காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் மர்ஹூம் எம்.கே.டி.முஹம்மத் அபூபக்கரின் மருமகளார் ஹாஜ்ஜா வி.எஸ்.டி. அகமது ஆயிஷா, சஊதி அரபிய்யா - புனித மக்கா நகரில் உம்றா செய்துவிட்டு திரும்பியபோது, இம்மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 09.30 மணியளவில், ஜித்தாவில் காலமானார். அவருக்கு வயது 54.
அன்னார், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி என்பவரின் மகளும்,
ஹாஜி எம்.ஏ.அப்துல் ஹக் என்பவரின் மனைவியும்,
அபூபக்கர் தாரிக், ஸதக் ஷமீல், ஷகீல் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை என்பவரின் சகோதரியும்,
ஹாஜி வி.எம்.எஸ்.முஹ்யித்தீன், ஹாஜி வி.எம்.எஸ்.ஹல்லாஜ் ஆகியோரின் மருமகளுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நேற்று (மார்ச் 23) இஷா தொழுகைக்குப் பின், 21.00 மணியளவில் ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு: எம்.ஏ.கே.மொகுதூம்கண்டு (+91 97910 33488)
தகவல்:
V.D.சதக்கு தம்பி
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:25 / 25.03.2014] |