கொச்சியார் தெருவில், கழிவுநீர்த் தொட்டியை உடைத்து லாரி கவிழ்ந்தது. விபரம் வருமாறு:-
இம்மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையில், காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் ஒரு பகுதியில் நடைபெறும் கட்டிடப் பணிக்கான மணலை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாலையோரத்தில் மணலைக் கொட்டாமல் சந்து இடைவெளிக்குள் நுழைய முயற்சித்துள்ளது.
அப்பகுதியிலிருந்த ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டி மீது மணலுடன் லாரி சக்கரம் ஏறியபோது, பளு தாங்காமல் கழிவுநீர்த் தொட்டியின் மேல் மூடி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, லாரியின் இடது பின் சக்கரம் கழிவுநீர்த்தொட்டிக்குள் விழுந்து, வீட்டின் சுற்றுச்சுவர் மீது சரிந்து சாய்ந்து நின்றது.
19.30 மணியளவில் சரிந்த லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் தூக்கியகற்றி எடுத்துச் சென்றனர்.
எந்நேரமும் குழந்தைகள் விளையாடும் அப்பகுதியில், இந்நிகழ்வின்போது யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
படங்களுள் உதவி:
B.S.ஷாஹுல் ஹமீத் |