சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழமை. நடப்பாண்டின் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள திருமறை குர்ஆன் மனனப் போட்டியில் (ஹிஃப்ழுல் குர்ஆன்) முதலிடம் பெறுபவருக்கு இந்தியா சென்று வர விமான பயணச்சீட்டு பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகளின் வரிசையில், திருமறை குர்ஆன் மனன (ஹிஃப்ழுல் குர்ஆன்) போட்டியையும் நடத்தி, அதில் முதல் பரிசாக - தாயகம் (இந்தியா) சென்று வர இருவழி விமான பயணச்சீட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கவுள்ள - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் வருமாறு:-
எம்.எஸ்.அபுல் காஸிம். ஆஸாத் தெரு
எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன், அம்பல மரைக்காயர் தெரு
எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல், கி.மு.கச்சேரி தெரு
சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத், கொச்சியார் தெரு
கே.டி.ஷாஹுல் ஹமீத் பாதுஷா, குத்துக்கல் தெரு
எம்.செய்யித் அஹ்மத், ஸீ-கஸ்டம்ஸ் சாலை
எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், புதுக்கடைத் தெரு
எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, குத்துக்கல் தெரு
எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, நெய்னார் தெரு
எம்.எஸ்.தைக்கா ஸாஹிப், நெய்னார் தெரு
ஆகியோருடன், சிங்கப்பூருக்கு புதிதாக வந்துள்ள
எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன், மகுதூம் தெரு
எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக், ஆஸாத் தெரு
ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களின் மனனத் திறனை மேம்படுத்துவதற்காக – மன்றத்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு வகுப்புகளில் - போட்டியில் பங்கேற்பதற்கான ஆயத்தப் பணிகள் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஒருங்கிணைப்பில் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 10:37 / 26.03.2014] |