நடப்பாண்டு நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 25456 பேர் தேர்வெழுதுகின்றனர். காயல்பட்டினத்திலிருந்து மட்டும் 632 பேர் எழுதுகின்றனர். விரிவான விபரம் வருமாறு:-
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 26) துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 83 தேர்வு மையங்களில், 25456 மாணவ-மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க 166 உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புனித திருச்சிலுவை பெண்கள் மேனிலைப்பள்ளியில் மாணவியர் தேர்வெழுதுவதை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பார்வையிட்டார்.
காயல்பட்டினத்தில், எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்களில் மொத்தம் 608 மாணவ-மாணவியர் பின்வரும் விபரப்படி தேர்வெழுதுகின்றனர்:-
காயல்பட்டினத்திலிருந்து 292 மாணவர்கள், 316 மாணவியர் என மொத்தம் 608 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர். அவர்களுள் காயல்பட்டினம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 584 பேர் ஆவர்.
தொகுப்பு & படங்களில் உதவி:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - காயல்பட்டினம்
கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதிய மாணவ-மாணவியர் எண்ணிக்கை விபரம் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |