காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
மார்ச் 23 ஞாயிறு ஓய்வு தினம். டெட்ராய்ட் நகரில் இந்திய குழுவினரின் - அமைப்புகளுடனான
சந்திப்புகள் - மார்ச் 24 (திங்கள்), மார்ச் 25 (செவ்வாய்) ஆகிய இரு தேதிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
மார்ச் 25 செவ்வாய் அன்று, குழுவினரின் முதல் நிகழ்ச்சி, ANTI-DEFAMATION LEAGUE (ADL) அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் - ADL அமைப்பின் மிசிகன் மண்டல இயக்குர் ஹெய்தி புதாஜ் மற்றும் மிசிகன் மாநில அரசு அதிகாரி மார்க் பிஷப் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ADL - 1913 ம் ஆண்டு துவக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு - யூதர்களுக்கு எதிராக பரப்பப்படும் கருத்துகளுக்கு பதில் கூற மற்றும் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கவும், அனைவரும் சரிசமமாக நடத்தப்படவும் உழைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பு என இவ்வமைப்பின் ஆவணங்கள் கூறுகிறது.
இந்த சந்திப்பில் ஹெய்தி புதாஜின் தலைப்பாக - பல்வேறு இனங்களுக்கு எதிராக துவேசங்களை பரப்பும் வகையில் பள்ளிக்கொட வகுப்பு பாடங்கள் இல்லாமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.
மார்க் பிஷப் - மாநில அரசு சார்பாக அவர் ஒருங்கிணைக்கும் MICHIGAN ALLIANCE AGAINST HATE CRIMES என்ற கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். இந்த சந்திப்பின் போது - ADL பிரதிநிதியுடன், பாலஸ்தீன் பிரச்சனை குறித்தும் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
மதிய உணவிற்கு பிறகு, குழுவினர் 1:30 மணியளவில் - டியர்பான்
ஹைட்ஸ் பகுதியில் உள்ள HYPE ATHLETICS COMMUNITY தொண்டு நிறுவனத்திற்கு
சென்றனர். HYPE ATHLETICS - 2001 இல் டெட்ராய்ட் பகுதியில் உள்ள வெயின் மற்றும் ஓக்லாந்து
மாகாணங்களில் உள்ள இளைஞர்களுக்கு - கூடைப்பந்து, கால்பந்து, அமெரிக்க கால்பந்து, டென்னிஸ், பேஸ் பால், வாலிபால் போன்ற
விளையாட்டு வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களுக்கு - கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் வழிகாட்டவும், போதை பழக்கம்
போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும் துவக்கப்பட்ட அமைப்பாகும்.
இவ்வமைப்பின் நிறுவனர் அலி சையதை - இந்திய குழுவினர் சந்தித்தனர். அலி சையத் - தனது 7வது வயதில் வேலை செய்ய துவங்கியவர்.
பாத்திரம் கழுவியும், சமையல் பணியையும் செய்து முன்னேறிய இவர், 1999ம் ஆண்டு - ஹோட்டல் ஒன்றினை விலைக்கு வாங்கினார்.
அந்த ஹோட்டல் மூலம் கிடைத்த வருவாயின் பெரும்பங்கையும், 2005இல் அந்த ஹோட்டலை விற்கும்போது பெற்ற லாபம் கொண்டும் - இந்த
தொண்டு நிறுவனத்தை வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலி சையத் - குழுவினருடன், தனது அனுபத்தை பகிர்ந்துக்கொண்டதோடு, இந்தியாவில் இது போன்று எவ்வாறு செயல்புரிவது என்றும்
ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த சந்திப்பின்போது - இவ்வமைப்பின் பலில் அமன் உடனிருந்தார்.
குழுவினரின் - மார்ச் 25 தேதிய மூன்றாவது நிகழ்ச்சி, Michigan Muslim Community Council (MMCC) அலுவலகத்தில் - மாலை 3:30
மணி முதல் 5:00 மணி வரை நடைபெற்றது.
Michigan Muslim Community Council (MMCC) அமைப்பு - 2012இல், COUNCIL OF ISLAMIC ORGANISATION OF MICHIGAN மற்றும் ISLAMIC
SHURA COUNCIL OF MICHIGAN என்ற இரு வெவ்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாகிய அமைப்பாகும்.
இந்த அமைப்பு - தனது
பிரதான குறிக்கோளாக, பல்வேறு பூர்வீகங்கள், சிந்தனைகள், கொள்கைகள் கொண்ட அமெரிக்க இஸ்லாமிய சமுதாயத்தை - ஒருங்கிணைத்து
செயல்புரிவதை எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் செயல் இயக்குனர் (EXECUTIVE DIRECTOR) தாவூத்
ஜ்வின்க் (Dawood Zwink) - சமுதாய சேவையில் தன்னை பல காலங்களாக ஈடுபடுத்திக்கொண்டவர். அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய
அமைப்புகளில் ஒன்றான ISLAMIC SOCIETY OF NORTH AMERICA வின் தலைவராகவும்
இவர் செயல்புரிந்துள்ளார்.
அமெரிக்காவில் இஸ்லாமிய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே இணக்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் தாவூத் ஜ்வின்க் - குழுவினரிடம் விளக்கினார்.
மார்ச் 25 தினத்தின் இறுதி நிகழ்ச்சி - Michigan Muslim Community Council (MMCC) அலுவலகத்திலேயே 5 மணி முதல் தொடர்ந்தது. இந்த
சந்திப்பில், மக்களின் பொது உரிமைகளுக்காக (Civil Liberties) வாதிடுபவரும், முஸ்லிம் மற்றும் அரபு - அமெரிக்க மக்களின்
பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவருமான டாக்டர் யஹ்யா பாஷா (Dr.Yahya Basha) கலந்துக்கொண்டார்.
டாக்டர் பாஷா - சிரியா நாட்டில் இருந்து, 1971ம் ஆண்டு அமெரிக்கா
வந்தவர். பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தப்பிறகு தனது சொந்த மருத்துவ நிறுவனம் ஒன்றை - 1980இல் BASHA DIAGNOSTICS என்ற பெயரில் இவர் துவக்கினார்.
அமெரிக்காவில் இஸ்லாமியர்கள்
உட்பட பல இன மக்களுக்கு தொண்டு நிறுவனங்களை நிறுவ உதவிப்புரிந்துள்ள இவர், அமெரிக்கா மீது செப்டம்பர் 11, 2001 நடந்த தாக்குதலுக்கு
பிறகு - அமெரிக்க அரசாங்கம், முஸ்லிம்களுக்கு தான் எதிரி அல்ல என தெரிவிக்க வெள்ளை மாளிகைக்கு அழைத்த 15 முக்கிய அமெரிக்கா -
வாழ் இஸ்லாமிய தலைவர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு, அமெரிக்கா அரசாங்கம் - அமெரிக்கா பற்றி உலக மக்களிடம் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க இவரை, தூதராக தேர்வு
செய்து - இவர் ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் செய்தார்.
இவருடன் - இந்திய குழுவினர், அவரின் அனுபவம் குறித்தும், அவரின் மருத்துவ பணி, இதர பொது சேவைகள் குறித்தும் - மாலை 6 மணி வரை
- கருத்து பரிமாறினர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அங்கிருந்து குழுவினர் மார்ச் 26 அன்று அமெரிக்காவின் வட மேற்கு மாநிலமான வாஷிங்டனில் உள்ள சியாட்டல் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டு
சென்றார்கள். சியாட்டல் நகரில் மார்ச் 30 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
டெட்ராய்ட் விமான நிலையத்தில் குழுவினர்...
சியாட்டல் நகரில் குழுவினர் - விமான நிலையத்தில் மற்றும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் நெருங்கிய உறவினர்
செய்யத் இஸ்மாயிலுடன்
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|