை, துஆவுடன் 67 வது பொதுக்குழு இனிதே நிறைவுற்றது ... அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தன் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |