ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி இணைந்து, பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பை, வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் நடைபெற்று வந்தது. தற்போது முன்பதிவு நிறைவுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும் - செய்தி தொடர்பாளருமான ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK) மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்தும் 'மூன்றாவது முதலுதவி பயிற்சி வகுப்பு' (பெண்கள் மட்டும்), வருகின்ற ஏப்ரல் மாதம் 06ஆம் தேதி, துளிர் கேளரங்கத்தில், பகல் 02.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. (இன்ஷா அல்லாஹ்)
இந்த பயிற்சி வகுப்புக்கான முன்பதிவு கடந்த 13-03-2014 (வியாழக்கிழமை) முதல் தொடங்கியது. நமதூர் மக்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து, நிர்ணயக்கப்பட்ட இறுதி நாளான 31.03.2014 (திங்கள்கிழமை) முன்னதாக இந்த முன்பதிவு இன்று முதல் (27.03.2014 - வியாழக்கிழமை) நிறைவுபெறுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
எமது அடுத்த வகுப்பிற்கான விண்ணபங்களை தொடர்ந்து கீழ்க்காணும் கடைகளில் ஏப்ரல் மாதம் இறுதி வரை பெற்றுகொள்ளலாம் (பெண்கள் மற்றும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்).
1. கலாமி பேஷன்,
USC கால்பந்து வணிக வளாகம்,
காயல்பட்டினம்.
தொலைபேசி எண்: 284777
2. ஜாஸ்மின் பாரடைஸ்,
மெயின் ரோடு,
காயல்பட்டினம்.
தொலைபேசி எண்: 280345
3. LMS ஸ்டோர்ஸ்,
முஹ்யித்தீன் தெரு,
காயல்பட்டினம்.
தொலைபேசி எண்: 281463
4. MAZAYA மெடிகல்ஸ்,
சதுக்கை தெரு,
காயல்பட்டினம்.
தொலைபேசி எண்: 285770
எமது அடுத்த முதலுதவி பயிற்சி வகுப்பிற்கான இடம், தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு எங்களது மின்னஞ்சல் முகவரியில் - uk@kayalpatnam.org.ukதொடர்பு கொள்ளவும்
முதலுதவி கற்போம்... மனித உயிர் காப்போம்....
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |